இலங்கை தொழில்நுட்பவியலாளர் சேவை தரம் வகுப்பு 2 தரம் II இற்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை தொழில்நுட்பவியலாளர் சேவை என்பது யாது?
இலங்கையில் காணப்படுகின்ற அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற கணனித் துறை சார்ந்த பிரிவுகளில் கணனி சார்ந்த பணிகளுக்காக நியமிக்கப்படுகின்றவர்களே இலங்கை இலங்கை தொழில்நுட்பவியலாளர் சேவை க்குரிய பணியாகும்.
அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் முதன்மையான சேவையாக இருக்கின்ற நிலையில் கொள்கைகளை அமுலாக்கம் செய்வதில் உதவியாக இருப்பதுடன் உள்ளக, வெளியக நிறுவனங்களுடனான முறையான தொடர்புகளையும் ஒருங்கிணைப்பினையிம் பேணுதல். அத்துடன் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையின் புதிய போக்குகளைப் பயன்படுத்துதல் ஆகியன மூலம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரச சேவையிலிருந்து எதிர்பார்க்கப்படும் சேவையினை யதார்த்தமாக்குவதற்கென சிறந்ததோர் அரச சேவையினைக் கட்டியெழுப்புவதற்குத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதே இலங்கை தகவல் மற்றம் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகிபாகமாகும் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை தொழில்நுட்பவியலாளர் ஆட்கள் எந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்?
பொதுவாக நிலவுகின்ற வெற்றிடங்களின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் இலங்கை தொழில்நுட்பவியலாளர் சேவைக்காக ஆட்கள் சேர்க்கப்படுவதுண்டு.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின்
வகுப்பு 1 இன் தரம் III, இது 100% திறந்த அடிப்படையில் அமையும்
வகுப்பு 2 இன் தரம் II, இது 700% திறந்த அடிப்படையிலும் 30% மட்டுப்படுத்ப்பட்ட அடிப்படையிலும் அமையும்
வகுப்பு 3 இன் தரம் III இது 700% திறந்த அடிப்படையிலும் 30% மட்டுப்படுத்ப்பட்ட அடிப்படையிலும் அமையும்
என்ற அடிப்படையில் மூன்று தரங்களுக்காக திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்புகள் இடம்பெறும்.
01. திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில்
குறித்த பதவிக்காக குறிப்பிட்ட ஏதாவது ஒரு சேவையில் இத்தனை காலம் சேவையாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லாமல் உரிய கல்வித் தகுதிகளை பெற்றுள்ளவர்கள் திறந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். எனினும் அவர்களின் வயதெல்லை மிகக் குறுகியதாக இருக்கும் .
02. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை
ஆசிரியர் சேவையில் அல்லது அதிபர் சேவையில் ஏற்கனவே இருக்கின்றவர்களுக்கு இந்த சேவையில் இணைவதற்காக அதிக சந்தர்ப்பம் வழங்கும் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் சேவை அனுபவம் இருக்கின்ற அதே நேரம் போதுமான கல்வித் தகுதகளையும் பெற்றவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலமாக தெரிவு செய்யப்படுவர்.
வருடத்தில் எத்தனை பதவி வெற்றிடங்கள் உருவாகின்றன.
இந்த சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றவர்கள் மற்றும் சேவைக்காலத்தில் மரணிக்கின்றவர்கள் சேவையினை விட்டுச் செல்கின்றவர்கள் என வெற்றிடமாகும் பதவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றிடங்கள் உருவாகின்றன.
ஆனால் இத்தனை வெற்றிடங்கள் தான் உருவாகும் என்பதாகக் குறிப்பிட முடியது.
எனினும் இந்த சேவையில் வகுப்பு II இல் 455 பேர்கள் மொத்தமாக கடமையாற்ற வேண்டும். அந்த அடிப்படையில் ஒரு முறை 10 முதல் 25 வரையான பதவி வெற்றிடங்கள் ஏற்படலாம் என்பதாக ஊகிக்கலாம்.
இலங்கை தொழில்நுட்பவியலாளர் சேவையின் சம்பள அளவு என்ன?
இலங்கைதொழில் நுட்பவியலாளர் சேவையின் சம்பள திட்டமாக
36585 - 10 x 660 - 11 x 755 - 15 x 930 - 65 440 என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை நிர்வாக சேவையில் முதலாவது நியமனம் பெறுகின்ற ஒருவர்
ஆரம்ப சம்பளம் - 36,585.00
வா.செ. கொடுப்பனவு 7,800.00
வேறு கொடுப்பனவு 2,500.00
தொலைபேசி கொடுப்னவு 2,500
என மொத்த சம்பளமாக 49,385 ரூபா கிடைக்கப்பெறும்.
இதில் ஆரம்ப சம்பளத்தில் 7% விதவைகள் தபூதாரர் அனாதைகள் நிதியத்திற்கு கழிக்கப்படும்.
அத்துடன் பட்டப்பின் படிப்புகளுக்காக அரச செலவில் சம்பள விடுமுறையுடன் வௌிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் எவ்வாறு கோரப்படுகின்றன?
பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவ்களும் பரீட்சைக்கான நிபந்தனைகளும் அரச வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரிக்கப்படும். அத்துடன் இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்படும்.
பரீட்சைக்கான வயதெல்லை என்ன?
- திறந்த போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரப்படும் திகதிக்கு 21 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 35 வயதிலும் குறைந்தவர்களாக இருக்கவேண்டும்.
- மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு வயதெல்லை கணக்கில் கொள்ளப்படுவதில்லைை
திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் ஆட்சேர்த்தல்
திறந்த போட்டிப் பரீட்சைக்கான கல்வித் தகைமை என்ன?
வகுப்பு 2 இன் தரம் II இற்கான திறந்த அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - கல்வித் தகைமைகள்
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பம் தொடர்பான
அல்லது
I. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பிரதான பாடம் ஒன்றாக கணனி விஞ்ஞான /தகவல் தொழில்நுட்பத்துடனான பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும் (குறைந்தது பட்டத்தின் 1/3 பங்கானது கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்)
அத்துடன்
II. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்
அல்லது
I. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்தான பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்
அத்துடன்
II. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்
வகுப்பு 2 இன் தரம் II இற்கான மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - அனுபவம்
I. சேவையின் 3 ஆம் வகுப்பு I ஆந் தரம் அல்லது II ஆந் தரத்தின் உத்தியோகத்தராக இருத்தல் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுச் சுற்றறிக்கை இலக்கம் 01/2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு ஒத்திசைவாக ஒழுக்காற்றுத் தண்டனைக்கு உட்படாதிருத்தல்.
அல்லது
I. சேவையின் 3 ஆம் வகுப்பு III ஆந் தரத்தில் ஐந்து (05) வருட முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்துள்ள, நியமனத்தில் உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகத்தராக இருத்தல் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுச் சுற்றறிக்கை இலக்கம் 01/2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு ஒத்திசைவாக ஒழுக்காற்றுத் தண்டனைக்கு உட்படாதிருத்தல்.
அத்துடன்
II. இச்சேவைப்பிரமாணக் குறிப்பில் 7.3.1.2.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்.
ஆட்சேர்ப்பு முறை எவ்வாறு அமையும்?
எழுத்து மூலப்பரீட்சையில் தகைமை பெறுவோர் பொதுப் பரீட்சையின் ஊடாக தகைமைகள் பரிசோதிக்கப்படும். இந்த நேர்முகப் பரீட்சைக்கு புள்ளிகள் வழங்க்கப்படமாட்டாது. அடுத்து வாய்மொழிப் பரீட்சைக்காக அழைக்கப்படுவர். இரண்டு பரீட்சைகளிலும் அதிக புள்ளி பெறுகின்றவர்கள் தெரிவு செய்யப்படுவர். அதனை அடுத்து வாய்மொழிப் பரீட்சை இடம் பெற்று இவை இரண்டிலும் பெறுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் நியமிக்கப்படுவர்.
எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும்?
திறந்த போட்டிப் பரீட்சை 3 பாடங்களைக் கொண்டதாக இருக்கும்
1. தகவல் மற்றும் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பம்(மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்) 2 மணித்தியாலயம் கொண்டது
2. உளச்சார்புப் பரீட்சை (மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கப்படும்) 2 மணித்தியாலயம் கொண்டது)
3. பொது விவேகம். (மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கப்படும்) 2 மணித்தியாலயம் கொண்டது )
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2 பாடங்களைக் கொண்டதாக இருக்கும்
1. தகவல் மற்றும் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பம் சம்பவக் கற்கை (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்) 2 மணித்தியாலயம் கொண்டது
2. உளச்சார்புப் பரீட்சை (மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கப்படும்) 2 மணித்தியாலயம் கொண்டது)
இவ்வினாத்தாள்கள் சேவையின் கடமைகள் பொருட்டு விண்ணப்பதாரரது தகுதியுடைமையினையும் ஆற்றலினையும் பரீட்சிப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பரீட்சையானது போட்டிப் பரீட்சை எனினும் ஒவ்வொரு பாடங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ள புள்ளிகளில் ஆகக் குறைந்தது 40% மேனும் விண்ணப்பதாரரால் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியதுடன் பரீட்சையின் மொத்தப் புள்ளிகளிகளில் ஆகக் குறைந்தது 50% மேனும் பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும். ஒவ்வொரு விடைத்தாள்கள் தொடர்பாகவும் தெளிவற்ற கையெழுத்துக்கள் மற்றும் வசன அமைப்புக்களில் பிழைகள் காணப்படின் அதற்காக புள்ளிகள் குறைக்கப்படும். போட்டிப் பரீட்சை தொடர்பாக ஒதுக்கப்பட்டுள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கையை நிரப்பும் விதத்தில், பெற்றுக்கொண்ட புள்ளிகளது வரிசைக்கிரமம் கட்டாயமாக பின்பற்றப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
பரீட்சைக்க கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல்
ஒன்லைன் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். பரீட்சைக் கட்டணமாக 600 ரூா அரவிடப்படும்.
விண்ணப்ப முடிவு 25 ஒக்டோபர் 2021
மேலதிக தகவல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் பெற.
ஒன்லைன் விண்ணப்பங்களை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் சமர்ப்பிக்கலாம்.
சேவைப் பிரமாணக் குறிப்பினை பதிவிக்கம் செய்ய