தென்மாகாணக் கல்வியமைச்சின் கீழ் உள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளில் 26 பாடவிதானங்களில் நிழவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள், தேசிய உயர்கல்வி டிப்ளோமாதாரிகள் மற்றும்
க. பொ.த. உயர் தரத்தில் சித்தி பெற்றவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக ஆசிரிய சேவைப் பிரமாணங்களுக்குகேற்ப பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் தகுதிவாய்ந்த பட்டதாரிகள், தேசிய உயர்கல்வி டிப்ளோமாதாரிகள் மற்றும், உயர் தரத்தில் சித்தி பெற்றவர்களிடமிருந்து நிகழ்நிலை (online) மூலமாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வயதெல்லை :-
6.1 விண்ணப்பங்கள ; பொறுப்பேற ;கப்படும் இறுதித் திகதிக்கு (2021.10.22 அன்று) வயது
குறைந்த வயதெல்லை : 18 வருடங்கள்
உயர்ந்த வயதெல்லை : 35 வருடங்கள்
அந்த அடிப்படையில் 2003.10.22 ம் திகதி அல்லது அதற்கு முன்பு மற்றும் 1986.10.22 ம் திகதி அல்லது அதற்குப் பின்பு பிறந்த திகதியினைக் கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பதற்கான தகுதியினைக் கொண்டிருப்பர்
.
01 ஆரம்பக் கல்வி
முழுப் பட்டப் படிப்பின் போதும் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் அல்லது தமிழ்
மொழியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல்.
02
இரண்டாம் மொழி – சிங்களம்
முழுப் பட்டப் படிப்பின் போதும் சிங்கள மொழியினை பிரதானமான பாடமாகக்
கொண்டு பட்டம் பெற்றிருத்தல்.
மற்றும்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முக்கிய பாடம் என்ற வகையில் தமிழ்
மொழியில் விசேட சித்தியினைப் பெற்றிருத்தல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றில் அல்லது அரசின் சட்டவாக்க நிறுவனமொன்றினூடாகப் பெறப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத தமிழ் மொழி பற்றிய டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல்.
03 இரண்டாம் மொழி – தமிழ்
முழுப் பட்டப் படிப்பின் போதும் தமிழ் மொழியினை பிரதானமான பாடமாகக்
கொண்டு பட்டம் பெற்றிருத்தல்.
மற்றும்
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முக்கிய பாடம் என்ற வகையில் சிங்கள
மொழியில் விசேட சித்தியினைப் பெற்றிருத்தல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றில் அல்லது அரசின் சட்டவாக்க நிறுவனமொன்றினூடாகப் பெறப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத சிங்கள மொழி பற்றிய டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல்.
04 தமிழ்
முழுப் பட்டப் படிப்பின் போதும் தமிழ் மொழியினைப் பிரதான பாடமாகக் கொண்ட இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல்.
05 கணிதம்
க.பொ.த. உயர் தரத்தில் கணிதம் / விஞ்ஞானப் பிரிவுகளில் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து கணிதத்தினை பிரதான பாடமாகக் கொண்ட விஞ்ஞானவியல் பட்டமொன்றினைப் பெற்றிருத்தல். (க.பொ.த. உயர்தரம் வரை கணிதப் பாடத்தினைக் கற்பிக்கும் தகைமையைக் கொண்டிருத்தல்.)
06 விஞ்ஞானம்
க.பொ.த. உயர்தரத்தில் கணிதம் / விஞ்ஞானப் பிரிவுகளில் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பௌதீகவியல் /இரசாயனவியல் /உயிரியல் /தாவரவியல் / விலங்கியல் ஆகிய பாடங்களிலிருந்து குறைந்தபட்சம் ஒரு பாடத்தினையாவது பிரதான பாடமாகக் கொண்டு விஞ்ஞானவியல் பட்டமொன்றினைக் கொண்டிருத்தல்.
07 ஆங்கிலம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து ஆங்கில மொழி அல்லது ஆங்கில இலக்கியத்தினைப் பிரதான பாடமாகக் கொண்ட பட்டமொன்றினைப் பெற்றிருத்தல்.
08
சுகாதாரம் மற்றும் உடற்கல்வி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து விளையாட்டு விஞ்ஞானம் மற்றும்
முகாமைத்துவத்தினைப் பிரதான பாடமாகக் கொண்ட பட்டமொன்றினைப்
பெற்றிருத்தல்.
09 சித்திரம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து சித்திரத்தினைப் பிரதான பாடமாகக் கொண்ட
பட்டமொன்றினைப் பெற்றிருத்தல்.
10 கர்நாடக சங்கீதம்
முழுப் பட்டப் படிப்பின் போதும் கர ;நாடக சங்கீதத் தினைப் பிரதான பாடமாகக்
கொண்ட நுண்கலைப் பட்டம் பெற்றிருத்தல். / அழகியல் இளங்கலை அல்லது
இளங்கலை விசேட (கர்நாடக சங்கீதம்) பட்டம் பெற்றிருத்தல்.
11. நடனம் (பாரதீகம்)
முழுப் பட்டப் படிப்பின் போதும் பாரதீக நடனத்தினைப் பிரதான பாடமாகக்
கொண்ட நுண்கலைப் பட்டம் பெற்றிருத்தல். / அழகியல் இளங்கலை அல்லது
இளங்கலை விசேட (பாரதீக நடனம்) பட ;டம ; பெற்றிருத்தல்.
12. தகவல் தொழிநுட்பம் மற்றும் தொடர்பாடல்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து தகவல் தொழிநுட்பத்தினை அல்லது கணனி
விஞ்ஞானத்தினைப் பிரதான பாடமாகக் கொண்ட பட்டமொன்றினைப் பெற்றிருத்தல்.
13. புவியியல் விஞ்ஞானம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து புவியியல் விஞ்ஞானம் என்ற பாடத்தினை பிரதான பாடமாகக் கொண்ட பட்டமொன்றினைப் பெற்றிருத்தல்.
14 இந்து சமயம்
முழுப் பட்டப் படிப்பின் போதும் இந்து சமயம் / இந்து நாகரீகத்தினைப் பிரதான
பாடமாகக் கொண்ட இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல்.
15 வரலாறு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து வரலாறு பாடத்தினைப் பிரதான பாடமாகக்
கொண்ட பட்டமொன்றினைப் பெற்றிருத்தல்.
16 .குடியுரிமைக் கல்வி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து மானிடவியல் விஞ்ஞானம். / சமூக விஞ்ஞானம் அல்லது அரசியல் பாடத்தினைப் பிரதான பாடமாகக் கொண்ட பட்டமொன்றினைப் பெற்றிருத்தல்.
17 மாணவர் ஆலோசனை வழிகாட்டல்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து உளவியல் விஞ்ஞானம் / ஆலோசனை பிரதான பாடமாகக் கொண்ட பட்டமொன்றினைப் பெற்றிருத்தல். அல்லது மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து சமூக விஞ்ஞானத்தினைப் பிரதான பாடமாகக்
கொண்ட பட்டமொன்றினைப் பெற்றிருத்தல் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் ஒரு வருடத்திற்குக் குறையாத ஆலோசனை சார் டிப்புளோமா ஒன்றினைப் பெற்றிருத்தல்.
18. ரோமன் கத்தோலிக்கம ;
முழுப் பட்டப் படிப்பின் போதும் ரோமன் கத்தோலிக்கத ;தினை பிரதான பாடமாகக் கொண்ட இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல்.
19 அரபு
முழுப் பட்டப் படிப்பின் போதும் அரபு மொழியினைப் பிரதான பாடமாகக் கொண்ட இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல்.
20 இஸ்லாம்;
முழுப் பட்டப் படிப்பின் போதும் இஸ்லாம் பாடத்தினைப் பிரதான பாடமாகக்
கொண்ட இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல்.
21 விசேட கல்வி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து விசேட கல்வியினைப் பிரதான பாடமாகக் கொண்ட கல்வியியல் பட்டமொன்றினைப் பெற்றிருத்தல்.
அல்லது
தேசிய கல்வி நிறுவகம் / இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பெற்றுக்
கொண்ட விசேட கல்வி சார்ந்த டிப்ளோமா பட்டம் பெற்றிருத்தல்.
22 மனைப் பொருளியல்
இலங்கையின் உயர்கல்வி நிறுவனத்தில் நுகர்வோர் அறிவியல் மற்றும் தயாரிப்புத் தொழிநுட்ப டிப்ளோமா பாடநெறியினைப் பூர ;த்தி செய்திருத்தல்.
23 அரசியல் விஞ்ஞானம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து அரசியல் விஞ்ஞானம் அல்லது சர்வதேசத்
தொடர்புகள் பாடத்தினைப் பிரதான பாடமாகக் கொண்ட பட்டமொன்றினைப்
பெற்றிருத்தல்.
24 வணிகக் கல்வி
க.பொ.த. உயர் தரத்தில் வணிகத் துறையில் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து வணிகவியல் பட்டம் / வர்த்தக நிர்வாகம் / அரசநிர்வாகம் தொடர்பான பட்டமொன்றினைப் பெற்றிருத்தல்.
25 பொருளியல் விஞ்ஞானம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து பொருளியல் விஞ்ஞானத்தினைப் பிரதான
பாடமாகக் கொண்ட பட்டமொன்றினைப் பெற்றிருத்தல்.
26 கணக்கீடு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகமொன்றிலிருந்து கணக்கீட்டினைப் பிரதான பாடமாகக் கொண்ட
பட்டமொன்றினைப் பெற ;றிருத்தல்.
தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய Click here
ஒன்லைன் விண்ணப்பிக்க Click here
விண்ணப்பிப்பதற்காக வழிகாட்டல்களைப் பதிவிறக்கம் செய்ய Click here
விபரம்
தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய Click here
ஒன்லைன் விண்ணப்பிக்க Click here
விண்ணப்பிப்பதற்காக வழிகாட்டல்களைப் பதிவிறக்கம் செய்ய Click here