>

ad

பாடசாலைகள் நடத்துவது குறித்த கல்வி அமைச்சின் அறிவித்தல்.




எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான தினங்களில் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய முறைகள் குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் பிரதேச மட்டத்தில் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் ஆகியோர்களுக்கு போக்குவரத்து நெருக்கடிகள் காணப்படாத நிலையில் உள்ள பாடசாலைகளைச் செயற்படுத்துவது குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்கு  மாகாண அதிகாரிகளுகு அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் ஏதேனும் ஒரு பாடசாலைக்கு சமூகம்தர முடியாமல் போகின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் இருப்பார்களாயின், அந்த  தொகையினைக் கருத்தில் கொண்ட அடிப்படையில் இந்த நிலையிலும் பாடசாலையை நடாத்திச் செல்ல முடியும் என்ற நிலைமை காணப்படுவதாயின் இது தொடர்பில் அதிபர்கள் வலய பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.



மாகாண பணிப்பாளர்கள் ஊடக மாகாண,, வலைய, கோட்ட அடிப்படையில் இயங்குகின்ற பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோரிடம் பெற்றுக்கொண்ட ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்படி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது

Post a Comment

0 Comments