>

ad

அரச உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழித் தேர்ச்சி


 
அரச மொழிக் கொள்கை என்பது 2007.07.01 ஆம் திகதி முதல் அரச நிர்வாக சுற்றிக்கை இலக்கம்  7/2007 ஊடாக அமுல்படுத்தப்பட்டது என்பதனை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

குறித்த சுற்றுநிருபத்தின் அடிப்படையில் 2007.07.01 ஆம் திகதி முதல் அரசாங்க சேவையில் /மாகாண அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்படும் அல்லது பதவி உயர்வு பெறுகின்ற உத்தியோகத்தர்கள் அனைவரும் சேவையில் இணைந்துகொள்கின்ற அரசகரும மொழிக்கு மேலதிகமாக மற்றைய அரசகரும மொழிக்கான தேர்ச்சியை சேவையில் சேர்ந்து 5 வருடங்களுக்குள் தேர்ச்சி பெறுதல் வேண்டும் என்பதாக குறிப்பிடப்டப்பட்டுள்ளது. 

அரச கரும மெழிகள் என்பது யாது?


சிங்களம் மற்றும் தமிழ் என்பன இலங்கையில் அரச கரும மொழியாக காணப்படுகின்றது. யாரேனும் ஒருவர் தமிழ் மொழி மூலம் சேவையில் இணைந்துகொள்வார்களாயின் அவர் சேவையில் இணைந்துகொண்ட மொழி அல்லாத அடுத்த மொழியான சிங்கள மொழியானது அவருக்கான அடுத்த மொழுயாகும். எனவே அவர் சிங்கள மொழிக்கான தேர்ச்சியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆங்கில மொழி ஊடாக யாரேனும் சேவையில் இணைந்துகொண்டால் அவருக்கான அரச கரும மொழி யாது?


 இவ்வாறானவர்கள் தனது தாய்மொழித் தேர்ச்சி, அடுத்த மொழித் தேர்ச்சி என இரண்டையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • நியமனம் பெறுவதற்கு முன்னர்  க.பொ.த (சா/த) பரீட்சையில் தாய்மொழியும் இலக்கணமும் எனும் பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
  • நியமனம் பெற்று 3 வருட காலங்களுக்குள் க.பொ.த (சா/த) மேற்படி பாடத்தில் சித்தியடைய வேண்டும்
  • அல்லது அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற சான்றிதழ் பாடநெறி\யைப் பயில்தல்
என்பனமூலமாக இந்த தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ளலாம்.


 அத்துடன் அடுத்த மொழித் தேர்சியையும் அவர்கள் 5 வருட காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். 

அரச கரும மொழித் தேர்ச்சியை பெறுவதற்காக இதுவரை காலமும் இருந்துவந்த நடைமுறைகள்.

ஆரம்ப காலங்களில் இந்த தகைமையைப் பெற்றுக்கொள்வதற்காக அரச மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற பரீட்சைக்குத் தோற்றி சித்தியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையே காணப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பரீட்சைக்கு சமமான இன்னுமொரு பரீட்சை முறையினை அறிமுகப்படுத்துமாறு கேட்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில் க.பொ.த (சா/த) பரீட்சையின் இரண்டாம் மொழியில் சித்தியடைவதானது இந்தப் பரீட்சையின் எழுத்துப் பரீட்சைக்கு சமமானது என்பதுடன் அந்தப் பரீட்சையில் சித்திபெறுகின்றவர்கள் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற செவிமடுத்தல் மற்றும் வாய்மொழி பரீட்சைக்காக விண்ணப்பிக்கலாம் என்பதாக மாற்றியமைக்கப்பட்டது. 


தற்போது காணப்படுகின்ற புதிய நடைமுறை


2020.10.16 ஆம் திகதி   2020.10.16 ஆம் திகதி வௌயிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை 18/2020 இன் ஊடாக மேற்படி பரீட்சை முறைக்குப் பதிலாக குறிப்பிட்ட மணித்தியாலங்களைக் கொண்ட பாடநெறியினைப் பூர்த்தி செய்வதன் ஊடாக இந்த தகைமையைப் பூர்த்திசெய்யலாம் என்பதாக மாற்றியமைக்கப்பட்டது. 

அதற்கமைய கீழ்வரும் அடிப்படையில் உத்தியோகத்தர்கள் தங்களது வகுதிகளின் அடிப்படையில் குறித்த மணித்தியாலயங்களைப் பூரணப்படுத்த வேண்டும்.


ஆரம்ப நிலை உத்தியோகத்தர்களுக்கு  100 மணித்தியாலம்
இரண்டாம் நிலை உத்தியோகத்தர்களுக்கு  150 மணித்தியாலம்
மூன்றாம் நிலை /சிரேஸ்ட நிலை உத்தியோகத்தர்களுக்கு  200 மணித்தியாலம்


இங்கு ஆரம்ப மட்டம் எனப்படுவது கரியாலய உதியாளர்கள், சாரதிகள் போன்ற தரங்களில் இருக்கின்றவர்களைக் குறிக்கும்.

இரண்டாவது மட்டம் என்பது ஆசிரியர்கள், முகாமை உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றவர்களைக் குறிக்கும்

 மூன்றாம் நிலை மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என்போர் தங்களது சம்பளத்திலிருந்து 7%  W&op குறைக்கப்படுபவர்களாவர். அதிபர்கள், நிர்வாக உத்தியோத்தர்கள் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் இதில் அடங்குவர்.

வகுதிகளுக்கு அமைய பதவிகள் குறித்த விபரம் கீழே தரப்படுகின்றது. 


தற்போதைய சுற்றுநிருபத்தின் பிரகாரம் இந்தப் பாடநெறியை தொடர அவசியமில்லாதவர்கள் யார்.


முன்னர் வௌியடப்பட்ட சுற்றுநிருபங்களுக்கு அமை தகைமையைப் பூர்த்தி செய்துள்ளவர்கள் இந்த பாடநெறியினை தொடர்வது அவசியமில்லை. அதாவது இதற்கு முன்னர் அரச கரும மொழித் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற பரீட்சைகளுக்குத் தோற்றி சித்தி பெற்றவர்கள் இந்த பாடநெறியில் பங்குபற்றத் தோவையில்லை.

அரச ஊழியர்கள் NLQ பரீட்சையில் சித்தியடைவார்களானால் அவர்கள் பெறுகின்ற புள்ளிகளுக்கு அமைய 25000 ரூபா, 20,000 ரூபா, 15,000 ரூபா என கொடுப்பனவென்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன் ஒரு சம்பளப் படியேற்றம் மாதாந்தம் வழங்கப்படும்.
NLQ பரீட்சை என்றால் என்ன? அந்தப்பரீட்சையின் உள்ளடக்கம் என்ன? பரீட்சைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? பரீட்சை குறித்த சுற்றநிருபங்கள் போன்ற விபரங்கள் இந்தப்பதிவில் அடங்கியிருக்கின்றது.

தற்போதைய சுற்றுநிருபத்தின் பிரகாரம்  இந்த தகைமையினைப் பெற வேண்டியவர்கள் யார்?


2007.07.01 ஆந் திகதி முதல் 2020.10.16 ஆம் திகதி வரையில் திறந்த அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் புதிய பதவிக்குச் சேர்த்துக் கொள்ளளப்பட்டுள்ளவர்களில் இதுவரையில்  ஏனைய அரச கரும மொழித்தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ளாத அனைவரும்  2020.10.05 ஆம் திகதியிலிருந்து 3 வருடங்களுக்குள் இந்த தகைமையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் 

உரிய காலத்தில் அரச கரும மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக்கொனள்ளாதவர்களின் நிலை என்ன?

உரிய காலப்பகுதிக்குள் இரண்டாம் மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக்கொள்ளாதவர்களின் சம்பள ஏற்றம் குறித்த தகைமையினைப் பூர்த்தி செய்யும் வரையில் நிறுத்திவைக்கப்படும். 

பாடநெறிக்கான நிபந்தனைகள்


01எழுத்து மற்றும் வாய்பமாழி மூலம் ஆகிய இரு பகுதிகள் உள்ளடங்குதல் வேண்டும், 
02. தேர்ச்சியினை அளவிடுவதற்கான முறைகள் இருக்க வேண்டும்.
03, வரவு 80% இருத்தல் வேண்டும்.

 பாடநெறிகள் யாரால் நடாத்தப்படும்.

இந்த பாடநெறிகளை நடாத்தும் பொறுப்பு அரச கரும மொழிகள் திணைக்களத்தையே சார்ந்திருக்கின்றது. எனவே எதிர்காலத்தில் இந்தப் பாடநெறிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது குறித்து அரச மொழிகள் திணைக்களம் சுற்றுநிருபம் ஊடாக அறியத்தரும். 

தனியார் நிறுவனங்களில் இந்த பாடநெறி பயில்வதால் மேற்படி தேர்ச்சியினைப் பெற்றுக்கொள்ள முடியுமா?

இது குறித்த எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை 


 பாடநெறிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? 

இந்தப் பாடநெறிகளுக்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் பணி தற்போது அரச கரும மொழித் திணைக்களத்தினால மேற்கொள்ளப்படுகின்றன. அதன் பின்னர் பாடநெறிகள் ஆரமப்பிக்கப்படும்.