>

ad

முறையாக ஒய்வு பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள்



அறிமுகம்

அரச சேவையில் இருக்கின்ற அனைவருக்கும் ஓய்வூதியம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் 25000 முதல் 30000 அளவிலான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்கின்றனர். இவ்வாறு ஓய்வு பெறுகின்ற அனைவருக்கும் அவர்கள் ஓய்வு பெற்றுக்கொள்கின்ற தினத்திலேயே ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்குவதனை ஓய்வூதியத் திணைக்களம் தனது முதன்மை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. அந்த அடிப்படையில் உரிய முறையில் ஓய்வூதியம் பெறுவதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்து கொண்டு உரிய ஆவணங்களை முறையாக சமர்க்கும் போது நாங்கள் ஓய்வு பெறுகின்ற தினத்திலேயே எமது ஓய்வூதிய கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த அடிப்படையில் அதற்கான வழிகாட்டல்களை இந்தப் பதிவின் ஊடாக வழங்கவிருக்கின்றோம். 

ஓய்வூதியக் கொடுப்பனவு ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமைகள்


அரச உத்தியோகம் ஒன்றைப் பெற்றுள்ளோம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் ஓய்வூதியத்திற்கு உரித்துடையவர்கள் என்பதாகக் கருதிவிட முடியாது. அரச ஊத்தியோகம் ஒன்றினைப் பெற்றுக்கொள்கின்ற ஒருவர் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கான தகைமையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக தனது சேவைக்காலத்தில் தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.  யாரேனும் ஒருவர் அரச சேவையில் ஊழல் அல்லது முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றவாளியாவாரானால் அவருக்கு ஓய்வூதியம் இல்லமாலாகலாம். 

அந்த அடிப்படையில் ஒரு அரச ஊழியர் ஓய்வூதியக் கொடுப்பனவு ஒன்றினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர் 4 வகையான அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். 

01. அரச சேவையில் நிரந்தமானதும் ஓய்வூதியம் உரித்துடையதுமான நியமனம் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும்.. 

(உங்களது நியமனக் கடித்த்தில் இந்தப் பதிவி நிரந்தரமானது, ஓய்வூதியம் உரித்துடையது என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்த்துக்கொள்ளுங்கள். 

02. குறித்த பதவியில் நிரந்தமாக்கப்படல் வேண்டும். 

(ஒரு பதவி வழங்கப்பட்டு 3 வருட தகுதிகாண் காலப் பகுதியின் பின்னர் பதவி நிரந்தரமாக்கப்படும்.. அதற்கான கடிதங்கள் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களிடம் இந்தக் கடிதம் உள்ளதா என்பதனை சரி பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு கடிதம் இல்லையாயின் காரியாலயத்தில் உங்களது தனிப்பட்ட கோவைக்கு பொறுப்பாக உள்ள முகாமை சேவை உத்தியோகத்தரை  நாடி விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்)

03. ஆகக்குறைந்தது 10 வருட சேவைக்காலத்தினைப் பூர்த்தி செய்திருத்தல்

04. ஓய்வூதிய கொடுப்பனவு உரித்துடையது என்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஓய்வு பெற்றுக்கொள்ளல்.

அரச உத்தியோகத்தர்கள் ஓய்வ பெறுவதற்கு முடியுமான 8 சந்தர்ப்பங்கள் குறித்து விளக்கப்பட்ட பதிவினை கீழுள்ள லிங்கில் கிளிக் செய்து வாசிக்கவும்.



அரச சேவையில் இருக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் -


ஓய்வூதியம் உரித்துடைய அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் என்பது இலவசமாகவே கிடைப்பது போன்று அவர்களது மரணத்தின் பின்னர் விதவையாகின்ற மனைவி,  அநாதையாகின்ற பிள்ளைகள், விசேட தேவையுடைய அல்லது அங்கவீனமாக உள்ள பிள்ளைகள் என்பவர்களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவு பெறுவதற்கான வாய்ப்பிருக்கின்றது. இவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக சேவையில் இணைந்து 3 மாத காலத்துக்குள் விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிவு செய்துகொண்டு அதற்காக மாதாந்த சம்பளத்தில் பங்களிப்புச் செய்யவும் வேண்டும். 

விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத்திட்டத்திற்கு மீள் பதிவு செய்துகொள்ளல் தொடர்பான பதிவினை கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து வாசித்துக்கொள்ளலாம். 


ஓய்வு பெறுவதற்கு ஆயத்தமாதல்

ஓய்வு பெறுவதற்காக முன்கூட்டியே உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்வது நிறுவனத்திற்கும் ஓய்வு பெறுகின்ற உத்தியோகத்தருக்கும் பயன் மிக்கதாக அமையும். அந்த அடிப்படையில் ஓய்வு பெற இருப்பவர்கள் 6 மாதங்களுக்கு முன்னதாகவே ஆயத்தங்களை மேற்கொள்ளவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் அரச சேவையுடன் காணப்படுகின்ற கடமைகளிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் அரச சேவையிலிருந்து தான் ஓய்வு பெறப் போவதாக நிறுவனத்திற்கு கடிதம் மூலமாக அறிவிக்க வேண்டும். 

ஓய்வூதிய விண்ணப்பத்தினை ஓய்வூதியத் திணைகளத்திற்கு அனுப்பி வைத்தல்


ஓய்வூதிய விண்ணப்பம் ஒன்றினைப் பரிசீலித்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஓய்வூதியத் திணைக்ளத்திற்கு 2 வார காலமே தேவைப்படுகின்றது. எனினும் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுவது சிறந்தாகும். அவ்வாறு நேர காலத்துடனயே அனுப்பி வைக்கும் போது விண்ணப்பத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை சரி செய்வதற்கு போதுமான கால அவகாசம் காணப்படும். 

அந்த அடிப்படையில் குறித்த உத்தியோகத்தரின் சுய விபரக் கோவைக்குப் பொறுப்பாக உள்ள முகாமை சேவை உத்தியோகத்தர் மூலமாக ஓய்வூதியத் திணைக்ளத்தின் இணையத் தளத்தின் PMS இன் ஊடாக ஒன்லைன் விண்ணப்பப்படிவும்  (PD3) ஊடாகப் பதிவு வெய்யப்படும்.  இவ்வாறு பூரணப்படுத்தப்படுகின்ற விண்ணப்பங்கள் பிரதி எடுக்கப்பட்டு அது உரிய ஓய்வு பெறும் உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டு அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்கள் சரிபார்த்துக்கொள்ளப்டவேண்டும்.  அதன் பின்னர் குறித்த முகாமை சேவை உத்தியோகத்தரினதும் நிறுவனத் தலைவரினதும் கையொப்பம் இடப்பட்டு அத்துடன் கீழ்க் குறிப்பிடப்படும் ஆவணங்கள் இணைக்கப்பட்டு ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்பப்டவேண்டும். 


ஓய்வூதிய விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள் 


1. பெயர்களில் வித்தியாசங்கள் காணப்படுமாயின் அதனை உறுதிப் படுத்துவதற்காக பெற்றுக்கொள்ளப்படுகின்ற உறுதிப் பத்திரம் (affidavit) 
2. ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதிகள்
3. தேசிய அடையாள அட்டையின் சான்றுறுதிப் படுத்தப்பட்ட பிரதி
4. விண்ணபம் அனுப்புகின்ற மாதத்தின் அல்லது அதற்கு முன்னைய மாதத்தின் சான்றுறுதிப்படுத்தப்பட்ட சம்பளப் பட்டியல் பிரதி
5. ஓய்வூதியம் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற வங்கிக் கணக்கிலக்கம் பதியப்பட்டிருக்கின்ற பக்கங்கள் உட்பட புத்தகத்தின்  சான்றுறுதிப்படுத்தப்பட்ட பிரதி
6. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சம்பளத் திருத்த படிவத்தின் பிரதி

ஓய்வூதிய செயற்பாடுகளின் போதான ஒவ்வொரு படிமுறையும் மேற்கொள்ளப்படும் போது அதுகுறித்த குறுந் தகவல் (SMS)  குறித்த உத்தியோகத்தரின் தொலைபேசிக்கு அனுப்பப்ப்டும். மேற்குறிப்பிடப்பட்ட விண்ணபத்தில் ஏதும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை' குறித்த காரியலயத்திற்கு திரும்ப அனுப்பப்படும். 

அவ்வாறின்றி குறைபாடுகள் அற்றதாக இருக்கும் விண்ணப்பங்களுக்கு ஓய்வூதிய எண் ஒன்று வழங்கப்படும். 

உபகார நிலையம்

ஓய்வூதிய விண்ணப்பம் சரியானது என்பதாக உறுதி செய்யப்பட்டதன் பின்னர் ஓய்வூதியத்தை செயற்படுத்துவதற்காக ஓய்வூதியத் திணைக்ளத்தின் உபகார நிலையத்திற்கு அழைக்கப்படுவர். உபகார நிலையம் என்பது அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கும் அடிப்படையிலான இடம் (One step service center) என்பதாகக் குறிப்பிடலாம். இங்கு ஓய்வு பெறுகின்றவருக்கான நேரமுகப் பரீட்சை போன்ற ஒன்று நடாத்தப்படும். ஓய்வு பெறுகின்ற ஒருவர் இந்த சேவை நிலையத்திற்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே செல்வது போதுமானது என்ற அடிப்படையில் ஒரு முறையில் அனைத்து விடயங்களும் செய்து தருவதற்கு ஓய்வூதியத் திணைக்களத்தினைால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


குறிப்பு - நாட்டின் தற்போதைய நோய் பரவல் நிலை காரணமாக இந்த உபகார சேவை நிலயமானது  2021.05.03 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் ஓய்வு பெறுகின்றவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெறும் தினம் அவர்களுக்கு குறுந் தகவல் ஊடாக அறிவிக்கப்படும் என்பதாக ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

உபகார நிலையத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற சேவைகள் 


01. ஓய்வூதியக் கொடுப்பனவை செயற்படுத்தல்
02. ஓய்வூதிய அடையாள அட்டையினைச் செயற்படுத்தல்
03. ஓய்வு பெறுபவரின் விரல் அடையலாம் பெற்று டிஜிடல் முறையிலான சான்றிதழ் ஒன்றினை செயற்படுத்தல்
04. ஓய்வு பெறுகின்றவர்களின் குடும்ப விபரங்களைப் பெற்று விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்தின் உரிமையை உறுதிப்படுத்தல் .
05. விசேட தேவையுடைய அங்கவீமான பிள்ளைகள் குறித்த கொடுப்பனவு உரிமைகளை உறுதிசெய்தல் 


ஓய்வூதியக் கொடுப்பனவினை உறுதி செய்வதற்கான சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்.

  1. உங்களது தேசிய அடையாள அட்டையும் அதன் பிரதியும் மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் சான்றுதிப்படுத்தப்பட்ட பிரதி.
  2. ஓய்வு பெறுகின்றவரின் பாஸ்போட் அளவு வர்ணப் புகைப்படம்.
  3. துணைவரின் தேசிய அடையாள அட்டையும் அதன் பிரதியும் மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் சான்றுதிப்படுத்தப்பட்ட பிரதி.
  4. விதவைகள் அநாதைகள் நிதிய அட்டை
  5. திருமண சான்றிதழில் மூலப் பிரதி அல்லது விவாகரத்துப் பெற்றதற்கான சான்று
  6. துணைவர் மரணித்திருப்பின் மரணச் சான்றிதழ்
  7. உங்களது அல்லது உங்கள் துணைவர் முன்னதாக வேறு திருமணம் செய்திருந்தால் அவை சட்டபூர்வமாக முடிவுக்கு வந்திருப்பது குறித்த விவாகரத்து பத்திரத்தின் மூலப் பிரதி அல்லது முன்னைய துணைவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ் 
  8. 26 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்
  9. பெயர்களில் வித்தியாசங்கள் இருப்பின் அவற்றை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் (மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினர்களினும்)
  10. அங்கவீன பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கு அங்கவீனம் ஏற்பட்டது பிறப்பில் அல்லது 26 வயதை அடைவதற்கு முன்னர் என்பதனை உறுதிப்படுத்துவதற்கான வைத்திய சான்றிதழ்கள், கிளினிக் விபரங்கள், நோய் குறித்த அறிக்கை, தபால் அட்டையின் அளவு முழுமையான வர்ணப் புகைப்படம், சுகாதார 307 எனும் படிவம், பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலப் பதிரதி
  11. துணைவரின் கடவுச்சீட்டுக்கான அளவுள்ள வரணப் புகைப்படம் 1

ஓய்வு பெற்றதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் 

ஓய்வூதியக் கொடுப்பனவு செயற்படுத்ப்பட்டதன் பின்னர்  ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதிகளில் ஓய்வூதியம் கொடுப்பனவு வழங்குகின்ற நடவடிக்கை ஓய்வூதியத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்படும். ஓய்வு பெற்றுக்கொண்ட போதிலும் உடல் அளவில் உள அலவிலும் சக்திவாய்ந்தவர்களாகவே காணப்டுகின்றீர்கள். நீங்கள் இவ்வளவு காலமும் பெற்றுக்கொண்ட அனுபவங்களிலிருந்து பல விடயங்களை கற்றுக்கொள்வதற்கு சமூகம் எதிர்பார்க்கின்றது. எனவே ஊரில் அல்லது பிரதேசத்தில் அல்லது நாடலாவிய ரீதியில் உங்களால் நிறைவேற்றப்படவேண்டிய பணிகள் குறித்து கவனம் செலுத்தி உங்களது அறிவு அனுபவம் என்பவற்றின் ஊடாக சமூகத்திற்கான சேவை ஒன்றினை மேற்கொள்வீர்கள் என்பதாக எதிர்பார்க்கின்றோம்.

உங்களது ஓய்வு காலம் சிறப்பாக அமைய லங்காஜொப் இணையத்தளம் வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. 


ஓய்வூதியக் கொடுப்பனவுகள் கணக்கிடும் முறை குறித்து அடுத்த பதிவில் ஆராயலாம். இந்தப் பதிவு குறித்து சநதேகங்கள் இருப்பின் கீழே பின்னூட்டம் இடவும்.