ad

Tamil Day Competition 2022

அகில இலங்கைத் தமிழ்மொழித்தின போட்டிகள் - சுற்றுநிருப இணைப்பு 2022




அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகளுக்கான இணைப்பு - 2022
01. 2022 ஆம் ஆண்டுக்குரிய அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகள் இவ் இணைப்பில் குறிப்பிடப்படும் விடங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகவும், சுற்றுநிருப இல 35/2018 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைவாகவும் நடைபெறும் என்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அத்துடன் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு. இம்முறை தமிழ்மொழித்தினப் போட்டிகள் தரங்களான 10, 11, 12, 13 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாத்திரம் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன. 

அத்துடன் இம்முறை திறந்த போட்டி நிகழ்ச்சிகளிலும் தரங்களான 10, 11, 12, 13 ஆகிய வகுப்பு மாணவர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
போட்டிகளும் திகதிகளும்.

 2022 ஆம் ஆண்டிற்குரிய போட்டிகள் நடாத்தப்பட வேண்டிய திகதிகள்

பாடசாலை மட்டப் போட்டிகள் - 2022.05.15 ஆம் திகதிக்கு முன்னர்
வலய மட்டப் போட்டிகள் - 2022.07.15 ஆம் திகதிக்கு முன்னர்
மாகாண மட்டப் போட்டிகள் - 2022.09.30 ஆம் திகதிக்கு முன்னர்

 தேசிய மட்டப் போட்டிகளுக்கான விண்ப்பங்கள் 2022.10.07 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படல் வேண்டும்.

போட்டி தொடர்பான கல்வி அமைச்சின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்ய 


போட்டி தொடர்பான முழுவிபரம் அடங்கிய சுற்றுநிருபத்தினைப் பதிவிறக்கம் செய்ய