வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சலில் இடம்பெறும் ஒருசில மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்காக 06 மாதகாலத்திற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தில் 22 ஆம் உறுப்புரையின் கீழ் ஒழுங்குவிதியொன்றை வெளியிடுவதற்காக 2021 திசம்பர் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி செல்லுபடியாகும் காலம் 2022 யூலை மாதம் 01 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. குறித்த கட்டளை மூலம் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது உகந்ததென இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை பரிந்துரைத்துள்ளது. அதற்கமைய, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் புதிய ஒழுங்குவிதியொன்றை வெளியிடுவதற்கும், பின்னர் குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.