>

ad

ஆசிரியர்கள் அதிபர்கள் கல்வி அதிகாரிகளுக்கு NIE ஊடாக சர்வதேச அங்கீகாரம் கொண்ட விசேட பட்டப்படிப்புக் கற்கை




கல்வித் துறையில் பணியாற்றுக்கின்ற நிர்வாக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், பிரிவென் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு தேசிய கல்வி நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் கொண் விசேட பட்டப்படிப்பு கற்கை நெறி ஒன்றினை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இலங்கை முழுவதும் காணப்படுகின்ற 45 நிலையங்களில் இந்த கற்கை நெறி நடைபெற இருப்பதுடன். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களில் நடைபெறுகின்றது.

120 Credits களைக் கொண்ட இந்த பட்டப்படிப்பு பாடநெறி 14 பாடப்பரப்புகளாக 4 வருடங்களில் பூர்தி செய்யும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வருட இறுதியில் 4000 பேர் இந்தப் பட்டப்படிப்பினை பூர்தி செய்யவிருப்பதுடன் அடுத்த வருடத்துக்காக 5000 பேர் இந்தப் பாடநெறிக்காக உள்வாங்கப்படவிருக்கின்றனர்.

இந்தப் பாடநெறியினைப் பயின்று கல்வித் துறையினை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கல்வி அமைச்சு கல்வித் துறை சார்ந்தவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றது.

Post a Comment

0 Comments