அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக 17 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக் கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்த அடிப்படையல் மேற்படி கொடுப்பனவுகள் தாமதமான போதிலும் குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் அர சேவையில் தற்போது பணியாற்றுகின்ற நிர்வாக உத்தியோகத்தர்கள அல்லாதவர்களுக்கு முதலாவது கட்டத்திலும் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு 2 மூன்று தினங்கள் தாமதித்து அடுத்ததாகவும் சம்பளம் வழங்கப்படவிருப்பதாகவும். இது சில போது ஒரு வாரங்கள் கூட தாமதிக்கலாம் என்தாகவும் தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றிலேயே இந்த முறை தான் இவ்வாறான நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் நாட்டின் நிலையினைக் கருத்தில் கொண்டு இவற்றைப் பொறுத்துக்கொள்ளுமாறும் ஏதாவது ஒரு அடிப்படையில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம், ஓய்வூதியம், உரம், மருந்து, சமூர்திக் கொடுப்பனவு என்பன வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாகவும் தெரிவித்தார்.