2021 / 2022 கல்வியாண்டுக்கான கல்வி முதுமாணி பட்ட நிகழ்ச்சித் திட்டதிற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
மேற்கண்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கான விண்ணப்படிவங்கள் 03.10.2021. இலிருந்து 02.11.2021 வரை ஏற்றுகொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சிதிட்டமானது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பிராந்திய நிலையங்களில் மட்டும் நடத்தப்படும். குறித்த நிலையங்களுக்கான உத்தேச மாணவர் தொகை கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளது
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நுழைவுத் தகைமைகளைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகள், 21.11.2021 இல் நடாத்தப்படும் தெரிவுப் பரிட்சைக்கு தோற்றுதல் வேண்டும். தெரிவுப் பரிட்சையில் சித்தி பெற்ற விண்ணப்பதாரிகள் நிகழ்ச்சித்திட்டத்தில் அனுமதிக்க முன்னர் நேர்முகப் பரிட்சைக்கும் சமூகமளிக்க வேண்டும்.
குறிப்பு: நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முன்னர் தமது தகைமைகளை நுழைவுத் தகமைகளுடன் சரிபார்த்துக்கொள்ளுவது விண்ணப்பதாரிகளின் பொறுப்பு ஆகும். தெரிவுப் பரிட்சையில் சித்தி பெற்றமையானது நிகழ்ச்சித்திட்டதுக்கான அனுமதியாக கருத்திற் கொள்ளப்படமாட்டது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனுமதி தகைமைகளை கொண்டிராதவர்கள், நேர்முகப் பரீட்சையின் போது நிராகரிக்கப்படுவர்)
கட்டண விபரம்
Application Fee – Rs. 1,050/=
Registration Fee – Rs. 1,000/=
Facility Fee – Rs. 1,500/=
Library Facility Fee – Rs. Rs. 200/=
Examination Fee – Rs. 6,500/=
Tuition Fee – Rs. 90,000/= (Pay in two installments)
நுழைவுத் தகைமைகள்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அல்லது வேறு அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தின் கல்வியியலில் இளமாணி பட்டத்துடன்
1.1 குறைந்தது GPA 2.7 உடனான சித்தி, அல்லது
1.2 குறைந்தது இரண்டாம் வகுப்பு (கீழ் நிலை ) மட்ட சித்தியுடன் மற்றும்
1.3 பின்வரும் பாடங்களில் அல்லது அதற்கு நிகரான பாடங்களில் B சித்தியையும் கொண்டிருத்தல் வேண்டும்: கல்வி உளவியல், கல்வியின் அடிப்படைகள், மற்றும் கல்வி அளவீடும் மதிப்பீடும்,
அல்லது
02. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அல்லது வேறு அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்ட மேற் கல்வி டிப்ளோமா அல்லது விசேட கல்வியில் பட்ட மேற் கல்வி டிப்ளோமாவில் சித்தி பெற்றிருப்பதுடன்
2.1 குறைந்தது GPA 2.7 உடனான சித்தி, அல்லது
2.2 திறமை சித்தி(Merit pass) அல்லது அதி திறமை சித்தியை (Distinction pass) கொண்டிருத்தலுடன் மற்றும்
2.3 பின்வரும் பாடங்களில் அல்லது அதற்கு நிகரான பாடங்களில் B சித்தியையும் கொண்டிருத்தல் வேண்டும்: கல்வி உளவியல், கல்வியின் அடிப்படைகள், மற்றும் கல்வி அளவீடும் மதிப்பீடும், அல்லது
பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சமனான தகைமையைப் பெற்றிருத்தல்.
விண்ணப்ப விதிமுறைகள்
தேர்வுக்கான அனைத்து விதிமுறைகளும் பதிவுத் திகதிக்கு முன்னர் குறித்த பாடநெறி சார்பாக விண்ணபதாரியினால் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். அத்துடன் தெரிவுப் பரீட்சைக்கு தோற்றவேண்டும். விண்ணப்பப் படிவம் இணையத்தளத்தில் மட்டுமே பெற்றுகொள்ளலாம.
https://ums.omis.site என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து நிகழ்நிலை (online)மூலம் விண்ணப்பிக்கவும்.
விபரங்களைப் பதிவிற்க்கம் செய்ய Click here
விண்ணப்பக் கட்டணம் 1050/-03.10.2021 திகதியிலிருந்து 02.11.2021 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்விண்ணப்ப முடிவு திகதி – 02.11.2021
நிகழ்நிலை (online)மூலம் விண்ணப்பக் கட்டணம் பற்று /கடன் ((debit / credit) ) அட்டை மூலம் செய்யப்படலாம். நிகழ்நிலை ((online) விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
நிகழ்நிலை விண்ணப்ப செயல்முறைகளுக்கான உதவி தேவைப்படும் விண்ணப்பதாரிகள் கீழே குறிப்பிடப்பட்ட பிராந்திய நிலையங்களில் ஒன்றுக்கு பின்வரும் தேவையான தகவல்களுடன் விஜயம் செய்யவும்.
தேவையான தகவல்கள் :
விண்ணப்பதாரியின் முகவரியுடன் கூடிய முழுப்பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், மின்னஞ்சல் முகவரி, கையடக்கத் தொலைபேசி இலக்கம்,
பின்வரும் பிராந்திய நிலையங்களுள் ஏதாவதொன்றுக்கு வருவழி விண்ணப்ப விதிமுறைகளுக்கான உதவியைப் பெற விஜயம் செய்யவும். கொழும்பு (நாவல), அனுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கண்டி (பொல்கொல்ல), மாத்தறை (நுபே), பதுளை, குருநாகல், அம்பாறை, பண்டாரவளை, கம்பஹா, காலி, அம்பலாந்தோட்லட, ஹட்டன், திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, களுத்துறை, கேகாலை, மொனராகலை, பொலன்னறுவை, புத்தளம், இரத்தினபுரி, மன்னார், குளியாபிட்டிய, அம்பலாங்கொடை, மாத்தளை மற்றும் வவுனியா மேலதிக விபரங்களுக்கு https://ou.ac.lk/medu/ என்ற எங்கள் இணையத்தளத்திற்கு விஜயம் செய்து நிகழ்ச்சித்திட்ட வழிகாட்டியை
பதிவிறக்கம் (download) செய்து பெற்றுக்கொள்க
கல்வி நடவடிக்கைகள்
அனைத்து கல்வி நடவடிக்கைகளும் கொழும்பு பிராந்திய நிலையத்தில் ஆங்கிலம், சிங்களம் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும், கண்டி பிராந்திய நிலையத்தில் சிங்கள மொழியிலும், யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தில் தமிழ் மொழியிலும் நடத்தப்படும்.
தெரிவுப் பரீட்சை
• அனைத்து விண்ணப்பதாரிகளும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத் தால் நடத்தப்படும் நிகழ்நிலை அடிப்படையிலான தெரிவுப் பரீட்சைக்கு தோற்றுதல் வேண்டும்.
• நிகழ்நிலை அடிப்படையிலான தெரிவுப் பரீட்சை 21.11.2021 ஆம் திகதி நடத்தப்படும்.
• நிகழ்நிலை தெரிவு பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்கள் விண்ணப்பத்தில் நீங்கள் வழங்கிய உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
• எனவே, விண்ணப்பபடிவத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெளிவாக குறிப்பிடவும்
மேலதிக விபரங்களுக்கு
• எல்லா நாட்களிலும் மு.ப. 9.00 மணியிலிருந்து பி;.ப. 3.00 வரை - பொது தகவல் காரியாலயம் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் நாவல, நுகேகொட மற்றைய எல்லா நிலையங்களிலும் மு.ப. 9.00 மணியிலிருந்து பி;.ப. 3.00 வரை (ஞாயிற்றுக் கிழமை, திங்கட்கிழமை, மற்றும் பொது விடுமுறைகள் தவிர்ந்த எல்லா நாட்களிலும்) நீங்கள் விஜயம் செய்யலாம்.
பொது தகவல் அலுவலகம் 0112881327/256
• தலைவர் / இடைநிலை, மூன்றாம் நிலை கல்வித்துறை : 011 2 881425/ hdste@ou.a.clk
• ஒருங்கிணைப்பாளர் ஃ கல்வி முதுமாணி பட்ட நிகழ்ச்சித்திட்டம் 0112881389/ fmnaw@ou.ac.lk