அரச சேவையில் தற்போது காணப்படுகின்ற பட்டதாரிகளுக்கான பதவி வெற்றிடங்கள் குறித்து அரச நிறுவனங்களிலிருந்து தகவல்கள் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அரச சேவைகள் மற்றும் மாகாண, உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் நிரந்தரமாக்குவதற்காக மேற்படி தகவல்கள் சேகரிக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி குறிப்பிட்டார்.
தற்போது 53,000 க்கும் அதிகமான பட்டதாரிகள் பயிலுனர்களாக அரச சேவையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒரு பகுதியினர் பாடசாலைகளில் இணைக்கப்பட்டிருக்கின்றர்.
இவ்வாறு பாடசாலைகளில் இணைக்கப்பட்டிருப்பவர்கள் ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நேர்முகப் பரீட்சை ஒன்றின் பின்னர் நடவடிக்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக செயலாளர் தெரிவித்தார்.
பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தரமாக்குவதற்கு கடந்த தினங்களில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுன் அதன் அடிப்படையில் அவசரமாக நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்பதாக ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.