>

ad

இன்று அமைச்சரவையில் உரிய தீர்மானம் மேற்கொள்ளப்படாவிட்டால் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்னும் கடுமையாகும்.



சம்பள முரன்பாடுகள் நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் இன்று (09) தீர்மானம் மேற்கொள்ளப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்றும் கடுமையாகும் என்பதாக ஆசிரியர் அதிபர் தொழற்சங்க கூட்டமைப்பிற்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். 

ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றிய சில ஆசிரியர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்கின்ற இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக ஒரு போதும் தங்களை பின்டையச் செய்யமுடியாது என்தாக அவர் தெரிவித்தார்.  

நேற்றைய தினம் (08) குருமெதுர மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார். 

ஆசிரியர் போராட்டங்கள் முடிவடைந்துவிட்டதாக  அரசாங்கம் செய்தி பரப்பி வருவதாகவும் தாங்கள் ஆரம்பித்திருக்கின்ற எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதாகவும் அவைகள் தொடராக முன்னெடுக்கப்படுவதாகவும் போரட்டத்தைப் பொறுத்தவரையில் இன்றைய தினம் மேற்கொள்ளப்படுகின்ற அமைச்சரவைத் தீர்மானம் மிக முக்கியமான இடத்தைப் பெறுவதாகவும் குறிப்பிட்ட அவர் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பள முரன்பாடு தீர்க்கப்படும் என்பதாக நம்புவதாகவும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments