படைப்பாற்றல் மிக்க ஆசிரியர்களுக்கான அழைப்பு
தொலைக் கல்விக்குரிய இகற்றல் உள்ளடக்கங்களை தயாரித்தல் மற்றும் முன்வைத்தலுக்காக அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்ட தேசிய மட்டத்திலான விடயம் சார் வளவாளர் குழாம் ஒன்றினை நிறுவுதல்.
அமைச்சரவை அனுமதியுடன் நடைமுறையிலுள்ள தொலைக்கல்வி மேம்பாட்டு விடயத்தின் கீழ் “குருகுலம்" கால்வி நிகழ்ச்சி, "E தக்சலாவ" கற்றல் உள்ளடக்க முகாமைத்துவ முறைமை மற்றும் வானொலிக் கல்வி நிகழ்ச்சிகளுக்கான சகல பாடங்களுக்குமுரிய கானொளி விரிவுரைகளைத் தயாரித்தல் மற்றும் தரம் 1 முதல் தரம் 13 வரை சகல வகுப்பினருக்குமான பாட உள்ளடக்கங்களை தயாரித்தல் மற்றும் முன்வைத்தலுக்கான வளப் பங்களிப்பை வழங்கக்கூடிய அரச பாடசாலைகளில் பணியாற்றும் உரிய பாடங்களில் நிபுணத்துவம் மிக்க வளவாளர்களான ஆசிரியர்களைக் கொண்ட தேசிய மட்டத்திலான வாவாளர் குழாம் ஒன்றினை நிறுவுவதற்கு கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் விண்ணப்பப்படிவங்கள் கோரப்பட்டுள்ளன.
உரிய வளவாளர்களால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் மேற்கொள்ளப்பட எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விகர்ணப்பப்படிவங்களை பூரணப்படுத்தி வழங்கப்பட்டுள்ள உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் வேண்டும்.
(A தரம் 1 முதல் நரம் 13 வரை தொலைக்காட்சி அல்லது ONLINE ஊடாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலமாகவும் ஆங்கில மொழிமூலமாகவும் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான உள்ளடக்கங்களை தயாரித்தல்.
இது இரண்டு பகுதிகளைக் கொண்டது
1. திரை வசனப் பிரதி எழுதுதல்
2. முன்வைத்தல்
ஆசிரியர்களை தெரிவுசெய்வதற்கான விதிமுறைகள்
- தயாரிக்க எதிர்பார்க்கும் பாடத்துக்குரிய அரச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் உரிய பாடத்தில் நிபுணத்துவம் மிக்க ஆசிரியர் ஒருவராக இருத்தல். - பட்டதாரி அல்லது கல்வியியல் கல்லூரி அல்லது ஆசிரியர் பயிற்சி பெற்று நியமனம் பெற்ற ஆசிரியராக இருத்தல் (உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
- காணொளியூடாக பாடங்களை முன்வைக்கும் திறமை கொண்டிருத்தல். இதற்கு முன்னர் கானெகாளியூடாக கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பின் அதனை உறுதிப்படுத்தக்கூடிய காணொளி பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.
- திரை வசனப் பிரதி எழுதுதல் தொடர்பான திறமையை உறுதிப்படுத்தல் வேண்டும்.
- முன்வைப்புத் திறன் (சநளநவெயவழைய ஹமடைடள) கொண்டவராக இருத்தல் தங்களால் தயாரிக்கப்பட்ட பாடமொன்றுக்கு ஆறு நிமிட முன்வைப்பு ஒன்றை முன்வைத்தல் வேண்டும்.
- தேசிய மட்ட விடயம் சார் மற்றும் இ-கற்றல் செயற்பாடுகளுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு மேலதிக தகமையாக கருத்தில் கொள்ளப்படும்.
(B* தக்சலாவ" கற்றல் உள்ளடக்க முகாமைத்துவ முறைமைக்கு விடயம் சார் பாட கற்றல்
உள்ளடக்கங்களை தயாரிப்பதற்காக தரம் 1 முதல் தரம் 13 வரையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிமூலங்கள் உள்ளடங்களாக சகல பாடங்களும் உள்ளடங்கக்கூடிய வகையில் பாட உள்ளடக்கங்களைத் தயாரித்தல்,
இது இரண்டு பகுதிகளைக் கொண்டது.
1. போதனாலியல் வடிவமைப்பு (Instructional design)
11. உள்ளடக்கங்களைத் தயாரித்தல்
ஆசிரியர்களை தெரிவுசெய்வதற்கான விதிமுறைகள்
- தயாரிக்க எதிர்பார்க்கும் பாடத்துக்குரிய அரச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் உரிய பாடத்தில் நிபுணத்துவம் மிக்க ஆசிரியர் ஒருவராக இருத்தல். பட்டதாரி அல்லது கல்வியியல் கல்லூரி அல்லது ஆசிரியர் பயிற்சி பெற்று நியமனம் பெற்ற ஆசிரியராக இருத்தல் (உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
- இயங்குபட (யைெசயவழை) தயாரிப்பு திறமை கொண்டிருத்தல் மேலதிக தகமையாக கருத்தில் கொள்ளப்படும்.
தேசிய மட்ட பரீட்சைகளில் பரீட்சகராக பணியாற்றியிருத்தல் மேலதிக தகமை ஒன்றாக கருத்தில் கொள்ளப்படும்.
C - தக்சலாவ" கற்றல் உள்ளடக்க முகாமைத்துவ முறையில் பதிவேற்றுவதற்காக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி மூலங்களிலும் சகல பாடங்களும் உள்ளடங்கக்கூடிய வகையில் வினா வங்கி ஒன்றை தயாரித்தல் மற்றும் வினாப்பத்திரங்களைத் தயாரித்தல்.
ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விதிமுறைகள்
- தயாரிக்க எதிர்பார்க்கும் பாடத்துக்குரிய அரச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் உரிய பாடத்தில் நிபுணத்துவம் மிக்க ஆசிரியர் ஒருவராக இருத்தல். - பட்டதாரி அல்லது கல்வியியல் கல்லூரி அல்லது ஆசிரியர் பயிற்சி பெற்று நியமனம் பெற்ற ஆசிரியராக இருத்தல் (உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்).
- தேசிய மட்ட பரீட்சைகளில் பரீட்சகராக பணியாற்றியிருத்தல் மேலதிக தகைமை ஒன்றாக கருத்தின் கொள்ளப்படும்.
- தேசிய மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் பாடம் சார் மற்றும் இ-கற்றல் செயற்பாடுகளில் பங்களிப்புச் செய்திருப்பின் மேலதிக தகைமையாக அவை கருத்தின் கொள்ளப்படும்.
D தக்சலாவ" கற்றல் உள்ளடக்க முகாமைத்துவ முறைமைக்கான மென்பொருள் தயாரிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
ஆசிரியர்களை தெரிவுசெய்வதற்கான விதிமுறைகள்
அரச பாடசாலை ஒன்றின் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு நியமனம் பெற்ற ஆசிரியர் ஒருவராக இருத்தல்
அல்லது
தகவல் தொழில்நுட்ப பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒருவராக இருத்தல்
அல்லது
| - வேறு பாடங்களைக் கற்பிப்பவராயிருப்பிலும் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுடன் மென்பொருட்கள், செயலிகள் தயாரிக்கும் ஆற்றல் கொண்ட ஆசிரியர் ஒருவராயிருத்தல் (தகவல் தொழில்நுட்ப பாடநெறி ஒன்றைத் தொடர்ந்திருத்தல் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுடன் ஏதெனும் விசேட தயாரிப்புக்களை மேற்கொண்டிருத்தல்)
இயங்குபட (யைெசயவழை) தயாரிப்பு திறமை கொண்டிருத்தல் மேலதிக தகமையாக கருத்தின் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முறை
இத்துடன் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி ச்" செய்து பாடசாலை அதிபர் ஊடாக தாங்கள் பணிபுரியும் பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்தின் உரிய விடயத்துக்குப் பொறுப்பான பிரதி உதவி கல்விப் பணிப்பாளரின் பரிந்துரையுடன் தாங்கள் பணிபுரியும் மாகாணத்தின், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் என்பதுடன் கடித உறையின் இடது பக்க மேல் மூளையில் A), B), C) மற்றும் D) ஆகியவற்றுள் தாங்கள் விண்ணப்பிக்கும் துறை மற்றும் தங்களது பாடம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு விண்ணப்பதாரி ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பம் ஏற்கப்படும் இறுதித் திகதி
விண்ணப்பங்கள் 2022.08.06 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நீங்கள் பணிபுரிகின்ற மாகாணத்தின் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவேண்டும்.
தெரிவு செய்யப்படுகின்ற முறை
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் வழங்கப்படுகின்ற விதிமுறைகளின் அடிப்படையில் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் நியமிக்கப்படுகின்ற நேர்முகப் பரீட்சைக் குழு ஒன்றினால் தெரிவு செய்யப்படும்.
இரண்டாம் சுற்று
மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் தெரிவு செய்யப்படுகின்றவர்களிலிருந்து தகுதியானவர்கள் கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நடாத்தப்படுகின்ற நேர்முகப்பரீட்சையின் ஊடாக தெரிவு செய்யப்படுவர்./