>
கல்வி அமைச்சு
Ministry of Education
'இசுருபாய', பத்தரமுல்ல, இலங்கை.
www.moe.gov.lk | info@moe.gov.lk
| எனது இல: ED/09/12/12/07/11 | திகதி: 2023.02.29 |
மாகாணக் கல்விச் செயலாளர்கள்,
மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்,
வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,
கோட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி / உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்
அனைத்து பாடசாலைகளதும் அதிபர்கள்,
பாடசாலை கல்விச் சுற்றுலா தொடர்பாக இதற்கு முன்னராக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபங்கள் மற்றும் ஆலோசனைக் கடிதங்கள் அனைத்தும் இத்தால் இரத்துச் செய்யப்படுகின்றன என்பதுடன் இச் சுற்றுநிருபத்தின் ஆலோசனைகள் பாடசாலைக் கல்விச் சுற்றுலாக்கள் தொடர்பாக இதன் பின்னர் அமுலில் இருக்கும்.
கல்விச் சுற்றுலாக்கள் கலைத்திட்டத்திற்குரிய மிகவும் முக்கியமான ஒரு கூறு என்பதனால், ஆய்வு, அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அறிவு விருத்தி ஆகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக கல்விச் சுற்றுலாக்களை ஒழுங்கு செய்தல் வேண்டும்.
4.1 கல்வி சார் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்பதனால் மூன்றாம் தவணையில் கல்விச் சுற்றுலாக்களை ஒழுங்குசெய்யலாகாது. இதன் போது தரம் 5 அல்லது க.பொ.த (உயர் தர) வகுப்பு மாணவர்களுக்கான சுற்றுலாக்களை வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் மூன்றாம் தவணையில் ஒழுங்குசெய்ய முடியும்.
4.2 ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு (தரம் 1-5) 01 நாள் மாத்திரமே அனுமதிக்கப்பட முடியும் என்பதுடன் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கு மாத்திரம் அதிக பட்சம் 02 நாட்கள் எனும் வரையறையில் அனுமதி வழங்கப்பட முடியும்.
4.3 02 நாட்களுடைய சுற்றுலாவில் ஒரு நாளை வார இறுதி நாளாக அல்லது வேறு அரச விடுமுறை தினமாக ஒழுங்கு செய்துகொள்வதற்காக இயன்றளவில் நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமாகும்.
4.4 ஒரு நாளுக்கு மேல் சுற்றுலா செல்வதாயின் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்யும் போது மாணவர்களுக்கு ஆண் மற்றும் பெண் எனத் தனித் தனியாக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதுடன் தங்குமிடம் அமைந்துள்ள இடத்திற்கு பிற்பகல் 7.00 மணியளவிலேனும் சென்றடைய நடவடிக்கையெடுத்தல் வேண்டும். இதன் போது தங்குமிட வசதிகளுக்காக பாதுகாப்புடன் கூடியதும் உரிய வசதிகளுடன் கூடியதுமான இடமொன்றை பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
4.5 பாடசாலை கல்விச் சுற்றுலா தொடர்பாக பாடசாலையின் அனுமதிக்கப்பட்ட வருடாந்த நடைமுறைப்படுத்தல் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பதுடன் சுற்றுலாவின் நிறைவில் முறையான வரவு செலவு அறிக்கை ஒன்றை பாடசாலை அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்படல் வேண்டும்.
4.6 சுற்றுலாவிற்குரிய நிதிக் கிடைப்பனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் யாவும் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கினூடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
4.7 மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்வதற்காக அவர்களது பெற்றோரின் அனுமதிக் கடிதங்கள் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும். சுற்றுலாவில் கலந்துகொள்ளும் மாணவர்கள் 20 பேருக்கு ஆகக் குறைந்தது ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு பெற்றோர் வீதம் கலந்துகொள்ளல் வேண்டும். மாணவியருக்கு பொறுப்பாக ஆசிரியைகள் கலந்துகொள்ள வேண்டும்.
5.1 மாணவர்கள் பாடசாலை சீருடை அணிந்து சுற்றுலாவில் பங்கேற்க வேண்டும்.
5.2 சுற்றுலாவின் ஆரம்பம் முதல் போதைப் பொருள் மற்றும் மதுபானங்களை, பேரூந்து சாரதி உட்படலாக எவரும் பயன்படுத்தவில்லை என்பதை ஆசிரியர்கள் விசேடமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5.3 பேரூந்து எப்போதும் அனுமதி வழங்கப்பட்ட பாதையினூடாக மாத்திரமே பயணிக்க வேண்டும்.
5.4 பேருந்து பாதுகாப்பான வேகத்தில் பயணிப்பதை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
5.5 ஆபத்தான இடங்களுச் செல்லுதல், ஆபத்தான இடங்களில் நீராடுதல், நீர் விளையாட்டுக்கள், தோனிகள்/ ஓடங்கள் படகுகள் போன்ற பாதுகாப்பற்ற பயண முறைகளின் பயன்பாடு, நீச்சல், பாதுகாப்பற்ற செயற்பாடுகள் போன்றனவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
5.6 அனுமதிக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மாத்திரம் கலந்து கொள்வதையும் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பேரூந்துகள் மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
5.7 சுற்றுலாச் செல்லும் காலப் பகுதியில் முகங்கொடுக்க நேரிடும் ஏதேனும் அவசர சந்தர்ப்பங்களின் போது, அண்மையில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் பாடசாலை உரித்தாகும் வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்லது அதிபரை அது தொடர்பாக அறியப்படுத்த வேண்டும்.
5.8 சுற்றுலா செல்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றாலும் காலநிலை பாதுகாப்பற்றதாக அல்லது சீரற்றதாக காணப்படுமிடத்தில் சுற்றுலாவை வேறு தினமொன்றில்/ தினங்களில் ஒழுங்குசெய்துகொள்ள வேண்டும் என்பதுடன் அதற்குரிய அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
சுற்றுலா நிறைவடைந்ததன் பின்னர் சுற்றுலாவினூடாக பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்பாக ஆசிரியர்களது மேற்பார்வையின் கீழ் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சாராம்ச அறிக்கை ஒன்றை அதிபர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இச்சுற்றுநிருபத்தினூடாக ஏற்படக்கூடிய எந்தவொரு சிக்கல்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சின் செயலாளரின் தீர்மானமே இறுதித் தீர்மானமாகும்.
இச் சுற்றுநிருபத்தின் ஆலோசனைகள் தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்களை அறியப்படுத்த நடவடிக்கையெடுத்தல் வேண்டும்.
எம்.என் ரணசிங்ஹ
செயலாளர்
கல்வி அமைச்சு
Note: The download will start immediately when you click the button.
Note: The download will start immediately when you click the button.
Sinhala: සියලුම අධ්යාපන චක්රලේඛ සඳහා ප්රධාන පිටුවට පිවිසෙන්න.
Tamil: அனைத்து கல்விச் சுற்றறிக்கைகளுக்கான பிரதான பக்கத்திற்கு செல்லவும்.
English: Visit the main page for all Education Circulars.
0 Comments