>
Lankajobinfo.

ad

  • Home
  • EDU NEWS
  • Exam Papers
  • Teachers Section
  • Jobs & Courses
  • About US
  • Contact Us
  • Privacy policy
Homeedu_ guide முறையானதொரு முகாமைத்துவத்திற்கென பாடசாலையை ஒழுங்கமைத்துக் கொள்ளுதல்

முறையானதொரு முகாமைத்துவத்திற்கென பாடசாலையை ஒழுங்கமைத்துக் கொள்ளுதல்

Admin January 05, 2026

Principal Handbook Chapter 3

Handbook Header

உள்ளடக்கம்

  • 3.1 அறிமுகம்
  • 3.2 பாடசாலை வகைப்படுத்தல்
  • 3.3 பாடசாலையினுள் செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்ளவதற்குரிய பணிகள்
  • 3.4 பாடசாலையொன்றில் காணப்பட வேண்டிய முறையான ஒழுங்கமைப்பு அம்சங்கள்
  • 3.5 பாடசாலையின் நிருவாக கட்டமைப்பு
  • 3.6 பாடசாலையின் கலாசாரம்
  • 3.7 பாடசாலையின் உள்ளக குழுக்கள்
  • 3.8 பணிப் பகிர்வு

3.1 அறிமுகம்

பாடசாலை ஒரு முறைசார்ந்த நிறுவனம் என்பதால் அதன் நோக்கங்களை அடைந்து கொள்வதன் நிமித்தம் சிறந்த முகாமைத்துவ பின்னணியை உருவாக்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகின்றது.

நிறுவன நோக்கங்களை அடைந்து கொள்வதற்கென பாடசாலையின் பல்வேறு செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்காக தேவையான வியூகமொன்றை தயாரித்துக் கொள்ளுதலைப் போன்றே பல்வேறு தரப்பினரிடம் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்தளித்தல் மிகவும் இன்றியமையாததாகின்றது.

அதன்போது சிறந்த ஒழுங்கமைப்புடன் கூடிய வினைதிறன்மிக்க முகாமைத்துவ வியூகமொன்றை உருவாக்கிக் கொள்ளுதலினூடாக அதிபர் ஒருவருக்கு பாடசாலையின் நிறுவாகச் செயற்பாடுகளை மிக இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

3.2 பாடசாலைகளை வகைப்படுத்துதல்

முகாமைத்துவத்தை இலகுப்படுத்துவதற்காக இலங்கையின் அனைத்து அரச பாடசாலைகளும் 4 பிரதான பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 01. அரச பாடசாலைகளின் வகைப்படுத்தல்

பாடசாலைகளின் வகை வியூகம்
1 AB பாடசாலைகள் க.பொ.த (உ.த) விஞ்ஞானம், கலை, வர்த்தக பாடத் துறைகளைக் கொண்ட பாடசாலைகள் (சில பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடத்துறைகள் நடைமுறையிலுள்ளன)
1 C பாடசாலைகள் க.பொ.த (உ.த) கலை மற்றும் வர்த்தகப் பாடத் துறைகளைக் கொண்ட பாடசாலைகள் அல்லது அதில் ஒரு பாடத் துறையை கற்பிக்கும் பாடசாலைகள் (விஞ்ஞானப் பாடத்துறையைக் கொண்டிராத பாடசாலைகள்) (சில பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடத்துறைகள் நடைமுறையிலுள்ளன)
2 ஆம் வகை தரம் 1-11 / தரம் 1-09 அல்லது 6-11 வரையிலான வகுப்புகள் நடாத்தப்படும் பாடசாலைகள்.
3 ஆம் வகை தரம் 1 தொடக்கம் தரம் 05 (ஆரம்பப் பிரிவு) பாடசாலைகள் அல்லது தரம் 1 தொடக்கம் தரம் 8 வரை வகுப்புகள் நடாத்தப்படும் பாடசாலைகள்.

(மூலம்: தொகை மதிப்புக் கிளை - கல்வி அமைச்சு)

3.3 பாடசாலையினுள் செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்வதற்குரிய பணிகள்

  • செய்ய வேண்டிய வேலைப் பிரிவுகளை இனங் கண்டு கொள்ளுதல்.
  • வேலைப் பிரிவுகளை வகைப்படுத்துதல்.
  • வகைப்படுத்தப்பட்ட வேலைப்பிரிவுகளை நிறைவு செய்து கொள்வதற்குத் தேவையான பதவிகளை உருவாக்குதல்/பொருத்தமானவர்களை தெரிவு செய்து கொள்ளுதல்.
  • வேலைப்பிரிவுகளை நிறைவு செய்து கொள்வதற்குரியதாக பணிப்பகிர்வு மற்றும் கடமைகளை நிறைவேற்றச் செய்தல்.
  • பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அதிகாரங்கள், உரிமைகள், வளங்கள் மற்றும் வசதிகளை வழங்குதல்.
  • பணிகளின் பிரிவுகளை நிறைவேற்றும் நபர்கள் மற்றும் பணிகளுக்கிடையில் சிறந்த இணைப்பினை ஏற்படுத்துதல்.
  • மனிதவள முகாமைத்துவம்.

3.4 பாடசாலையொன்றில் காணப்படவேண்டிய முறையான ஒழுங்கமைப்பு அம்சங்கள்

  • பாடசாலை தலைமைத்துவத்திற்கென சட்ட ரீதியான அதிகாரத்தைக் கொண்டிருத்தல்.
  • பாடசாலையின் தூரநோக்கு, பணிக்கூற்று, பொதுக் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாடசாலை சமூகம் திசைமுகப்படுத்தப்படுதல்.
  • பாடசாலையின் உள்ளக சமூகத்திற்கிடையில் தெளிவான வேலைப்பகிர்வு காணப்படுகின்றமை.
  • திட்டவட்டமான சட்டதிட்டங்கள், நிபந்தனை முறைமை காணப்படுகின்றமை.
  • பாடசாலை சமூகத்திற்கு தனித்துவமான ஏற்றுக் கொள்ளப்பட்ட நன்னடத்தை முறைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளமை.
  • தெளிவாக தயாரிக்கப்பட்ட ஒழுங்கமைப்பு வியூகத்திற்கிணங்க பதவி நிலைகள் காணப்படுகின்றமை.
  • செய்திகள், தீர்மானங்கள், அதிகாரங்கள் என்பனவற்றின் வரிசைக் கிரமத்திற்கென தெளிவான முறையொன்று உருவாக்கப்பட்டுள்ளமை.
  • தனி நபரைவிட பதவிக்கு முன்னுரிமை கிடைக்கின்றமை.
  • பாடசாலையின் உள்ளக சமூகத்திற்கிடையில் காணப்பட வேண்டிய தொடர்பாடல் வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளமை.
  • பணி நிறைவேற்றல் கலாசாரமொன்று உருவாக்கப்பட்டுள்ளமை.
  • நீண்ட கால அடிப்படையிலான பாடசாலைக் கலாசாரம் ஒன்று உள்ளதோடு பாடசாலையின் சமூகம் அதற்கு இசைவாக உள்ளமை.
  • ஒட்டு மொத்த கல்விப் புலத்தின் ஒரு பகுதியாக செயற்படுதல்.
  • பாடசாலையில் குழுக்கள் வெளியேறுதல் மற்றும் புதிதாக உள்வருதல் என்பன பாடசாலையின் பொதுவான செயற்பாடுகளுக்கு தடையாக அமையாமை.

3.5 பாடசாலையொன்றின் ஒழுங்கமைப்பு வியூகம்

ஒழுங்கமைப்பு வியூகம் ஒன்றை உருவாக்கும்போது பாடசாலையின் மாணவர் எண்ணிக்கை, சமாந்தர வகுப்புகளின் எண்ணிக்கை, கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழுவினரின் எண்ணிக்கை போன்ற விடயங்களின்பால் கவனஞ் செலுத்துதல் வேண்டும்.

உரு வரைப்படம் 01: 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலையொன்றின் ஒழுங்கமைப்பு வியூகத்திற்கான மாதிரி

Organization Chart 1
Organization Chart 2
Organization Chart 3
Organization Chart 4

3.6 பாடசாலை கலாசாரம்

பாடசாலையில் நடைமுறையிலுள்ள சம்பிரதாயங்கள், பாராட்டுகள், நம்பிக்கைகள், குறிக்கோள்கள் மற்றும் மனப்பாங்குகள் என்பனவற்றின் அடிப்படையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஒட்டு மொத்த நடவடிக்கைகளின் கூட்டே அப் பாடசாலையின் கலாசாரமாகும்.

ஒவ்வொரு பாடசாலையிலும் நடைமுறையிலுள்ள விசேட கலாசார சிறப்பியல்புகளின் காரணத்தினால் பாடசாலைக்கென தனித்துவமொன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அதிபர் என்ற வகையில் பாடசாலையின் முன்னேற்றத்திற்காக நடைமுறையிலுள்ள கலாசாரத்தை உரியவாறு ஆய்ந்தறிந்து தேவையான மாற்றங்களை செய்ய வேண்டுமாயின் உரிய தரப்பினரின் பங்கேற்றலுடன் அதற்கென செயலாற்றுதல் பொருத்தமாகும். அதன் போது விசேட பிரச்சினையொன்று உருவாகாத வகையில் அதனை செயற்படுத்த வேண்டும்.

அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தும் போது கீழ்க் காணும் நடவடிக்கைகளுக்கு அமைவாக அவற்றை முன்னெடுக்க முடியும். இச் செயன்முறையை முன்னெடுக்கும் போது ஒவ்வொரு நடைமுறையின்போதும் உரிய அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுத்தல் வேண்டும்.

  • அபிவிருத்தியடைய வேண்டிய பிரிவுகள்/துறைகளை தெரிவு செய்து கொள்ளுதல்.
  • தெரிவு செய்து கொண்ட துறைகளில் ஏற்படுத்த வேண்டிய அபிவிருத்தி சார்ந்த மாற்றங்களை ஆய்ந்தறிதல்.
  • அபிவிருத்தி செய்யப்படுவதால் பெறக்கூடிய அனுகூலங்களை மதிப்பீடு செய்தல்.
  • அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கென திட்டங்களை உருவாக்குதல்.
  • அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
  • நடைமுறையிலுள்ள நிலைமையை அபிவிருத்தி செய்தல்.
  • தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
  • ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் கண்காணித்தல்.

ICEBERG MODEL OF CULTURE

[Image of iceberg model of culture]

IN AWARENESS (OBSERVABLE):
Artifacts, Behavior

OUT OF CONSCIOUS AWARENESS (INVISIBLE):
Norms, Beliefs, Assumptions, Values

3.7 பாடசாலையின் உள்ளக குழுக்கள்

பாடசாலையொன்றின் முகாமைத்துவத்திற்குரியதாக வெளியிடப்பட்டிருக்கும் சுற்றுநிருபங்கள் மற்றும் விதிமுறைகளின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளவாறு பல்வேறு குழுக்களை ஸ்தாபித்து செயற்படுத்த வேண்டும். காலத்தின் தேவைக்கேற்ப வெளியிடப்படும் பல்வேறு அறிவுறுத்தல்களுக்கு இணங்க பாடசாலைகளில் பல்வேறு குழுக்களை உருவாக்குதலை மேற் கொள்ளுதல் வேண்டும்.

பிரதான குழுக்கள்:

  • பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு.
  • பாடசாலை முகாமைத்துவ குழு.
  • பாடசாலைப் பெறுகைக் குழு.
  • தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு.
  • ஒழுக்காற்றுக் குழு.
  • பாடசாலை உள்ளக மதிப்பீட்டுக் குழு.
  • கட்டாயக் கல்விக் குழு.
  • பாட அபிவிருத்திக் குழு.

வேறு குழுக்கள்:

  • அனர்த்த முகாமைத்துவக் குழு.
  • விளையாட்டு முகாமைத்துவக் குழு.
  • பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் குழு.
  • பாடசாலை நூலகக் குழு.
  • பேண்தகு கல்விக் குழு.
  • சுகாதார மேம்பாட்டுக் குழு.
  • பாடசாலை விடுதிகள் குழுக்கள்.
  • பாடசாலை சிற்றுண்டிசாலைக் குழு.
  • சிறுவர் பாதுகாப்புக் குழு.
  • நலனோம்பல் குழு.

மேற்குறிப்பிடப்பட்ட குழுக்ளை தேவைக்கேற்பவும் சந்தர்ப்பத்திற்கேற்பவும் அமைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதோடு இதற்கு மேலதிகமாக பாடசாலையின் தேவைகள் மற்றும் வெளியிடப்படுகின்ற சுற்றுநிருபங்கள் மற்றும் கடிதங்களுக்கு அமைவாக விசேஷித்த பணிகளுக்காக பல்வேறு குழுக்களை பாடசாலையொன்றில் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இக் குழுக்களை நியமித்தல், அங்கீகரித்தல், பொறுப்புகளை ஒப்படைத்தல், நெறிப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு செய்யும் போது இவற்றிற்கான பொறுப்புகள் அதிபரைச் சார்ந்ததாகும். இச் செயற்பாடுகள் அனைத்தையும் எழுத்து மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டியதோடு குழு அறிக்கைகளை உரிய முறையில் பேணுதல் வேண்டும்.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 26/2018 பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்பு ரீதியான, அளவு ரீதியான, கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டி கைந்நூல் மற்றும் 19/2019 திருத்தம் செய்யப்பட்ட சுற்று நிருபத்தை பரிசீலனை செய்தல் வேண்டும்.

3.8 கடமைகளை ஒப்படைத்தல்

  • தனிநபர் ஆற்றல்கள் மற்றும் விருப்புகள் தொடர்பாக கவனஞ் செலுத்துதல்.
  • பாடசாலைக் கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழுவின் அனைத்து உறுபினர்களுக்கும் பதவிக்குரிய கடமைகளை தனிப்பட்ட பெயரில் எழுத்து மூலமாக பகிர்ந்தளித்தல்.
  • பாடசாலை முகாமைத்துவக் குழுவின் கருத்துக்களைப் பெற்று பொருத்தமானதும் சந்தர்ப்பத்திற்கேற்ற வகையிலும் விசேட கடமைகளை ஒப்படைத்தல்.
  • உரிய தரப்பினருக்கு பணிகளை செய்வதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் வசதிகளை வழங்குதல்.
  • பல்வேறு முறையியல்களினூடாக கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல்.
Tags:
edu_ guide
  • Facebook
  • Twitter
  • Google+

Post a Comment

0 Comments

ads

Popular Posts

Government Service Guide

3/info/post-list

Tags

  • Course 161
  • Edu-news 135
  • Government job 131
  • info 120
  • news 55
  • Competition 51
  • degree 46
  • gazette 41
  • Results 39
  • A.L 38
  • circular 33
  • free-course 31
  • scholarship 22
  • Aptitude_Test 21
  • exam calendar 21
  • Exam-Paper 16
  • O.L 14
  • Past-papers 13
  • Diploma 11
  • edu_ guide 10
  • SLTS-EB 8
  • transfer application 8
  • fuel 7
  • private job 6
  • Promotion 5
  • list 5
  • Management_assistant 4
  • police 4
  • විද්‍යා පීඨ 4
  • accountant 3
  • jobs 3
  • APPLICATION 2
  • course list 2
  • G.K 1
  • UGC 1
  • aswesuma 1
  • director 1
  • litro Gas 1
  • m 1
  • power cut 1
  • scholership 1
  • translator 1

Jobs Classification

  • A.L 38
  • Management_assistant 4
  • O.L 14
  • degree 46

ads

Footer Menu Widget

  • Home
  • About us
  • Contact Us
Created By SoraTemplates | Shared By Way Template