இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
Bachelor of Technology Honours in Engineering
பொறியியல் கல்வியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டத்தினை அரச பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்
கல்வி ஆண்டு 2021/2022
அறிமுகம்.
உயர் தரப்பிரிவில் Combined Mathematics, Physics and Chemistry ஆகிய பாடங்களில் சித்தியடைந்தவர்களுக்கு குறைந்த செலவில் சிறந்த தொரு பொறியியல் சார்ந்த பட்டப்படப்படிப்பொன்றை நிறைவுசெய்கின்ற வாய்ப்பினை இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்கியிருக்கின்றது. பொறியியல் அல்லது எனும் பாடநெறி குறித்து இந்தப் பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
இந்தப் பட்டப்படிப்பானது கீழ்க்குறிப்பிடும் 8 வகையான துறைகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. நீங்கள் விரும்பிய துறையில் பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளலாம்
- Agricultural and Plantation Engineering விவசாயத்துறை
- Civil Engineering குடிசார் (Civil),
- Computer Engineering கணினி
- Electrical Engineering மின்னியல்
- Electronic & Communication Engineering இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்
- Mechanical Engineering இயந்திரவியல்
- Mechatronics Engineering காந்த மின்னனுவியல்
- Textile and Clothing Engineering புடவை மற்றும் ஆடை பொறியியல்
அனுமதித் தகைமைகள்.
- க.பொ.த பரீட்சையில் பொளதீக விஞ்ஞானப் பிரிவில் ஒரே அமர்வில் 3 பாடங்களிலும் சித்தி பெற்றிருந்தும், அல்லது
- இலக்கை நிறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் விஞ்ஞானத்தில் மேலதிக சான்றிதழ் (Advance Certificate in Scienice) கற்கை நெறியினை நெறியினை கணிதம், பொதிகவியல், இரசாயனவியல் பிரிவுகளின் கீழ் நிறைவு செய்திருத்தல்.
இந்தப் பாடநெறி குறித்து பூரண விளக்கத்தினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் வாசித்து பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது
- மூன்று வருடத்திற்குள் Cambridge/Ecloorel தர பரீட்மாயில் கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல் பாடங்களில் குறைந்தது மூன்று (0 சித்திகளை பெற்றிருத்தல். அல்லது
- பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இதற்கு நிகராண தகைமைகள் .
இந்த பாடநெறி நிறைவு செய்ததன் பின்னர் இலங்கைப் பொறியிலாளர் சங்கத்தின் (IFSL) உறுப்பினராவதற்கான தகைமையினைப் பெறுவதற்கு
( Associate Membership) க.பொ.த(உ/த) பரீட்சையில் ஆகக்குறைந்தது இரண்டு (C) சித்திகள் மற்றும் ஒரு (S)சித்தியை பெற்றிருக்க வேண்டும்.
பாடநெறியின் கட்டமைப்பு
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் பாடநெறிகள் அனைத்துமே தொலைகல்வி முறையினை அடிப்படையாகக் கொண்டவை. அனைத்து பாடங்களுக்குமான குறிப்புகள் அடங்கிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். அத்துடன் பாடங்களில் சந்தேகங்களைக் கேட்டறிந்துகொள்வதற்காக வகுப்புக்கள் நடைபெறும். இது தவிர ஒன்லைன் வகுப்புக்கள் என்பவற்றுடன் ஓடியோ வீடியோ கற்றல் சாதனங்களும் தரப்படுகின்றது.
பாடநெறிக்கான சான்றிதழ்
இந்தப் பாடநெறியானது 4 வருடங்களைக் கொண்டது இந்தக் காலப்பகுதியானது விண்ணப்பதாரர்கள் தெரிவுசெய்கின்ற பாடங்களைப் பெறுத்து வேறுபடலம்.
எவ்வாறாயினும் இந்தப் பாடநெறியின் இரண்டாவது வருட முடிவில் டிப்லோமா சான்றிதழ் வழங்கப்படும் விருப்புகின்றவர் 4 வருடங்கள் பாடநெறியினைப் தொடர்ந்து கௌரவ பட்டத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். அதனைத் தொடர்நது Postgraduate Diploma in Technology (PGDipTech) , Master of Technology (MTech) ஆகிய பாடநெறிகளை இலங்கை திறந்த பல்கலத்தில் தொடரலாம்.
கட்டண விபரம்
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திப் பொறுத்த வரை பாடநெறிகளுக்காக கட்டணம் அறவிடப்படும் ஒரு முறை காணப்படுகின்றது. ஒவ்வொரு பாடநெறிகளிலும் உள்டங்குகின்ற பாடநெறிகள் credit களின் அடிப்படையில் குறிப்பிடப்படும். இந்தப் பாடநெறியினைப் பொறுத்தவரையில் 3 ஆம் 4 ஆம் மட்டங்களில் ஒரு credit இற்கு ரூபா 1350/= கட்டணமாக அறவிடப்படுகின்றது. அத்துடன் 5 ஆம் 6 ஆம் மட்டங்களில் ஒரு credit இற்கு ரூபா 2100/= கட்டணமாக அறவிடப்படுகின்றது. இந்தக் கட்டணம் வருடாந்தம் 10% அதிகரித்துச் செல்வதுண்டு.
அத்துடன் வசதிக் கட்டணம் பதிவுக்கட்டணமும் என 2000 ரூபா அளவில் இதனுடன் சேர்த்து அறவிடப்படும் இது வருடத்தில் இரண்டு தவணைகளாக செலுத்தலாம். இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகம் வழங்குகின்ற பாடப்புத்தங்களுக்காக ஒரு கிரடிட்டிற்கு 150 ரூபா கட்டணம் அரவிடப்படும்
அதன் அடிப்படையில்
முதல் 2 வருடங்களுக்கான கட்டணமாக ரூபா 113,000.00
அடுத்த 2வருடங்களுக்கான கட்டணமாக ரூபா 165,000.00
என்ற அடிப்படையில் பாடநெறிக்காகாக மொத்தமாக 278,000 ரூபாவுடன் வரடைாந்த வசதிக் கட்டணமாக ரூபா 1500 மற்றும் வாசிக சாலைக்கட்டணமாக ரூபா 200 பல்கலைக்கழகத்தின் சில கட்டணங்கள் செலுத்தவேண்டி ஏற்படும்
அத்துடன் விண்ணப்பக் கட்டணம் : ரூ.350/= அரவிடப்படும்.
பாடநெறிக்கான விண்ணப்ப விபரம்.
பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டிருக்கின்றன. விண்ணப்ப முடிவுத்திகி செப்டம்பர் மாதம் 30 ஆகும்.
இந்த பாடநெறி தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்சிக்கள் ZOOM ஊடாக கீழ்வரும் தினங்களில் நடாத்தப்படுகின்றது.
10/08/2011 -THsday - 9.30am-11.30am
14/08/2021 - Saturday - 9.30 am - 11.30am
20/08/2021 - Friday-9.30 am - 11.30am
02/09/2021 -Thursday -9.30 am - 11.30am
16/09/2021 - Thursday - 9.30 am - 11.30am
25/09/2021 - Sundiy - 9.30 am-11.30 am
இல்வா விழிப்புணர்வு கருத்தரங்கிற்கான ZOOM Link https://ou.ac.lk/fengtec/ எனும் பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
12/08/2021 ஆம் திகதி நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு
எனும் லிங்கில் சென்று Bachelor of Technology Honours in Engineering எனும் பாடநெறியினைத் தெரிவுசெய்யவும்.
மேலதிக தகவல்கள் பெற
பாடநெறி விபரம் அடங்கிய பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கத்திற்கு செல்ல
மாணவர் கையேட்டினைப் பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்