ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பள முரன்பாடுகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இன்று மாலை அமைவச்சரவையில் சமர்க்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.
சிறீலங்கா பொது ஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தொரிவித்தார்.
இதற்கிடையில் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்று கடமைக்கு சமூகமளிக்கவேண்டும் என்ன சுற்றுநிருபத்திற்கு அமைய பாடசாலைகளின் கல்வி சார்ந்த மற்றும் கல்வி சாராத ஊழியர்கள் அனைவரும் இன்று கடமைக்கு சமூகமளிக்கவேண்டும் என்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கடிதம் ஒன்றினை வௌியிட்டிருந்தார்.
அனைத்து மாகாண, வலய, கல்வி உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபார்கள் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் கடமைக்குத் திரும்புவது குறித்த சுற்றுநிருபத்தினைப் பின்பற்ற வேண்டும் என்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவித்தலுடன் தாங்கள் உடன்படுவதில்லை என்பதாகவும் சுமார் 28 ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கள் இணைந்து கூட்டணி ஒன்றாக செயற்படுத்துகின்ற தொழிற்சங்க நடவடிக்ககைகள் தொடர்வதாகவும். ஆசிரியர்கள் அதிபர்கள் தங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழபை்பு வழங்குமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க லங்காஜொப்இன்போ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
அத்துடன் தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சுக்கு அறிவித்திருப்பதாகவும், நிரந்தரமாக்கப்பட்ட நிரந்தரமாக்கபடாத ஆசிரியர்கள் அனைவரும் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் குறிப்பிட்ட அவர். தொழிற் சங்கங்களில் அங்கத்துவம் வகிப்பவதராக இருந்தாலும் எந்தj; தொழிற் சங்கங்களிலுk; அங்கத்துவம் வகிக்காதவர்களாக இருந்த போதிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதன் ஊடாக அவர்களுக்கு ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து தமது தொழிற்சங்க கூட்மைப்பு அவர்களுக்காக முன்னிற்கும் என்பதாககவும் தெரிவித்தார்.
0 Comments