ad

பேச்சுவார்த்தை தோல்வி, ஆசிரியர் வேலை நிறுத்தம் தொடரும்.



ஆசிரியர் அதிபர் சங்கங்களின் இன்றைய கலந்துரையாடலின் பின்னர் தங்களது வேலை நிறுத்தச் செயற்பாடுகளை தொடர்வதற்கு முடிவெடுத்துள்ளாக அறிவித்துள்ளது. . 

இந்தக் கலந்துரையாடலில் 31 தொழிற் சங்கங்கள் கலந்துகொண்டன. 

சம்பள முரண்பாடுகளைக் காரணம் காட்டி 3 மாதங்களாக தொடர்ந்து ஒன்லைன் கற்பித்தல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற தொழிற் சங்கங்கள் நேற்று அலரி மாளிகையில் பிரதமருடனான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது. 

இந்த சந்திப்பின் போது சம்பள முரண்பாடுகளை இரண்டு கட்டங்களாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ரபஜபக்ச தொழிற் சங்கங்களுக்கு அறிவித்தார். .


சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின்  தீர்மானங்களுக்கு அமைய  சம்பள முரண்பாடுகளுக்கு உரிய தெகையினை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை 2022 ஜனவரி மாதத்திலும் மீதி இரண்டு பகுதிகளையும் ஒரே தடவையில் 2023 ஜனவரியில் வழங்குவதற்கு அரசு தரப்பு முடிவெடுத்திருந்தது. 

எனினும் குறித்த சம்பள முரணய்பாடுகளை ஒரே தடவையில் தீர்க்குமாறு தொழிற்சங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

தற்போதைய நாட்டின் நிலைமைக்கு அமைய ஒரே தடவையில் தீர்வு வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அரச தரப்பு அறிவித்திருக்கின்றது.