>

ad

'Aswesuma' Welfare Benefits Payment 2023 Tamil Detail

“அஸ்வெசும” நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தமிழ் விபரம். 


33 இலட்சத்துக்கும் அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த வருடம் முதல் அமுல் படுத்தப்படும்  “அஸ்வெசும”(ஆறுதல்) நலன்புரி  கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாபதி அலுவலகம் செய்தி வௌியிட்டிருந்தது.  இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தத் திட்டத்தின் கீழ் உதவி  பெறுகின்றவர்களின் குடும்பங்கள் 4 பிரிவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

01. இடைநிலை குடும்பங்கள்

02.பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள்

03. வறிய குடும்பங்கள்

04 மிகவும் வறுமையான குடும்பங்கள் 

என்பன அந்த நான்கு வகைகளுமாகும். 


அத்துடன் 

01.அங்கவீனமானவர்கள், 

02. முதியவர்கள் 

03.  சிறுநீரக நோயாளர்கள் 

என இன்னும் மூன்று பிரிவினரும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு   “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய கீழ் வரும் அடிப்படையில் மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

01. தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் குடும்பத்தினருக்கான கொடுப்பனவு விபரம்.

இந்த குழுவில் அடங்களும் 400,000 பேருக்கான 2500.00 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையில் வழங்கப்படவுள்ளது.

02.  பாதிக்கப்படக்கூடிய குடும்பத்தினருக்கான கொடுப்பனவு விபரம்.

பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் தொகுதியில் 400,000 பேருக்கான மாதாந்தக் கொடுப்பனவாக 5000.00 ரூபாய்  2024 ஜூலை 31 வரையில்  வழங்கப்படுவதற்கன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது..

03.  வறிய குடும்பத்தினருக்கான கொடுப்பனவு விபரம்.

வறியோர் என்று அறியப்பட்ட குடும்பங்களில் 800,000 பேருக்கான 8500.00 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

04 மிகவும் வறுமையான குடும்பத்தினருக்கான கொடுப்பனவு விபரம். 

 மிக வறுமையான குடும்பங்களுக்கு 400,000 பேர்களுக்கு வர்களுக்காக மாதாந்தம் 15,000.00 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் வழங்கப்படும். இந்தக் கொடுப்பனவு மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படுகின்றது.

அத்துடன் தற்போதளவிலும் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளுகின்ற 72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5000.00 ரூபாய் வீதமும் தொடர்ந்தும் வழங்கப்படுகின்றது. 


சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5000.00 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. 

முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு 2000.00 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடுமுமுவதுமுள்ள  40 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும்  3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. குறித்த விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவர் அடங்கிய தெரிவுக்குழு ஒன்றின் கீழ்  பரிசீலிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரின் அனுமதியை பெற்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் கொடுப்பனவு பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் கிராம சேவையாளர் பிரிவு அடிப்படையில் வௌியடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நீங்கள் பிரவேசித்து உங்களது பெயர்களைப் பரிசோதித்துக் கொள்ளலாம். 

​பெயர்ப்  பட்டியலைப் பரிசோதிக்க இங்கு கிளிக் செய்யவும்.

பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத நீங்கள் இத்திட்டத்தினைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் எனில் மேன்முறையீடு ஒன்றினைச் சமர்ப்பிக்கலாம். 

அல்லது அந்த பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் அதனைப் பெறத் தகுதி அற்றவர் என்பதாக முறைப்பாடு செய்வதாயினும் அதனையும் சமர்ப்பிக்கலாம் மேற்படி மேன்முறையீடு மற்றும் முறைப்பாடு தொடர்பான விண்ணப்பப்படிவத்தினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

மேன்முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2023. ஜூன் 30 ஆகும். 

மேன்முறையீடு மற்றும் முறைப்பாட்டுக்கா விண்ணப்பத்தினைப் பெற இங்கு கிளிக் செய்யவும். 

மேன்முறையீடு தொடர்பான மேலதிக விபரங்கள் அடங்கிய பத்திரிகை விளம்பரத்தினைப் பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்.