பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ்களில் பயணிப்பதற்கான மாதாந்தப் பருவச் சீட்டு ஆகும். இது சீசன் டிக்ககட் என அழைக்கப்படும்.
'பாடசாலை சீருடையுடன் இருந்தால் மாத்திரமே சீசன் டிக்கட் இனைப் பயன்படுத்தி பயணிக்கலாம் என்பதாக குறிப்பிடப்பட்ட ஒரு சீசன் டிக்கட் கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதன் காரணமாக சனி ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்களுக்கு செல்வதற்காக சீசன் டிக்கட்டினை பயன்படுத்த முடியாது போகும் என்பதாக இதற்கு எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இது தொடர்பாக கே. ஏ. பீ ஆர் குருவிட்ட என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைவாக இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையிடம் வினவியிருந்தார்.
அவரது வினாக்களும் அதற்காக கிடைத்த பதில்களும் கீழே தரப்படுகின்றது.
வினா 01. பாடசாலை மாணவர்களுக்கான பருவகாலச் சீட்டு ( சீசன் டிக்கட்) செல்லுபடியாவதற்கு மாணவர்கள் பாடசாலை சீருடை அணிந்திருக்க வேண்டும் என்பதாக நியதி ஒன்று உண்டா?
பதில் - இல்லை
வினா 02 - அவ்வாறு நியதிகள் இருக்குமாயின் அதனது பிரதியை அனுப்பி வைக்கவும்.
பதில் - பொறுத்தமற்றது.
வினா 03 பாடசாலை சீருடை அணிந்து செல்கின் மாணவர்களுக்கு மாத்திரம் பருவ காலச் சீட்டினைப் பயன்படுத்தி பயணிப்பதற்கு அனுமதிக்கவும் என்பதாக இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதா?
பதில் - இல்லை.
அந்த வகையில் படசாலை மாணவர்கள் சீருடையில்லாமலும் CTB பஸ்களில் பயணிக்கலாம் என்பதாக இலங்கை போக்குவரத்து சபை உறுதி செய்துள்ளது.
2 Comments
MATHU MATHU 7867
ReplyDelete