க.பொ.த (சா/த) பரீட்சை மாத்திரம் சித்தியடைந்திருக்கின்றவர்களுக்கும் பட்டப்படிப்பு வரை தங்களது கல்விப் பயணத்தை தொடர்வதற்கு உதவியாக இந்த தொழிலுரிமைத்துவ சிறிய வியாபார முகாமைத்துவ உயர்தர சான்றிதழ் கற்கை (Entrepreneurship and Small Business Management (ESBM) programme,) அமைகின்றது.
அத்துடன் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற முகாமைத்துவப் பட்டப்படிப்பிற்கு நுழைவுக்கான பரீட்சைக்கு முகம்கொடுக்காமலேயே குறித்த பாடநெறிக்காக பதிவுசெய்துகொள்கின்ற வாய்ப்பும் இந்தப் பாடநெறியினைப் பூர்த்தி செய்கின்றவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.
முகாமைத்துவப் பட்டப்படிப்பிற்காக உயர் தரம் தகுதியுள்ளவர்கள் பல ஆயிரக்கணக்கில் நுழைவுப் பரீட்சைக்குத் தோற்றுவார்கள் அவர்களில் குறிப்பிட்ட தொகையினருக்கே நுழைவுக்கான வாய்ப்புக் கிடைக்கின்றது. நீங்கள் உயர் தரம் சித்தியடைந்திருந்நபோதிலும் மேற்படி சான்றிதழ் பாடநெறியினை பயில்வீர்களானால் நுழைவுப் பரீட்சை இன்றியே நேரடியாகவே பதிவு செய்துகொள்ளலாம்.
நீங்கள் ஒரு வியாபாரத்ததை நடாத்துகின்றவரானால் அல்லது வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்க இருப்பவர்களானால் உங்களது சிறிய வியாபரத்துக்கு இந்தப் பாடநெறி முகவும் உதவியாக அமையும்.
பதிவு செய்வதற்கான தகைமைகள்
க.பொ.த (சா/த) பரீட்சையில் மொழி கணிதம் உட்பட இரணடு பாடங்களில் திறமைச்சித்தியுடன் இரண்டு அமர்வுகளில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்வேண்டும்
முப்பது கிரடிட்களைக்கொண்ட சான்றிதழ் பாடநெறி ஒன்றினைப் பூர்த்திசெய்திருத்தல்
NVQ 3 மட்டத்திலான பாடநெறி ஒன்றினைப் பூர்த்தி செய்திருத்தல்
மேற்குறிப்பிட்ட தகைமைகளுக்கு சமமான ஏதாவது தகையைுனைப் பெற்றிருத்தல்.
கால அளவு
இந்தப் பாடநெறி 1 வருட கால அளவினைக் கொண்டது. (அரம்பத்தில் 2 வருடங்களாக இருந்த பாடநெறி தற்போது ஒரு வருடமாக்கப்பட்டுள்ளது)
மொழிமூலம்
இந்தப் பாடநெறி ஆங்கிலம்/சிங்களம்/தமழ் ஆகிய மொழிகளில் நடைபெறும் விரும்பிய மொழியினைத் தெரிவு செய்யலாம்.
பாடநெறி உள்ளடக்கம்
Entrepreneurship
Small Business Management
Basic Mathematics and Statistics
Marketing for Entrepreneurs
Operations Management for Entrepreneurs
Accounts and Finance for Entrepreneurs
Business Planning
Introduction to Economics
பாடநெறிக்கான கட்டணம்
இந்தப் பாடநெறிக்கான ஒரு வருடத்துக்கான கட்டணம் ரூபா .30,000. ஆகும்
இது ஒரே தவணையில் செலுத்தப்படவேண்டும்
விண்ணப்பம்
விண்ணப்பத்திற்ககான ஆரம்பத் திகதி 2022 ஜூன் 5 ஆம் திகதி
விண்ணப்ப முடிவுத் தகதி 2022 ஜூலை மாதம் 8 ஆம் திகதி
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
படிமுறை 01
ஜூன் மாதம் 5 ஆம் திகதிக்குப்பின்னர் கீழ் குறிப்பிடும் லிங்கில் பிரவேசியுங்கள்
குறித்த இணையத்தள பக்கத்தில் ஒன்லைன் விண்ணப்பத்திற்கான வழிகாட்டல் மூன்று மொழிகளிலும் தரப்பிட்டிருக்கின்றன உங்களுக்கு விருப்பமான மொழியில் வழிகாட்டி படிவத்தை பதிவிறக்கம் செய்து அதற்கமைய விண்ணப்பிக்கலாம்.
0 Comments