>

ad

Advanced Level Vocational Stream (Thirteen Years Guaranteed Education Programme) call for Applications for Grade 12 Admissions – 2021- in Tamil



இலங்கையில் 11 ஆண்டுகள் கல்வி கற்றதன் பின்னர் அனைத்து மாணவர்களும் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முகம் கொடுக்கவேண்டும். அதில் சித்தியடைகின்ற மாணவர்கள் மாத்திரம் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் சாதாரண தரத்தில் போதிய சித்தியில்லாமல் உயர் தரம் கற்க வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களின் தொகை 80,000 ஆயிரத்திலும் அதிகமாகும். 

அதன் பின்னர் உயர் தரம் கற்கின்ற மாணவர்களில் 10% இலும் குறைந்த மாணவர்களுக்கே பல்கலைக்கழகம் நுழைகின்ற வாய்ப்புக் கிடைக்கின்றது என்பதாக உயர் கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது. க.பொ.த உயர் தரத்தினை நிறைவு செய்து உயர்கல்விக்கான வாய்ப்புக் கிடைக்காமல் கல்வியை முடித்துக்கொண்டு செல்பவர்கள் சாதாரண தரத்துடன் கல்வியை முடித்துக்கொண்டவர்கள் போன்றே சிறிய ஒரு சம்பளத்துக்காக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையில் இவர்கள் குறைந்த சம்பளம் பெறவதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் பயிற்சிகள் போதாமையின் காரணமாக உடலளவிலும் சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. 

இந்த நிலையினை மாற்றியமைப்பதற்காக 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி என்ற கருப்பொருளில் பாடசாலைக் கல்வியுடன் தொழில் கல்வி வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனாக க.பொ.த (சா/த) சித்தியடைந்த சித்தியடையாத அனைவருக்குமே உயர் தரம் பயில்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. அதன் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு பரீட்சார்த்த திட்டமாக நாட்டின் 42 பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு முதல் நாட்டின் அனைத்து மாகாணங்களும் கல்வி வலயங்களும் உள்ளடங்கும் அடிப்படையில் 423 பாடசாலைகளில் இந்த தொழில்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தற்போது 2021 ஆம் ஆண்டுக்காக 519 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

519 பாடசாலைகளின் பெயர்ப் பட்டியழல பதிவிறக்கம் செய்ய   

இந்தக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் ஆரம்ப கட்டமாக 12 ஆம் தரத்திற்கான பாடங்களைப் பயில் வேண்டும். இந்தப் பிரிவில் பொதுவான 09 பாடங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. 

01. மொழி (தழிழ்/சிங்களம்)

02. ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி மற்றும் தொடர்பாடல் திறன்கள்

03. தகவல் தொழிலநுட்பம்

04. கலை

05. குடிமகன் என்ற வகையில் அவசியமான திறன்கள்

06. முயற்சியான்மை திறன்கள்

07. மனித வாழ்ககைக்கு அவசியமான சுகாதாரம் மற்றும் வாழ்வாதார திறன்கள்

08.விளையாட்டு மற்றும் ஏனைய விடயங்கள்

09.தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள்


என தரம் 12 இற்கான பாடங்களை நிறைவு செய்ததன் பின்னர் தரம் 13 இற்கான பாடங்களாக  NVQ 04 மட்டத்திலான தொழில்கல்வி சான்றிதழ் பயிற்சி நெறியினைப் பயல்வதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதற்காக பயில முடியுமான பாடங்கள் குறித்து கல்வி அமைச்சு கீழ்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றது. பிரயோக பாடங்களில் உள்ளடங்கும் தொழில் பாடங்களாவன.

கீழ் குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து NVQ என்றால் என்ன என்பது குறித்து விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். 

https://www.lankajobinfo.com/2021/02/national-vocational-qualification-nvq.html


  • குழந்தை உளவியல் மற்றும் பராமரிப்பு (Child Psychology & Care)
  • உடல்நலம் மற்றும் சமூக பராமரிப்பு (Health & Social Care)
  • உடற்கல்வி மற்றும் விளையாட்டு (Physical Education & Sports)
  • கலை மற்றும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு (Performing Arts)
  • நிகழ்ச்சி முகாமைத்துவம் (Event Management)
  • கலை மற்றும் கைவினை வடிவமைப்பு (Art & Designing)
  • உள்ளக வடிவமைப்பு (Interior Designing)
  • நவநாகரிக ஆடை வடிவமைப்பு (Fashion Designing)
  • கிராபிக் வடிவமைப்பு (Graphic Designing)
  • கலை மற்றும் கைவினை வடிவமைப்பு (Art & Crafts)
  • தரை வடிவமைப்பு (Landscaping)
  • தோட்டக்கலை விவசாய கற்கைகள் (Applied Horticulture Studies)
  • கால்நடை உற்பத்திக் கற்கைகள் (Livestock Product Studies)
  • உணவு பதப்படுத்தல் கற்கைகள் (Food Processing Studies)
  • நீர்வளக் கற்கைகள் (Aquatic Resource Studies)
  • பெருந்தோட்ட உற்பத்திக் கற்கைகள் (Plantation Product Studies)
  • கட்டுமானத் தொழில்நுட்பக் கற்கைகள் (Construction Studies)
  • மோட்டார் வாகன தொழில்நுட்பக் கற்கைகள் (Automobile Studies)
  • மின் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பக் கற்கைகள் (Electrical Electronic Studies)
  • நெசவு மற்றும் ஆடை வடிவமைப்புக் கற்கைகள் (Textile & Apparel Studies)
  • உலோக புனைவுக் கற்கைகள் (Metal Fabrication Studies)
  • அலுமினியக் புனைவுக் கற்கைகள் (Aluminium Fabrication Studies)
  • உற்பத்திமுறையியல் கற்கைகள் (Manufacturing)
  • கணினி வன்பொருள்மற்றும் வலையமைப்பு (Computer Hardware and Networking)
  • சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் (Tourism & Hospitality management)
  • சுற்றாடல் கற்கைகள் (Environmental Studies)
  • இடப்பெயர்வு மேலாண்மை கற்கைகள் (Logistics studies)
  • விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் கற்கைகள் (Sales and marketing studies)
NVQ பாநெறி ஒன்றினை எவ்வாறு தெரிவு செய்வது என்பது குறித்து விளக்கம் பெற கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்





519 பாடசாலைகளின் பெயர்ப் பட்டியழல பதிவிறக்கம் செய்ய   Click here

2021 ஆம் ஆண்டு உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித் திட்டத்தில் பயில்வதற்கான விண்ணப்பித்தல் விபரத்தினைப் பார்வையிட Click here

விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்க  Click here