>
Principal handbook - CH 2
பாடசாலை கல்வியின் கேந்திர நிலையமாகப் விளங்குகின்றது. ஒரு பாடசாலையின் பணிகளை வளம் மிக்கதாக ஆக்குவதற்கு நேரடி முகாமையாளரான அதிபரின் செயற்பாடுகளும், நெறிப்படுத்தும் தலைமைத்துவமும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதற்கென அனைத்து படிநிலைகளுக்கும் பலம் மற்றும் வழிகாட்டல்களைப் பெற்று விளைதிறன் மற்றும் வினைத்திறனாக கல்விக் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக பாடசாலைக்குத் தலைமைத்துவத்தை வழங்குதல் அதிபரின் பணியாகும். அதன்போது தேசிய கொள்கைகள், கல்விக் குறிக்கோள்கள், சமூகத்தின் தேவைகள் மக்களின் அபிலாசைகள் மற்றும் காலத்திற்கேற்ற போக்குகளின் எதிரில் பாடசாலைகளின் கொள்கைகளை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது தொடர்பான சிறந்த தெளிவினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.அதைப் போன்றே, அதற்கென சுற்றுநிருப "பிரமாணங்கள்" சம்பிரதாயங்கள், காலத்திற்கேற்ற மாற்றங்கள், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் தொடர்பாக விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
பாடசாலையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரதும் ஆற்றல்கள் மற்றும் திறன்கள் என்பனவற்றை இனங் கண்டு உத்தேச நோக்கங்களை அடைந்து கொள்வதற்கென மனித மற்றும் பௌதீக வளங்களை விளைதிறன் மிக்க வகையில் பயன்படுத்துதல் அவசியமாகின்றது. அதன்போது பாடசாலையின் கலாசாரம், சுற்றுச் சூழல் மற்றும் சமூகத்தின் பல்வேறு குழுக்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து ஆக்க ரீதியாக பாடசாலையை தனித்துவத் தன்மையை நோக்கி நெறிப்படுத்துதல் அதிபரின் பொறுப்பாகும்.
அதிபர் தனது பாடசாலையை சிறந்த பாடசாலையாக மேலோங்கச் செய்யும் போது தனது தனிப்பட்ட மேன்மை (Personal Greatness) தலைமைத்துவ மேன்மை (Leadership Greatness) என்பனவற்றைப் போன்றே நிறுவன மேன்மை என்பனவற்றை (Organizational Greatness) அடைந்து கொள்வதற்காக கவனஞ் செலுத்த வேண்டும்.
தலைமைத்துவ வெற்றிக்காக "மைக்கல் புலன்" முன் வைத்துள்ள கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தனிப்பட்ட மேன்மையை (Personal Greatness) அடைந்து கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தலைமைத்துவ மேன்மையை (Leadership Greatness) அவர்களின் தலைமைத்துவ வகிபாகங்கள் தொடர்பான கீழ்க் காணும் பகுப்பாய்வை உரித்தாக்கிக் கொள்ள முடியும்.
கீழ்க் காணும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொள்ள முடியும்:
மேல் கூறப்பட்ட மேன்மைகளை அடைந்து கொள்வதற்காக கீழ்க் காணும் முகாமைத்துவச் செயற்பாடுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் பூகோள போக்குகளின்பால் கவனஞ் செலுத்தி அதிபரின் போதனா தலைமைத்துவம் (Instructional Leader), அகத் தூண்டல் தலைமைத்துவம் (Inspirational Leader) போன்ற தலைமைத்துவ பாணிகளின்பால் கவனஞ் செலுத்துதல் முக்கியமாகின்றது.
0 Comments