விண்ணப்பப் படிவத்தை நிகழ்நிலை (Online) முறையில் பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்
பெறுபேற்று மீளாய்வின்போது குறித்த விடைத்தாள் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் பலரால் முழுமையாக பரிசீலிக்கப்படும். விடைத்தாள் மீளாய்வின் பெறுபேறாக புள்ளிகளில் அல்லது கிடைக்கப் பெற்றுள்ள தரங்களில் அதிகரித்தலோ அல்லது குறைவடைதலோ ஏற்பட இடமுண்டு என்பதை பரீட்சார்த்திகள் அறிந்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்.
1. குறித்த பரீட்சையின் மீளாய்வு விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் மாத்திரம் கோரப்படும்.
2. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2021.10.25 ஆகும்.
3. மீளாய்விற்காக விண்ணப்பிக்கும்போது பின்வரும் முறைகளைப் பின்பற்றவும்.
4. முறைமையினுள் பிரவேசிக்கும்போது தேசிய அடையாள அட்டை
இலக்கம் மற்றும் க.பொ.த(சா/த) - 2020 பரீட்சைக்குத் தோற்றிய சுட்டெண்ணைப் பயன்படுத்த வேண்டும்.
5. படிவத்தை பூரணப்படுத்துவதற்கு முன்பு தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள் (Technical Instructions), பொது அறிவுறுத்தல்கள் (Common Instructions) என்பவற்றை வாசித்தல் மற்றும் வீடியோவைப் பார்த்தல் மூலம் சரியான முறையில் விண்ணப்பங்களைப் பூரணப்படுத்தல் அவசியமாகும்.
6. ஒரு பாடத்திற்குரிய மீளாய்விற்கான பணம் 200/- ரூபா ஆகும். Credit Card / Debit Card மூலம் அல்லது தபாற் கந்தோரில் பணத்தைச் செலுத்த வேண்டும்.
7. பணத்தைச் செலுத்திய பின்பு விண்ணப்படிவத்தினை PDF முறையில் பதிவிறக்கம் (Download) செய்ய முடிவதோடு, அவ் விண்ணப்பப் படிவத்தை தாங்கள் வைத்திருக்க வேண்டும். பணம் செலுத்திய பின்பு தங்களது கைத் தொலைபேசிக்கு SMS மூலம் தகவல் கிடைக்கப் பெறும்.
8. மீளாய்வு செய்வதற்கான சகல பாடங்களையும் சரியாக பூரணப்படுத்துவது விண்ணப்பதாரியின் கடமையாவதோடு குறித்த பணம் செலுத்தப்படாத விண்ணப்பப்படிவங்கள் எந்தவித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.
* நாட்டிலுள்ள கொவிட் நிலைமை காரணமாக இம்முறை பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கு அதிபர் உறுதிப்படுத்துதல் / கையெழுத்து அவசியமில்லை என்பதை அவதானிக்கவும். இம் மீளாய்வு தற்போது வெளியாகியுள்ள பாடங்களுக்கு மாத்திரம் உரியதாகும்.
0 Comments