க.பொ.த (உ/த) பரீட்சை -2021 இற்காகான பெறுபேறுகள் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் L.M.D தர்மசேன தெரிவித்தார்.
க.பொ.த உயர்தர மாணவர்களின் பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான பிரயோக பரீட்சை குறித்து விளக்கம் அளிப்பதற்கான ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேற்படி பிரயோக பரீட்சையானது நாடுமுழுவதும் காணப்படுகின்ற
44 பரீட்சை நிலையங்களில் ஜூலை 29 ஆம் திகதி முதல் நடைபெறுகின்றது என்பதாகவும். உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை அவசரமாக வெளியிடுவதற்கான தேவை காணப்படுவதால் இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் மேற்படி பரீட்சைகளை நடாத்தி முடிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் சொந்த முகவரிக்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பித்த அனைவரும் இந்த பரீட்சைக்கு தோற்றமும் பரிசாகிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
சிலவேளைகளில் பரீட்சை நிலையங்கள் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் இருக்கலாம் எனவும் சிலவேளை மாவட்டத்தை தாண்டி செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்பதுடன் நேர காலத்தோடு பரிட்சை மண்டபங்களை அடைந்து கொள்ளுமாறு பரீசார்திகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
ஏதாவது தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த தினத்தில் பரீட்சை நிலையத்தை அடைந்து கொண்ட முடியாத நிலை ஏற்படுமானால் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியினைச் சந்தித்து தனது பிரச்சனையை குறிப்பிட்டு அடுத்த தினம் பிரயோக பரிட்சைக்கு முகம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.
அடுத்த வருடத்திற்கான உயர்தர பரீட்சை நடாத்துவதற்கு விண்ணப்பம் கோப்படுவதற்கு முன்னர் 2021 ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளை வெளியிடுவது அவசியமானதாகும் என்பதாகும். அதன் போதே 2021 பெறுபேறுகளின் அடிப்படையில் போதிய பெறு பெயர்களைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு மீண்டும் பரீட்சைக்காக விண்ணப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப்பெறும் என்பதனால்
பரீட்சை நிலை உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு எரிசக்தி அமைச்சகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும். குறித்த தினத்தில் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் வழங்குமாறு போக்குவரத்து துறைகளிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
முகம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.
அடுத்த வருடத்திற்கான உயர்தர பரீட்சை நடாத்துவதற்கு விண்ணப்பம் கோப்படுவதற்கு முன்னர் 2021 ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளை வெளியிடுவது அவசியமானதாகும் என்பதாகும். அதன் போதே 2021 பெறுபேறுகளின் அடிப்படையில் போதிய பெறு பெயர்களைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு மீண்டும் பரீட்சைக்காக விண்ணப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப்பெறும் என்பதனால் இந்த பிரயோக பரீட்சைகளை முடிந்த அளவு அவசரமாக நடாத்தி பெறுபேறுகளை வெளியிட்டு அடுத்த பரீட்சைக்காக விண்ணப்பங்களை கூறுகின்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
0 Comments