>

ad

ஆசிரியர் அதிபர் சம்பள முரன்பாடுகளுக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு.



ஆசிரியர் அதிபர் சம்பள முரன்பாடுகளை எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் ஊடாகத் தீர்ப்பதற்கு நேற்று (02) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

அதன் அடிப்படையில் ஆசிரியர் - அதிபர் சம்பள முரன்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சம்பள ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. 


கடந்த 24 வருடங்களாக மேற்படி சம்பள முரன்பாடு காணப்படுகின்றது என்பதனையும் அது அதற்கு அவசரமாக தீர்வு காணப்படவேண்டும் என்பதாகவும் அமைச்சரவை ஏற்றுக்கொள்கின்றது. எனினும் நாடு முகம் கொடுத்த கொவிட் நிலைமையினால் பொருளாதார ரீதியாக பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கின்ற நிலையில் சம்பள முரன்பாடுகளைத் தீர்ப்பதற்கு அதிக அளவிலான நிதி அவசியப்படுகின்ற காரணத்தினால் தற்போது உடனடியாக குறித்த பிரச்சினையைத் தீர்க்க முடியாத நிலை காணப்படுகின்றது என்ற விடயம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

அத்துடன் அசிரியர் அதிபர் சம்பள முரன்பாடுகளைத் தீர்ப்பதற்காக அவர்கள் வேண்டியிருக்கின்ற சம்பள ஏற்றங்களின் அடிப்படையில் 6800 கோடி ரூபா தேவைப்படுவதாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

ஆசிரியர் அதிபர் சம்பள முரன்பாடுகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்பதழைன அரசு ஏற்றுக்கொள்வதுடன் அதற்கான தீர்வு அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படும் என்பதாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

W.K. பிரசாத் மஞ்சு - மவ்பிம.
 


Post a Comment

0 Comments