>

ad

Grama Niladhari கிரமசேவை அலுவலர் பதவி

கிரமசேவை அலுவர் பதவிக்காக விண்ணப்பிக்க இருப்பவர்களுக்காக


அறிமுகம்

இலங்கையில் கிராம சேவையாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் 2000 அளவில் காணப்படுவதுடன் அவ்வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு விட்டன . எனவே உயர் தரம் படித்துவிட்டு தொழில்களை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கு இந்த தொழிலைப் பெற்றுக்கொள்ள இதுவாய்ப்பாக அமைகின்றது. குறித்த பரீட்சையில் முறையாக சித்திடைவதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தகவல்களை இந்தப் பதிவு வழங்குகின்றது. 


விண்ணப்ப முடிவுத்திகதி 2021.06. 28


கிராம உத்தியோகத்தர் என்பவர் யார்?

கிராம அலுவலர் அல்லது கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari "village officer" எனப்படுபவர் கிராம சேவையாளர் பிரிவுகளில் நிர்வாக சேவைகளைச் செய்வதற்காக நியமிக்கப்படுகின்ற ஒருவராவார். கிராம சேவையாளரின் பணியாக புள்ளி விபரங்கள் திரட்டுதல், வாக்காளர் பதிவைப் பராமரித்தல், அனுமதி வழங்கலை அறிக்கையிடல், தனிநபர் சச்சரவுகளை சரி செய்து சமாதானத்தைப் பேணல் ஆகியனவாகும். இவர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை கண்கானிப்பதும், அங்குள்ளவர்களின் தேவையின் பொருட்டு அவர்களுக்கு நன்நடத்தை சான்றும் வழங்குவது இவர்களது பொறுப்பாகும்.


வயதெல்லை என்ன? 

 21 வயதுக்குக் குறையாலும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

கிராமசேவையாளருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்;-
 
சம்பளத்திட்டமாக  28,940.00 - 10x300 - 11 x 350 -10 x 560 - 10 x 660 - ரூா 47,990.00 என்பதாகக் குறிப்பிடப்படுள்ளது.  

ஆரம்ப சம்பளம் 28,940.00
வாழ்க்ைகச் செலவுக் கொடுப்பனவு 7800.00
வேறு கொடுப்பனவு 2500.00

என 39,240 மொத்த சம்பளமாகக் கிடைக்கப்பெறும். இதிலிருந்து ஓய்வூதியத்துக்காக 6% கழிக்கப்படும். 


என 37,440 மொத்த சம்பளமாகக் கிடைக்கப்பெறும். ,திலிருந்து ஓய்வூதியத்துக்காக 6% கழிக்கப்படும்.

கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்கைமைகள் என்ன?


(அ) கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் முதல் மொழியாக சிங்களம்/தமிழ் மொழி ஆகிய பாடங்களுள் ஒரு பாடத்தினையும், 
கணிதம் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது நான்கு (4) பாடங் களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (6) பாடங் களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் ;

அத்துடன்

 (ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (பொதுப் பரீட்சை  மற்றும் ஆங்கில மொழி தவிர)ஒரே அமர்வில்  சித்திபெற்றிருத்தல்.  பழைய பாடத்திட்டத்தின்  கீழ் மூன்று (3) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருப்பது போதுமானது.

தெரிவுமுறை எவ்வாறு இடம்பெறும்?

1)  எழுத்துமூலப் பரீட்சை ஒன்று நடாத்தப்படும். அந்த பரீட்சையில் ஒவ்வொரு பிரதேசசெயலக பிரிவுகளிலும் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை  ஒன்றிற்கு உட்படுத்ப்படுவார்கள். ஒவ்வொருபிரதேச செயலகப் பிரிவிலும் காணப்படுகின்ற வௌ்ளிடங்களில் இரண்டு மடங்கானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்டுவார்கள். 


இறுதியாக எழுத்துப் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் நேர்முகப்பரீட்சையின் புள்ளிகள் என்பவற்றின் கூட்டுத்தொயாக அத அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் பதவிகளுக்காக நியமனம் பெறுவார்கள்.


எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு 


01) மொழிப் பரீட்சை ;- இது மொழியாற்றலை பரிசோதிப்பதாக அமையும். க.பொ.த (சா/த) தமிழ்மொழி  புத்தகத்தில் உள்ள விடயங்களை மீட்டிப் பார்த்துக்கொள்வது போதுமானது. குறித்த வினாத்தாள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அமையும்.

இவ்வினாப்பத்திரம் விண்ணப்ப தாரர்களின் கருத்துத் தெரிவிப்பு, 
புரிந்துகொள்ளுதல், 
எழுத்துரு அமைப்பு, 
மொழியும் கட்டுரையும்,
வழங்கப்பட்ட கடிதமொன்றை வரைதல்,
 வழங்கப்பட்ட பந்தியொன்றை சுருக்குதல். 
வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி விபரங்களைத் தயாரித்தல், 
வாக்கியங்களசிலவற்றின் கருத்தைத் தனிவாக்கியத்தில் எழுதுதல், 
இலகுவான இலக்கணப் பயன்பாடு 

குறித்த  அறிவைப் பரிசீலனை செய்யும் வினாக்களைக் கொண்டது. சகல 
வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்.
 1 1/2 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.

 (02) பொதுஅறிவும் பொது உளசார்பும்; விண்ணப்பதாரரர்களின் கிரகித்தல் திறனையும் பொது அறிவுத்திறனையும் பரிசோதிப்பதற்காக பொது அறிவும் உளச்சார்பும் என்ற வினாத்தள் வழங்கப்படும்.

இவ்வினாப்பத்திரம் மூலம் 

நாட்டின் வரலாறு, பூகோல, சமூக பொருளாதார ரீதியில்  முக்கியமான தகவல்கள் மற்றும் உள்நாட்டு  வெளிநாடடு சமகாலத் தகவல்கள் பற்றிய பொது அறிவு,
எண்கணிப்பு,
 தர்க்கிக்கும் சக்தி,
 பிரச்சினைகளைத் தீர்த்தல்,
 தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றல் உட்பட  பொது அறிவை அளவிடும் வகையில் தயாரிக்கப்படும்  பல்தேர்வு மற்றும் சுருக்கமான விடைகளை வழங்கும்
மாதிரியிலான வினாக்ககளைக் கொண்டது. எல்லா  வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்.

 1 1/2 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.

03 . கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ;இங்கு கீழ்வரும் அடிப்படையில் புள்ளி வழங்கப்படும் 

 தலைமைத்துவம்             20
 விளையாட்டுத் திறமை 10
 மொழித்திறமைகள் (தாய்மொழி  தவிர்ந்த ஏனைய மொழித் திறமைகள்) 10
 கணினி அறிவு                 05
 நேர்முகப் பரீட்சையில் காண்பிக்  கப்பட்ட திறமைகள் 05

என மொத்தம் மொத்தம் 50

அரச நிறுவனங்கள் திணைக்களங்கள் என்பவற்றில் பெற்றுக்கொண்ட சான்றிதழ்கள் அல்லது கடிதங்கள் மாத்திரமே கவனத்திதில்கொள்ளப்படும்.  . உதாரணமாக அறநெறிப் பாடசாலை ஆசிரியர் ஒருவராகக் கடமையாற்றுதல், கிராம அபிவிருத்திச் சங்கமொன்றில் பதவி வகித்தல், விளையாட்டுக் கழகமொன்றில் பதவிகள் வகித்தல் போன்ற விடயங்கள் பிரதேச செயலாளரினால்
உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்

அத்துடன் கிராம அலுவலர்களுக்கு அரசியல் உரிமைகள் இல்லையாதலால் அரசியல் மட்டத்திலான அமைப்புகளில் பதவிகள் வகிப்பது தொடர்பாகப்
புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. உதாரணமாக பிரதேச சபைகள்/ நகர சபைகளின் உறுப்பினர்கள், கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்
போன்ற அரசியல் கட்சி பிரதிநிதித்துவத்தினால் பெறப்படும் பதவிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

நேர்முகப் பரீட்சையில் தெரிவானதன் பின்னரான செய்பாடுகள் யாவை?

நேர்முகப் பரீட்சையில் தெரவாகின்றவர்கள்ள மூன்று மாதகாலப் பயிற்சிப் பாடநெறி மாவட்டச் செயலாளரின் மேற்பார்வையின்கீழ் நடைபெறும். அப்பயிற்சிப் பாடநெறி வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கே நியமனம் வழங்கப்படும். பயிற்சிக் காலத்துக்காக 3,000 ரூபா கொடுப்பனவு மட்டும் வழங்கப்படுவதுடன், அக்காலத்தினுள் விடுமுறை உரித்துக்கள் இருக்காது. பயிற்சிநெறி நடைபெறும் நாட்களில் 80% பங்குபற்றுதல் வேண்டும். பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெறும் எழுத்துப் பரீட்சையில் சித்தியடைவதற்காக 50% புள்ளிகள் பெறப்படுதல் வேண்டும். பயிற்சிக்காலம்

சேவைக்காலத்துக்குக் கணிக்கப்பட மாட்டாதென்பதுடன்,  அக்காலம் ஓய்வூதிய விதிகளின் ஏற்பாடுகளுக்கமைய ஓய்வூதியக் கணிப்புக்காக மட்டும் தொடர்புபடுத்தப்படும்..


இறுதியாக.

அரசாங்க பதவிகளைப் பொறுத்தவறையில்  ஆரம்ப மட்டப் பதவிகள்தான் அரசாங்க சேவையில் கால் பதிப்பதற்கான சிறந்த தெரிகாவும். இந்த சேவையில் இணைகின்ற ஒருவர் 5 வருட சேவைக்காலத்துடன் ஒரு பட்டத்தையும் பெற்றுக் கொண்டிருப்பாரானால் அவரால் இலங்கை நிர்வாக சேவை இலங்கை காணக்காளர் சேவை இலங்கை திட்டமிடல் சேவை என்ற பதவிகளுக்கான பரீட்சைகளுக்கு தோற்றலாம். அவ்வாறு பரீட்சைகளுக்குத் தோற்றி தற்போது பிரதேச செயலாளர்களாக பதவிவகிப்பவர்களும் இருக்கின்றனர்.  இந்த சந்தர்ப்பத்தை ஒருவாய்ப்பாக பயன்படுத்தி பரீட்சைகக்கான ஆயத்தங்களை இப்போதே ஆரம்பியுங்கள். 
நன்றி.
Lankajobinfo.com.

    எமது  முகநூல் குழுமம்

.f   www.facebook.com/LankaJobinfocom-157301272736519

எ