>

ad

2022.06.27

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதான செயலாளர்களுக்கு

அரச காரியாலயங்களுக்கு உத்தியோகத்தர்களை  அ​ழைப்பதனை மட்டுப்படுத்தல். 

இந்த விடயம்தொடர்பாக 2022.06.26 ஆம் திகதி வெளியிட்ட 16/2022 (i) எனும் சற்றுநிருபத்திற்கு மேலதிகமாக இந்த சுற்று நிருபம் வெளியிடப்படுகின்றது.

 

02.குறித்த சுற்றுநிருபம்  ​வெளியிட்டதன் பின்னர் குறித்த தினத்திலும் அவசியமாக  ஊழியர்களைவிட அதிக அளவிலாக உத்தியோகத்தர்கள் காரியாலயங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தமை அவதாணிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படுகின்ற எரிபொருள் அளவு மற்றும் எரிபொருள் வினியோகம் தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 10 தினங்களில் அவசியமான  அளவில் ஆகக் குறைந்த அளவான உத்தியோகத்தர்களை காரியாலயங்களுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அறிவிக்கப்படுகின்றது.

02. எரிபொருள் பிரச்சினை காரணமாக பொதுக் போக்குவரத்து சேவையும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதனால் பொதுப் போக்கு வரத்து சேவையினைப் பயன்படுத்தி காரியாலயங்களுக்கு வருபர்ளை அழைக்காமல் இருப்பதற்கு அல்லது வருபவர்களின் அளவினைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளுமாறு மேலும் அறிவிக்கப்படுகின்றது.

4. அதன் அடிப்படையில் தங்களது அமைச்சு மாகாணசபைகள் என்பவற்றின் கீழ் இயங்குகின்ற தினைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்குமாறு அறியத்தரப்படுகின்றது.


Post a Comment

0 Comments