அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
அடுத்த வாரத்தில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்குகின்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.
பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் குறிப்பிட்டார். நாடுமுமுவதும் பணியாற்றுகின்ற 242,000 அளவpலான ஆசிரியர்களுக்கு குறித்த இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கி பாடசாவைகளை திரும்பவும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.