>

ad

Admission to Teacher Training Colleges 2022/2023

ஆசிரியர் கல்லூரிகளில் ஆசியர்களுக்கான இரண்டுவருட பயிற்சிநெறி 

விண்ணப்ப முடிவுத் திகதி 2022. 07. 11 

2022/2023 பயிற்றி நெறி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.


ஆசிரியர் கல்லூரிகளில் ஆசியர்களுக்கான இரண்டு வருட பயிற்சிநெறி ஆரம்பிக்கவிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்திருக்கின்றது. இந்த இரண்டுவருட டிப்லோமா என்றால் என்ன என்பதனை  இந்தப்பதிவு விளக்குகின்றது.

இந்தப் பயிற்சிநெறிக்காக க.பொ.த. (உ/த) வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவதா?


இல்லை. க.பொ.த உயர் தரத்தின் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் கல்வியில் கல்லூரிக்கே ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இது ஆசியரியர் கல்லூரியாகும் இங்கு வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.

இந்தப் பாடநெறி யாருக்காக

இலங்கை ஆசிரியர் சேவைக்காக க.பொ.த (உ/த) சித்தியடைந்தவர்கள் தெரிவு செய்யப்படுவதுண்டு.  அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் ஆசிரியர்  சேவையின் 3ii எனும்தரத்தில் நியமனம்வழங்கபடும். அத்துடன் HND அல்லது   NVQ தகைமையிடையவர்கள் ஆசிரியர்  சேவையின் 3i (இ)  எனும் தரத்தில் நியமிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு பிரிவினருக்கும் தமது அடுத்த தரங்களுக்குசெல்வதற்கு அவசியமான தகைமையினைப்  பெற்றுக்கொள்வதற்காக இந்தப் பயிற்சிநெறி நடாத்தப்படுகின்றது. 

இந்தப் பாடநெறியின் முக்கியத்துவம் யாது?

மேலே குறிப்பிடப்பட்ட ஆசிரியர்  சேவையின் 3ii , 3i (இ)  ஆகிய தரங்களில் நியமனம் பெற்றவர்கள் தமது அடுத்த தரங்களுக்கு செல்ல வேண்டுமாயின்

01. பட்டம் ஒன்றினைப் பெற வேண்டும் 

அல்லது 

02ஆசிரியர் பயிற்சியைப் பெறவேண்டும். 

இந்த இரண்டு தகைமைகளில் ஒன்றையேனும் பெறாதவிடத்து அவர்கள் அந்தத் தரத்திலிருந்து எந்தவிதமான பதவி உயர்வுகளைம் பெறமாட்டார்கள். சுமார் 10 வருடங்கள்   சம்பள உயர்வு வழங்கப்படுவதுடன் குறித்த தரத்திற்கான உச்ச சம்பளத்தை அமையும் போது  அதன் பின்னர் அவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெறாது. 

எனவே தமது தொழிலில் அடுத்த தரத்திற்கு உயர்வதற்காகவும் சம்பள ஏற்றங்களை தொடராக பெறுவதற்காகவும் இந்த பாடநெறி உதவுகின்றது.

இந்தப் பாடநெறிக்கான காலம் என்ன?


2 வருடங்கள்







பதிவுக்கு சமர்ப்பிக்கவேண்டி ஆவணங்கள் என்ன?


01. பயிற்சிக்கு செல்கின்றவர்கள் பிணை முறியொன்றினை சமர்ப்பிக்க வேண்டும். 

(௮) பூரணப்படுத்தப்பட்ட பிணை முறி;-

இந்தப் பயிற்சி நெறியானது ஆசிரியர்களுக்கான சம்பளத்துடன் நடாத்தப்படுகின்றது. அத்துடன் அதற்கான செலவுகளை அரசுஅல்லது குறித்த தனியார் பாடசாலை ஏற்கின்றது. எனவே இடையில் விலகிக்கொள்ளலாமல் இருப்பதற்கான உறுதிமொழிஇந்தப் பிணையின் ஊடாகப் பெறப்படுவதுடன் அவ்வாறு விலகிக்கொள்ளும் போது செலுத்த வேண்டிய தொகை குறித்து இந்தப் பிணையில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

ஆ) உடன்படிக்கையின் பிரதி
மேலே (அ) வில் குறிப்பிடப்பட்டது போன்று செலவுகளை அரசு அல்லது குறித்த தனியார் ஏற்பதனால் சிரியர்‌ கல்விப்‌ பாடநெறியினைப்‌ பூர்த்தி செய்ததன்‌ பின்னர்‌ நியமிக்கப்படும்‌ பாடசாலைகளின்‌ (அரச ஆசிரியர்கள்‌, அரச பாடசாலைகளில்‌ மற்றும்‌ அரசு அல்லாத ஆசிரியர்கள்‌ உரிய நிருவாக சபையின்‌ கீழ்‌) தொடர்ச்சியாக 5 வருடங்கள்‌ சேவையாற்றியதாக அரசு அல்லது நிருவாக சபையுடன்‌ ஒரு உடன்படிக்கையினை ஏற்படுத்திக்கொண்டு அதனது பிரதி சமர்ப்பிக்கப்படவேண்டும்.

இந்தப் பாடநெறியின் நிபந்தனைகள் யாவை. 


1. பாடநெறியின் முடிவில் முன்னர் கடமையாற்றிய பாடசாலை அல்லது வலயக்காரியாலத்தினால் குறிப்பிடுகின்ற பாடசாலையில் கடமைக்கு செல்ல வேண்டும்.
2. பாடநெறியிலிருந்து இடையில் விலக முடியாது. அவ்வாறு விலகுவதாயினி் விசேட அனுமதி பெறப்படவேண்டும். அவ்வறு விலகும் போது குறித்த ஆசியரியருக்காக அரசாங்கம் மேற்கொண்ட செலவினை மதிப்பீடு செய்து அறவிடப்படும்.

3. பாடநெறியில் இணைவதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பதாக கண்டறியப்படுமாயன் பயிற்சியிலிருந்து நீக்கப்படுவார். பயிற்சி முடிந்த பின்னர் கண்டறியப்படுமாயின் சான்றிதழ் இர்துச்செய்யப்படும்.
4. இறுதிப் பரீட்சைக்குத் தகுதிபெற80% வரவு இருக்கவேண்டும்.

.


பாடநெறியின் போது விடுமுறை பெற முடியுமா?


(அ) ஒரு வருடத்துக்கு10 நாட்கள் தாண்டாத வித்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக விடுமுறை பெறலாம்.
(ஆ) வைத்திய விடுமுறைறபளாயின் உரிய வைத்திய சான்றிதழ்சமர்ப்பிக்க வேண்டும்





எந்தப் பாடங்களுக்காக விண்ணப்பிக்கலாம்?




பயிற்சி வழங்கப்படும்‌ பாடநெறிகள்‌ என்ன?


‌01 சிங்களம்‌
02 ஆரம்பக்‌ கல்வி
03 சமூக விஞ்ஞானம்‌
04 விஞ்ஞானம்‌
05 கணிதம்‌
06 விவசாய விஞ்ஞானம்‌
07 மனைக்‌ கல்வி
08 ஆங்கிலம்‌
09. பெளத்த சமயம்‌
10 கிறிஸ்தவ/ ரோமன்‌ கத்தோலிக்க சமயம்‌
11 இந்து சமயம்‌
12 இஸ்லாம்‌
13 சித்திரம்‌
14 சங்கீதம்‌
15 நடனம்‌
16 அரபு
 17 விசேட கல்வி
 18 கைத்தறி கைத்தொழில்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌
19. வர்த்தகம்‌
20 தமிழ்‌
21 உடற்கல்வி
22 இரண்டாம்‌ மொழி (சிங்களம்‌/ தமிழ்‌)
23 தகவல்‌ தொழில்நுட்பம
24 ஆலோசனை
25 நூலக விஞ்ஞானம்‌


இவை தவிற மேலதிக விபரங்களை கீழ் குறிப்பிடப்படுகின்ற இணைப்புக்களில் கிளிக் செய்து பார்வையிடலாம். 2021 ஆண்டு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் இணைக்கப்பட்டுள்ளது. திகதி கள் மாத்திரம் மாற்றம் பெறும்.


இது தொடர்பாக 28/2016 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு திதிகள் மாத்திரம் வேறுபடும். விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.