பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத பல மாணவர்கள் திரும்பவும் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் ஒன்றினை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2021.11.10 இலிருந்து 2021.11.20 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கின்றவர்கள் தங்களது பாடசாலை அதிபரிடம் வழங்கப்பட்டிருக்கின்ற Username, Password ஊடாக விண்ணப்பிக் வேண்டும் என்பதுடன், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிப்பது குறித்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சமர்ப்பிக்கின்ற விண்ணப்பங்கள் பிரின்ட் செய்யப்பட்டு தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதாகவும் அறிவுறுத்தப்படுகின்றது.
அத்துடன் 2020 க.பொ.த (சா.த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் அழகியல் பாடநெறி தொடர்பான பிரயோகப் பரீட்சை 2021.12.01 முதல் 2021.12.11 வரை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்பதாகவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 Comments