2021.08.30 ஆம் திகதி விண்ணப்பம் பூரணப்படுத்துவது தொடர்பான வௌியிட்ட கடிதம் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
2021.09.10 ஆம் திகதி விண்ணப்பம் பூரணப்படுத்துவது தொடர்பான வௌியிட்ட கடிதம் அடுத்து தரப்படுகின்றது.
கடிதத்தின் சுருக்கம்.
குறித்த திட்டத்திற்கு அமைய இதுவரையில் எந்த தகவலையும் உள்ளீடு செய்யதவர்களுக்கு 12, 13,14 ஆம் திகதிகளில் தகவல்களை உள்ளீடு செய்ய வாய்ப்பளிக்கப்படுகின்றது. (அவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்குகளில் சென்று பதிவு செய்யலாம்.)
தகவல்கள் உள்ளீடு செய்தவர்களில் மேலும் தகவல்கள் உள்ளீடு செய்ய முடியாமல் போதல் அல்லது தகவல்களை மாற்ற முடியாமல் போதல் போன்ற காரணங்களால் படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் போனவர்களுக்கு எதிர்காலத்தில் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
தகவல்கள் பூரணப்படுத்தும் போது தவறுகள் நிகழ்ந்திருப்பின் அல்லது முக்கிய தகவல்கள் உள்ளிட முடியாது போயிருப்பின் தங்களது மாவட்டங்களுக்குரிய கீழ்க்குறிப்பிடும் ஈமெய்ல் முகவரிக்கு குறித்த விடயங்களை அறிவித்து சந்தரப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்படித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களிடமிருந்து அவசியப்படும் தகவல்களைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக இணையவழி மென்பொருளுக்கு 2021.08.13 ஆந் திகதி பின்வரும் இணைப்பின் (Link) இன் மூலம் பிரவேசித்து (Login) செய்து தகவல்களை உள்ளீடு செய்தல் வேண்டும்.
02. ஒவ்வொரு பயிலுநர் உத்தியோகத்தரும் மேற்படி இணைப்புக்களுக்குப் பிரவேசித்து தரவுகளை உள்ளீடு செய்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கால அளவு இந்தப் பதிவின் இறுதியில் காட்டப்பட்டுள்ளது. குறித்த திகதியினுள் இணையவழி மென்பொருளினுள் பிரவேசிக்க முடியாது போகும் பயிலுநர்களுக்கு சிறிது காலத்தின் பின்னர் மற்றொரு திகதியை வழங்க முடியும்.
03. அரச நிறுவனங்களில் பயிற்சி பெற்றுவரும் கிட்டத்தட்ட 60000 பட்டதாரி பயிலுநர்களின் தகவல்களுடன் அவர்களின் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் இச்செயற்பாடு இடம்பெறுவதனால் எல்லா பட்டதாரி பயிலுநர்களும் தமது தகவல்களை உள்ளீடு செய்தல் வேண்டும்.
உ. தாங்கள் இப்பயிற்சிக்காக விண்ணப்பிக்கும் போது தங்களால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கம் பயனர் பெயராகக் காணப்படும்.
உதாரணம் :791234567V அல்லது 197912340567
4. முதலில் REQ_ எனக் குறிப்பிட்டு தாங்கள் ஏற்கனவே பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன இலக்கத்தின் இறுதி இலக்கம் 03 இனை முதலிலும், தாங்களால் மேற்படி பயனர் பெயராக குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கம் 03 இனை இரண்டாவதாகவும் எடுத்துக்
கொண்டால் உங்களது கடவுச் சொல் உருவாகும்.
உதா-: நியமன இலக்கம்: COL-01-00210
தே.௮.இ: 7912345675V
கடவுச் சொல் - REQ_210675
05. விண்ணப்பத்தை நிரப்பும் போது சிங்களம / தமிழ் எழுத்துக்களை தட்டச்சுச்
செய்கையில் Unicode Font இனைப் பயன்படுத்துங்கள்.
கீழே குறிப்பிடப்படும் இலக்கங்களை உடையவர்கள் மாத்திரம் குறித்த தினங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
ஒரு நாளைக்கு பதிவு செய்வதற்காக 1000 பேர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்படிகின்றது. முதல் 250 பேர் முதல் லிங்கிலும் 251 முதல் 500 வரையானவர்கள் இரண்டாவது லிங்கிலும் 501 முதல் 750 வரையானவர்கள் மூன்றாம் லிங்கிலும் 751 முதல் 1000 வரையானவர்கள் நான்காவது லிங்கையும் பயன்படுத்தி தகவல்களை பூர்த்தி செய்தல் வேண்டும்.
இரண்டாவது வௌியிடப்பட்ட பட்டியல்
2021.08.30 அன்று வௌியிடப்பட்ட மூன்றாவது அறிவுறுத்தல்
0 Comments