ad

அரச உத்தியோகத்தர்கள் நாளை சேவைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு



தற்போதைய காலகட்டத்தில் காணப்படுகின்ற நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசிய  சேவைகள் தவிர்ந்த சேவைகளில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் நாளை (20)  சேவைக்கு சமூகம் தர வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றினை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர மேலும் குறிப்பிடுகையில் புதிதாக நியமனம் பெறுகின்ற அமைச்சர்களுக்கான சலுகைகளைக் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள்' நடாத்தப்படுவதாகவும் புதிய அமைச்சர்களாக நியமனம் பெறுகின்றவர்கள் சம்பளம் பெறாமல் இருப்பதற்கு தீர்மானித்திருப்பதாவும் குறிப்பிட்டார்.