2019/2020 கல்வியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கான கடிதங்கள் தபாலிடும் நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
ஜனவரி மாதத்தின் இறுதிமுதல் பெப்ரவரி மதல்தல் வாரங்களில் கல்வியியல் கல்லூரிகளில் நேர்முகப்பரீட்சைகளை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் அடுத்த வாரமளவில் உங்களது கரங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். எல்லா கல்வியில் கல்லூரிகளும் தங்களது கடிதங்களை ஒரே நேரத்தில் அனுப்புவதில்லை என்பதுடன் ஒரே தினத்தில் அனைத்து கல்லூரிகளும் நேர்முகப் பரீட்சைகளைனயும் நடாத்துவதில்லை. சில் கல்லூரிகள் கடிதம் அனுப்பவது அல்லது நேர்முகப் பரீட்சை நடாத்துவது தாமதமாகலாம். (பேராதனை கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கடிதங்கள் தற்போது அனுப்பப்ட்டுவிட்டன.) கடிதங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் கல்வியியல் கல்லூரிகளுக்கு அழைப்பெடுத்து உங்களது பெயர்கள் selected list இல் காணப்படுகின்றனவா என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.
முதலாவது நேர்முகப் பரீட்சையின் முடிவில் வெற்றிடங்கள் நிரப்புகின்ற செயற்பாடுகளின் ஊடாக உங்களுக்கு நுழைவுக்கான வாய்ப்புக் கிடைக்கப்பெறலாம்.
பெப்ரவரி மாதத்தில் நேர்முகப் பரீட்சைகள் முடிவடையுமாயின் மார்ச் மாதத்தில் அல்லது ஏப்ரல் மாதத்தில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படலாம்.
கல்வியியல் கல்லூரி நேர்முகப் பரீட்சையின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவை? நேர்முகப் பரீட்சையின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் என்ன?
இவை தொடர்பிலான முழுமையான விளக்கம் கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து அறிந்துகொள்ளலம்
https://www.lankajobinfo.com/2023/01/college-of-education-interview-20222023.html