>

ad

Eastern Provincial Teacher Transfer 2022 /2023



வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023

விண்ணப்ப முடிவுத் திகதி 2022.07.31

1.ஒரு வலயத்திலிருந்து இன்னுமொரு வலயத்திற்கு தனது விருப்பத்தின் பேரில் இடமாற்றம் பெற விரும்புகின்ற ஆசிரியர்கள் மற்றும் தமது வலயத்திற்கென வலய இடமாற்ற அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படுகின்ற உச்ச பட்ச சேவைக்காலத்தினை விஞ்சி கடமை புரிகின்ற ஆசிரியர்கள், மேலும்
முதல் நியமன வலயத்தில் நியமனக்கடிதத்தின்படி கட்டாய சேவைக்காலத்தினைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் அத்துடன் நியமனக் கடிதத்தில் கட்டாய சேவைக்காலம் குறிப்பிட்டிருக்காவிட்டால் முதல் நியமனத்திலிருந்து 05 வருட கால சேவையை அவ்வலயத்தில் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து மேற்படி இடமாற்றத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் -2022 கிற்கு விண்ணப்பித்தவர்கள் தவீர்ந்த ஏனையோர் விண்ணப்பிக்கமுடியும்.

2. தாபனவிதிக் கோவையின் III வது அத்தியாயம், கிழக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை விதிக்கோவையின் XVIII வது அத்தியாயம், 20.02.2009 ல் வெளியிடப்பட்ட 1589/30 ம் இலக்க அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலின் XVIII வது அத்தியாயம் மற்றும் கல்வி அமைச்சின் 2007/20 தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை என்பவற்றைத் தழுவியதாகவும், கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கமைவாகவும், பின்வரும் அறிவுறுத்தல்களின் அடிப்படையிலும் மேற்படி இடமாற்றம் மேற்கொள்ளப்படும்

3. மேலே 1வது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள வகுதிகளினுள் அடங்குகின்ற ஆசிரியர்களினால் அதிபரூடாக சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் அனைத்தையும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தனது சீபாரிசுடன் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

4. ஒரு ஆசிரியர் இடமாற்றத்திற்கான தகைமைகளை பூர்த்திசெய்திருந்தாலும் அல்லது பூர்த்திசெய்யாவிட்டாலும் மேலும் அவரது பாடத்துறை தொடர்பில் வலயத்தில் பற்றாக்குறை காணப்பட்டாலும் அது பற்றிக் குறிப்பிட்டு கிடைக்கப் பெறும் சகல விண்ணப்பங்களையும் அனுப்பி வைத்தல் வேண்டும்


மேலே 3,4 இன் பிரகாரம் சகல விண்ணப்பங்களையும் அதிபர், விண்ணப்பப் படிவத்தின் இலக்கம் (VI) இல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கினணங்க பொருத்தமற்ற விடயங்களை வெட்டி தங்களின் சிபாரிசினைக் குறிப்பிட்டு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு முன்னிலைப் படுத்தவேண்டும். 

ஆசிரியர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்போது, பின்வரும் விடயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.


  • தற்காலிக இணைப்பு, கற்கை விடுமுறை, வேறு நிறுவனங்களுக்கான விடுவிப்பு போன்ற இணைப்பு போன்றவை சேவைக் காலத்தில் காட்டப்படவேண்டும். (உரிய ஆவணப் பிரதிகள் இணைக்கவும்)
  • விபரங்கள் குறிப்பிட விண்ணப்பப்படிவத்தில் இடம் போதாதெனில் மேலதிக தாளில் இணைக்கவும். மருத்துவ ரீதியான காரணங்கள் ஈருப்பின் உரிய ஆவணங்களை இணைக்கவும்.
  • விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் 03 பிரதிகளில் சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

சுற்று நிருபத்திணை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவித்தலை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

0 Comments