>

ad

Creating School timetable 2026

6 – 13 ශ්‍රේණි සඳහා පාසල් කාලසටහන සකස් කිරීම

2026 වර්ෂයේ සිට කණිෂ්ඨ ද්විතීයික අංශයේ 6 වන ශ්‍රේණියට ක්‍රියාත්මක කිරීමට නියමිතව තිබූ නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ 2027 වර්ෂයේ සිට ක්‍රියාත්මක කිරීමට 2026.01.13 දින අමාත්‍ය මණ්ඩලය විසින් තීරණය කර ඇත. ඒ අනුව, 6 ශ්‍රේණිය සඳහා පෙර පැවති විෂයමාලාව මෙම වසර සඳහා ද ක්‍රියාත්මක කළ යුතු වේ.

මේ සම්බන්ධව නිකුත් කරන ලද 2025.11.04 දිනැති අංක 34/2025 චක්‍රලේඛය සහ  2025.12.16 දිනැති ලිපිය හා 2026.01.02 දිනැති අංක ED/17/03/01/01/01 උපදෙස් ලිපිවල සඳහන් පාසල් වේලාව හා කාලසටහන සකස් කිරීම සම්බන්ධව ලබා දී තිබූ උපදෙස් තාවකාලිකව අත්හිටවනු ලැබේ.

2006.03.07 දිනැති අංක 2006/09 චක්‍රලේඛය නැවත බලාත්මක කරනු ලබන අතර, එම චක්‍රලේඛයේ උපදෙස් අනුව  කාලසටහන සකස් කර අනුමත කර  2026.01.21 දින සිට පාසල තුළ ක්‍රියාත්මක කළ යුතු වේ.

පාසල් ආරම්භ කරන හා අවසන් කරන වේලාව 2006.06.06 දිනැති අංක 2006/26 දරන චක්‍රලේඛය පරිදි ව‍ෙ

2026 අධ්‍යයන වර්ෂයේ පළමු වාරය ED/09/12/06/05/01-2025 හා 2025.12.09 දිනැති ලිපියෙහි සඳහන් පරිදි ද, එම වර්ෂයේ දෙවන හා තෙවන වාරයන් 2025.09.11 දිනැති අංක 30/2025 දරන පාසල් වාර සටහන - 2026 චක්‍රලේඛයේ දක්වා ඇති පරිදි

6 – 13 வரையான தரங்களுக்கு பாடசாலை கால அட்டவணையைத் தயாரித்தல் 2026.01.14.


2026 ஆம் ஆண்டு  தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த புதிய கல்வி மறுசீரமைப்புக்களை 2027 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு 2026.01.13 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தரம் 6 இற்கு முன்னர் காணப்பட்ட கலைத்திட்டத்தினை இந்த வருடத்திற்கும் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

அதன் படி முன்னர் வெளியிடப்பட்ட 2025.11.04 திகதியிடப்பட்ட 34/2025 இலக்கச் சுற்றுநிருபம் மற்றும்  2025.12.16 ஆம் திகதி மற்றும் ED/09/55/02/11 இலக்க கடிதம் மற்றும் 2026.01.02 ஆம் திகதி மற்றும் ED/17/03/01/01/01 இலக்க அறிவுறுத்தல் என்பன தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றன.

மேலும் 2006.03.07 திகதியிடப்பட்ட 2006/09 இலக்கச் சுற்றுநிருபம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதுடன், குறித்த சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய  கால அட்டவணையைத் தயாரித்து அனுமதி பெற்று 2026.01.21 ஆம் திகதியிலிருந்து பாடசாலையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரம் சம்பந்தமாக  2006.06.06 திகதியிடப்பட்ட 2006/26 இலக்கச் சுற்றுநிருபத்திற்கு அமையச் செயற்பட வேண்டும்.

அத்துடன், 2026 கல்வி ஆண்டின் முதலாம் தவணை ED/09/12/06/05/01-2025 மற்றும் 2025.12.09, இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் 2025.09.11 திகதியிடப்பட்ட 30/2025 இலக்க  சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறும் நடைமுறைப்படுத்தப்படுவதுத வேண்டும். 

Post a Comment

0 Comments