நாட்டில் காணப்படுகின்ற எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக ஜூன் மாதம் 20ஆம் திகதி முதல் அரச உத்தியோகத்தர்கள் 2 வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான நடவடிக்கைகளை பொது நிர்வாக அமைச்சு மேற்கொண்டிருக்கிறது.
அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவது தொடர்பாக 2022.06.15 ஆம் திகதி சுற்று நிருபத்தின் ஊடாக வௌ்ளிக் கிழமைகளில் காரியாலங்களுக்கு லீவு வழங்குவது தொடர்பான அறிவிக்கப்பட்டிருந்தது.டன் அரச உத்தியோகத்தர்களை மட்டுப்படுத்துகின்ற செயற்பாடு வௌ்ளிக்கிழமை அல்லாத தினங்களிலும் 2022.06.20 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு செயற்படுத்துவதற்கான 16/2022 இலக்கமிடப்பட்ட சுற்றுநிருபம் 2022.06.17 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்
01.காரியாலயத்தை தடங்கல் இல்லாமல் கொண்டு நடாத்துவதற்கான அளவில் மாத்திரம் உத்தியோகத்தர்களை கடமைக்கு அழைக்கின்ற அதிகாரம் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
02. அவ்வாறு அவசியமான உத்தியோகதடதர்கள் அழைக்கப்படுகின்றபோதிலும் கடமைகளுக்கு மாற்றீட்டு அடிப்படையில் அழைக்கப்படவேண்டும்.
03 அவ்வாறு சேவைத்தினங்கள் வகுக்கப்பட்ட நிலையில் குறித்த உத்தியோகதத்தர்கள் தான் சேவைக்கு வரவேண்டிய தினங்களில் சேவைக்கு வராவிடத்து அது சொந்த லீவாக கருதப்படும்.
04. சேவைக்கு அழைக்கப்படாதவர்கள் ஒன்லைன் ஊடாக பணியாற்ற வேண'்டும்.
05. நிறுவனத்துக்கு உத்தியோகத்தர்கள் அழைக்கப்படவேண்டும் எனுமிடத்து இலங்கை போக்குவரத்து சபையுடன் கலந்துரையாடி போக்குவரத்து வசதிகளை நிறுவனத் தலைவர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
06. சேவைக்கு அழைக்கப்படுவோர் பொதுப் போக்குவரத்து சேவையினைப் பயன்படுத்தவேண்டும். அல்லது காரியாலயத்திற்கு கிட்டிய இடங்களில் இருப்பவர்களுக்கு செலவு குறைந்த அடிப்படையில் காரியாலய வாகனங்களைப் பயன்படுத்தலாம்.
07. நீதிமன்ற சேவைகள் தொடர்பான விதிமுறைகள் நீதிமன்ற ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவைகள் அரச சேவையினை நடாத்திச் செல்வதற்கு பாதிப்பாக அமையக் கூடாது என்பதாக குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments