>

ad

How to Become a Lawyer in Sri Lanka - in Tamil




இலங்கையில் கல்வித் தகையை (Academic Qualification)  அடிப்படையிலான சட்டக் கற்கைநெறி,  தொழில் தகைமை  அடிப்படையிலான (Professional Qualification) சட்டக் கற்கைநெறி என இரண்டு வகையான கற்கைநெறிகள் காணப்படுகின்றன. 

கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப்பானப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் என்பன கல்வித் தகைமை அடிப்படையிலான சட்டமானிப் பட்டப் பாடநெறிகளை வழஙக்குகின்றன. 

மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் கொழும்பு, பேராதனை, யாழ்ப்பானம் போன்ற பல்கலைக்கழகங்களில் இந்தப் பாடநெறியினைப் பயில்வதற்கு க.போ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கவேண்டும் என்பதுடன், கொதலாவலை  பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு உயர்தரப் பரீட்சையில் 2 திறமைச் சித்திளுடன் ஒரு சாதாரண சித்தியேனும் பெற்றிருக்கின்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. எனினும் இவற்றுக்காக மேலும் சிலவகையான தகைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

இந்தப் பாடநெறிகளுக்கள் தவிர எந்த வயதினரும் பயல்வதற்கு முடியுமான சட்டமானிப் பட்டப் பாடநெறிகள் சிலவும் காணப்படுகின்றன.

திறந்த பல்கலைக்கழக சட்டக் கற்கைநெறி.




திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டம் பயில்வதற்காக நுழைவுப் பரீட்சை ஒன்றிற்கு முகம் கொடுக்கவேண்டும். க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தி அல்லது அதற்கு சமமான தகைமை உள்ள யாராயினும் வயது வித்தியாசமின்றி இந்த நுழைவுப் பரீட்சைக்குத் தோற்றலாம், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு துறையில் பெற்றுக்கொள்ளப்படுகின்ற அடிப்படைப் பாடநெறி (மட்டம் 2) க.பொ.த (உ/த) பரீட்சைக்கு சமமான தகைமையாகக் கருதப்படும்.

ஏனைய பல்கலைக்கழகங்களின் சட்டப் பாடநெறிகளுக்கு தாய்மொழி மற்றும் ஆங்கிலப் பாடங்களில் திறமைச் சித்தி இருக்கவேண்டும் என்பதாகக் குறிப்பிட்டப்படபோதிலும் இலங்கை திறந்த பல்கலை்கழகத்திற்கு இந்த தகைமை அவசியமானதாக இல்லை என்பதால் அதிக அளவானவர்களுக்கு இந்தப் பாடநெறிக்கு விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கபெறுகின்றது.


நுழைவுப் பரீட்சையின் கட்டமைப்பு 

கிரகித்தல் பரீட்சை தழிழ் அல்லது சிங்கள மொழி 1 1/2 மணித்தியாலயம்
ஆங்கில மொழி 1 1 1/2 மணித்தியாலயம்
பொது விவேகம்  1 மணித்தியாலயம்

என்ற அடிப்படையில் 3 வினாப்பத்திரங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். இந்த வினாப்பத்திரங்களில் ஒவ்வொன்றிரும் 25% இலும் கூடிய புள்ளிகள் பெற்றவர்கள் சித்தியடைந்தவர்களாகக் கருதப்படுவர். எனினும் அதிக புள்ளிகள் பெறுகின்ற குறிப்பிட்ட தொகையினரே பாடநெறிக்கு உள்வாங்கப்படுவர். 

இவற்றுக்கு மேலதிகமாக சட்டக்கல்லூரியில் பயின்று சட்டத்துறையில் பிரவேசித்திருப்பவர்கள் நுழைவுப் பரீட்சை இன்றியே இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டம் தொடர்பான பட்டப் பாடநெறியினைத் தொடரலாம். இவ்வாறானவர்களு பாடநெறியின் முதலாவது வருடம் பயிலவேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியா 4 வது மட்டத்திலிருந்து தொடர்வார்கள். இந்த முறைமை ஊடாக சட்டக்கல்லூரியில் பயில்கின்றவர்களுக்கும் சட்டத்துறையில் பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. 

இந்தப் பாடநெறியானது
  • திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி முறை என்ற அடுப்படையில் சட்டத்துறையின் பிரதான பாடங்கள் தொடர்பில் அறிவினைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டப்படுகின்றது. 
  • அறிவுத்திறன் விருத்தி, ஒப்பீட்டுத் திறன், விமர்சிக்கும் திறன் போன்றன வருத்தி செய்யப்படல்.
  • பிரயோக அடிப்படையில் சட்டம் குறித்த அறிவினை வழங்குதல்
  • நிகழ்கால பிரச்சினைகள் தொடர்பில் ஆரயும் திறனும் அவைகளுக்கு சட்டத்தினை உபயோகிக்கும் திறன்களையும் விருத்தி செய்தல்.
  • ஆலோசனை வழங்கும் திறன் மற்றும் முன்வைக்கும் திறன் என்பவற்றை விருத்திசெய்தல்
என்ற அடிப்படையில் கட்டமைகட்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடநெறியினை தங்களது பிரதேசங்களிலே இருந்துகொண்டு பயிலமுடியுமானது இதன் விசேட அம்சமாகும்.  இந்தப் பாடநெறியானது கொழும்பு, கண்டி, மாத்தறை, அனுராதபுரம், குறுநாகலை, பதுள்ளை, யாழ்ப்பானம், மட்டக்களப்பு போன்ற நிலையங்களில் காணப்படுகின்றது. இங்கு அனைத்து நிலையங்களிலும் தமிழ் மூலம் பயிலலாம். கண்டி கொழும்பு ஆகிய நிலையங்களில் ஆங்கில மொழியில் பயிலலாம். 

இந்தப் பாடநெறிக்காக தெரிவாகிய பின்னர் பதிவு செய்கின்ற தினத்திலிருந்து 12 வருடங்களுக்குள் இந்தப் பாடநெறியினை பூர்ததி செய்யலாம் என்பது இந்தப் பாடநெறிக்கான விசேட அம்சமாகும். 

ஏனைய பல்கலைக்கழகங்களைப் போலவே இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் சட்டம் தொடர்பான பட்டம் கல்வித் தகைமையாகவே கருத்தப்படுகின்றது.  இந்தப் பட்டத்தைப் பெற்றதன் பின்னர் தொழில் தகைமையினைப் பூர்ததிசெய்வதற்காக இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதி ஆண்டுப் பரீட்சைகளுக்குத் தோற்றி சித்தியடைதல் வேண்டும். சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதாக இருப்பின் க.பொ.த (சா/த) பரீட்சையின் தாய்மொழிக்கு திறமைச்சித்தி பெற்றிருத்தல் வேண்டும். இந்த தகைமை இல்லாதவிடத்து இறுதி ஆண்டுப் பரீட்சைக்கு பதிவு செய்ய முடியாமல் போகலாம். எனவே இலங்கைத் திறநத் பல்கலைக் கழகத்தில் சட்டப் பாடநெறியினை பயில்கின்ற போதே  சட்டக் கல்லூரிக்கான கல்வித் தகைமைகளை வளர்த்துக்கொள்வது சிறந்ததாகும். 

சட்டக் கல்லூரியின் இறுதி ஆண்டுப் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் உயர் நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்துகொள்ளலாம். அதன் பின்ன சட்டத்துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடமுடியும். ( சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையின் பின்னர் ஒரு சிரேஷ்ட வழக்கறிஞரிடம் சில காலம் பயிலுனராக  சேவையாற்ற வேண்டும்.) 



இறுதியாக 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்கான நுழைவுப் பரீட்சைகள் கொவிட் 19 நோய்ப்பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருக்கின்றது. அந்தப் பரீட்சையின் பின்னரே 2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படலாம். 

பாடநெறி தொடர்பான மேலதிக விபரங்களை http://www.ou.ac.lk/ எனும் இணையத்தளத்தில் அல்லது 011288432 எனும் தொலைபேசி இலங்கத்தில் பதிவறிக்கம் செய்யலாம். 

பாடநெறி குறித்த தகவல்கள் அடங்கிய குறிப்பினை கீழுள்ள லிங்கில் கிளிக் செய்து பார்வையிடலாம். 


கொதலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் பட்டப்படிப்பு



ஜெனரல் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற 4 வருட சட்டவியல் பாடநெறியினைப் Bachelor of Laws Degree Programme  பயில்வதற்கு மாணவர்களுக்கு சந்தரப்பம் வழங்கப்படுகின்றது. இந்தப் பாடநெறிக்காக 2 அடிப்படைகளில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். 

  • கெடெட் அதிகாரிகாரிகளாக  (Cadet Officer) இணைத்துக்கொள்ளப்பட்டு பாடநெறி பயில சந்தர்ப்பம் வழங்குதல்
  • சிவில் அடிப்படையில் (Non Military / Fee Levying Students)  பாடநெறி பயில சந்தர்ப்பம் வழங்குதல்.

என்பனவே அந்த இரண்டு முறைகளாகும். 

இங்கு சிவில் அடிப்படையில் பாடநெறியினைப் பயில்வதானால் பாடநெறிக்கான கட்டணம் செலுத்தவேண்டும். அத்துடன் க.பொ.த (உ/த) சித்தியடைந்திருப்பதுடன் 30 வயதிலும் குறைந்தவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பிரிவினருக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதில்லை. 

 கடெட் அதிகாரிகளாக இணைத்துக்கொள்ளவதற்காக கீழ்க்குறிப்பிடுகின்ற நடைமுறை பின்பற்றப்படுகின்றது.  பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கான கல்வித் தகைமைகளுக்கு மேலதிகமாக உடல் தகுதிகளும் இங்கு கவனத்தில்கொளள்ப்படும். அத்துடன் விளையாட்டுத்துறைகளில் திறமைகள் இரப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  18 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே கடெட் அதிகாரிகளாக இணையலாம். இவர்களுக்கு சட்டத்துறை பட்டப்படிப்புப் பாடநெறிக்கு மேலதிகமாக இராணுவப் பயிற்சியும் வழங்கப்படும். பாடநெறி முடிவில் சட்டவியல் பட்டம் ஒன்றுடன் இராணுவ, கடற்படை, வான்படை கெடெட் உத்தியோகத்தர் ஒருவராவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

சிவில் அடிப்படையில் அல்லது கெடெட் உத்தியோகத்தர் ஒருவராக சட்டவியல் பாடநெறியினைப் பூர்த்தி செய்து அதன் பின்னர் சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சையில் தோற்றிய பின்னர் சட்டத்தரணி ஒருவராக கடமையாற்றலாம். 

2021 வருடத்தில் இந்த பாடநெறிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி 2021.09.20 ஆகும் பாடநெறிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர். 


எனும் லிங்கில் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்


வௌிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சட்டம் சம்பந்தமான பட்டம் பெறல்.



அனுமதிக்கப்பட்ட வௌிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ( Recognized Foreign University) சட்டவியல் பட்டம் பெற்றவர்களுக்கும் எமது நாட்டில் சட்டத்துறையில்  தொழில் புரிவதற்கான வாய்ப்பிருக்கின்றது.   சில வௌிநாட்டு பல்கலைக்கழகங்களின் முகவர்களாக செயற்படுகின்ற கல்வி நிறுவனங்களின் ஊடாக இலங்கையிலிருந்தே சட்டவியல் பாடநெறியினை நிறைவு செய்யலாம். எனினும் அவர்கள் இலங்கை சட்டக்கல்லூரிய் அனைத்து பரீட்சைகளிலும் சித்தியடைய வேண்டும். இதற்காக அதிக காலம் விரயமாகலாம்.  அது போன்று அதிக பணமும் செலவிடவேண்டி ஏற்படுவதுண்டு.

லன்டன் பல்கலைக்கழதை்தின் ( University of London) சட்டவியல் பட்டமானது (London LLB)  எமது நாட்டில் பிரபலமானதொன்றாகும். இலங்கையில் சட்டத்துறையில் பணியாற்றுகின்ற பெரும்பாலானவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் சட்டமானிப் பட்டம் பெற்றவர்களாக இருக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விபரங்களை http://www.londoninternational.ac.uk/ எனும் லிங்கில் பெற்றுக்கொள்ளலாம்.



எவ்வாறாயினும் வௌிநாடுகளில் காணப்படுகின்ற பல்கலைக்கழங்களின் சட்டமானிப் பட்டப்பட் பெறுகின்றவர்கள்  (Incorporated Council  of legal Education  நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டக் கல்லூரி ஒன்றிலிருந்து சட்டம் பயின்றிருக்க வேண்டும் என்பதுடன்  சட்டக் கல்லூரியின் 3 வருடங்களுக்குமான பரீச்சைகளுக்கு முகம்கொடுத்து சித்தியடைய வேண்டும் என்பதனைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

சட்டம் பயில்வதற்கான இலகுவான வழி.



அரச பல்கலைக்கழகங்களில் சட்டமானிப் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பினை இழந்தவர்கள்  சட்டக்கல்லூரியில் பிரவேசிப்பதற்காக முயற்சிப்பதே அவர்களுக்கான சிறந்த தெரிவாகும். மிகவும் குறைந்த செலவில் ஒப்பீட்டளவில் குறைந்த காலப்பகுதியில் சட்டத்தரணி ஒருவராவதற்கான வாய்ப்பு சட்டக்கல்லூரியில் பிரவேசிப்பதன் ஊடாக மாத்திரமே கிடைக்கப் பெறுகின்றது. இதற்காக சட்டக் கல்லூரியினால் நடாத்தப்படுகின்ற நுழைவுப் பரீட்சையில் சித்தியடையவேண்டும்.



இலங்கை சட்டக் கல்லூரிக்கு பிரவேசிப்பதற்கான அடிப்படைத் தகைமையாக க.பொ.த (உ/த) பரீட்சையில் 2 C, 1S சித்தி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் பிரதான மொழி (தழில் அல்லது சிங்களம்) பாடங்களில் திறமைச் (C) சித்தி பெற்றிருக்க வேண்டும். 

 சட்டக் கல்லூரியின் ஊடாக சட்டம் தொடர்பான பட்டம் ஒன்று வழங்கப்படுவதில்லை என்பதுடன் சட்டத்துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதற்கான தகைமையினை (attorney -at  Law) மாத்திரமே வழங்குகின்றது. 

இந்த எந்த அடிப்படையில் சட்டத்துறை பயின்றதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவராக சத்தியப்பிரமானம் செய்து கொண்டு சடடத்துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடமுடியும். அல்லது நீதிமன்ற சட்டத்தரணிகளாக தொழில் புரியமுடியும். அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து அரசாங்க சட்டத்தரணியாகலாம். அல்லது சட்ட ஆலோசனை சேவை வழங்கும் நிறுவனங்களில் சேவையாற்றலாம். பல்கலைக்கழகங்களில் விரிவுரையதலராகவும், வங்கிகளிலும் பணியாற்றலாம். இவை தவிர நீதிபதிகளாகவும் பணியாற்றுவதற்கான வாய்ப்பிருக்கின்றது.'

சட்டமானி பட்டம் தொடர்பாக அறிமுகம் ஒன்றினை வழங்கும் நோக்கில் இந்தக் கட்டுரை உங்களுக்காகத் தரப்படுகின்றது. அசிறு வேதித கருணாரத்ன அவர்கள் தினமினவுக்கு எழுதிய கட்டுரை ஒன்றினைத் தழுவி இந்த ஆக்கம் உங்களுக்காக lankajobinfo.com இணையத்தளத்தினால் தொகுக்கப்பட்டது.