கொழும்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படுகிறது என்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
போக்குவரத்து. பிரச்சனைகள் இல்லாத கிராமப் பகுதிகளின் பாடசாலைகள் குறித்த பாடசாலை அதிபர்களின் விருப்பத்துக்கு அமைய பாடசாலைகளை நடாத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
சன நெரிசலான பகுதி மாணவர்களுக்காக குறித்த காலப்பகுதியில் ஒன்லைன் ஊடாக நடாத்தப்படவேண்டும் என்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரனசிங்க தெரிவித்தார்.
ஒன்லைன் கல்வி நடவடிக்கை மேற்கொள்ளும் பகல் வேளைகளில் மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளாமல் இருக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த 25 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கல்வி அதிகாரிகளின் கூட்டத்தின் போது அடுத்த வாரம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்பதாகவும் தெரிவித்தார்.
0 Comments