கடமைக்கு சமூகமளித்தல், சமூகம் தராமை, லீவுகள் கணக்கிடல் போன்றவற்றுக்கு இந்த பதிவுப் புத்தகமே மூல ஆவணமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒருவர் எதாவது தினம் ஒன்றில் கடமைக்குச் சமூகமளித்தார் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு அவர் சமூகமளிக்கின்ற நேரத்தைக் குறிப்பிட்டு கையொப்பமிடுவது கட்டாயமானதாகும். வரவுப் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிடப்படாத தினங்கள் லீவு தினங்களாகப் பதியப்படும்.
2) லொக் பதிவேடு
யாராவது ஒருவர் ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொண்டு சேவையில் இணைகின்ற முதலாவது தினத்தில் அவரது நியமனம் பெற்றுக்கொண்டவிபரத்தினை அதிபர் லொக் புத்தகத்தில் பதிவார். ,அத்துடன் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் இடமாற்றம் பெறல், விபத்துக்குள்ளாகுதல், பிரசவ விடுமுறை போன்ற விசேட விடுமுறைகள் பெற்றுச் செல்லல், விசேட விடுமுறை முடிந்து மீண்டும் வந்து சேவையினைப் பொறுப்பேற்றல் போன்ற விசேடமான விடயங்கள் இந்தப் புத்தகத்தில் பதியப்படுவதுண்டு.
மேற்படி லொக் பதிவுக்குறிப்புகள் ஆசரியர்களின் நியமனம் நிரந்தரமாக்கும் போதும் ஆசிரியர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அவசியப்படலாம்.
3) லீவு பதிவேடு
சேவைக்கு வருகை தராமலிருக்கின்ற தினங்களுக்காக முறையான லீவு விண்ணப்பத்தினைப் பயண்படுத்தி அதிபரிடம் லீவுக்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
டெலிமெய்ல், ஈ மெய்ல், குறுந்தகவல் என்பவற்றின் ஊடாக லீவு பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பின் லீவு முடிந்து பாடசாலைக்கு வந்ததன் பின்னர் பெற்றுக்கொண்ட லீவுக்காக உரிய விண்ணப்பத்தினைச் சமர்ப்பித்து அதிபரின் அனுமதிக் கையெழுத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். .
லீவு தொடர்பாக வௌியிடப்பட்டிருக்கின்ற சுற்றுநிருபங்கள் மற்றும் ஆலோசனைகள் என்பன குறித்து அறிந்து வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
4) குறுகிய நேர லீவுப் பதிவேடு.
மாதம் ஒன்றில் ஒரு மணித்தியாலயம் கொண்ட இரண்டு குறுகிய நேர லீவுகளை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒரு பாடசாலையில் அனைவரும் பெறுகின்ற குறிகிய லீவுகள் ஒரே பதிவேட்டில் பதியப்படும்.
பாடசாலையில் சேவையாற்றுகின்றவர்களில் குறித்த ஒரு தொகையினருககே ஒரு நாளில் குறுகிய கால லீவு வழங்கமுடியும் என்பதால் பாடசாலையின் செயற்பாடுகளை தடையின்றி நடாத்திச் செல்வதற்கு உதவுகின்ற அடிப்படையில் குறுகிய லீவு குறித்து முன்னதாகவே அறிவித்துக்கொள்வது சிறந்தாகும்.
5) புகையிரதப் பயணச்சீட்டுக் கோவை
புகையிரத ஆணைச்சீட்டு ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு உத்தியோகத்தருக்கு புகையிரத ஆணைச்சீட்டுகள் 3 தொகுதியினைப்பெற்றுக்கொள்ளலாம் (செல்வதற்கு திரும்புவதற்கு என 6 பயணச்சீட்டுகள் இதில் அடங்கும்). உத்தியோகத்தரின் மனைவி அல்லது கணவன் அவர்களது பிள்ளகைளுக்கும் இந்தத் தெகுதிகள் வழங்கப்படும். திருமணம் ஆகாதவராக இருப்பின் தாயாருக்கு பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம். துணைவர் அரச சேவையில் இருக்குமிடத்து அவர் பணிபுரியும் காலியாலயத்தில் புகையிரத ஆணைச்சீட்டு பெற்றுக்கொள்ளவில்லை என்பதனை உறுதி செய்யும் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
6) ஆசிரியர்களுக்கான அறிவித்தல் பதிவேடு.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற எழுத்துமூலமான அறிவித்தல்கள், பொறுப்புக்களை ஒப்படைத்தல், பாட விதானம் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள், இணைப் பாடவிதான செயற்படுகள் என்பவற்றை ஒப்படைக்கின்ற செயற்பாடுகள் இந்தப் பதிவேட்டின் ஊடாக வழங்கப்படும்.
ஆசியரின் செயற்பாடுகள் குறித்து பதியப்படுகினற ஆவணம் என்பதால் இந்தப் பதிவேடு குழுக் காண்காணிப்பின் போது பரீட்சிக்கப்படும். .
7) சம்பளப் புத்தகம்.
ஆசிரியரகள் மாதாந்தம் பெறுகின்ற சம்பள விபரங்கள் இந்தப் பதிவேட்டில் குறித்து வைக்கப்படும். அவசியப்படுமிடத்து சம்பள விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தப் பதிவேட்டின் தகவல்கள் பயன்படும்.
8) சுற்றுநிருபங்கள்.
அரசாங்க அறிவித்தல்கள் சுற்றுநிருபங்களின் ஊடாகவே வழங்கப்படுகின்றது. தொழில் சார்ந்த விடயங்கள் குறித்து பூரண அறிவினைப் பெற்றுக்கொள்வதற்காக அவ்வப்போது வௌியிடப்படுகின்ற சுற்றுநிருபங்கள் தொடர்பில் அறிந்திருப்பது அவசியமானதாகும். அவ்வாறான சுற்றுநிருபங்கள் இலத்திரணியல் வடிவில் அல்லது அச்சு வடிவில் பாதுகாத்துக்கொள்வது பயன் தருவதாக அமையும்.
- நேர சூசி உட்பட அன்றாடம் மேற்கொள்கின் நடவடிக்கைகளைப் பதிந்துகொள்வதற்காக தினக்குறிப்பேடு ஒன்றை பேணி வருவது அவசியமானதாகும். மேற்பார்வையின்போது அல்லது ஒழுக்காற்று விசாரணைகளின் போது சமர்ப்பிப்பதற்கு இது மிகவும் உதவியாக அமையும்.
இந்தப் பதிவேட்டில் கீழ்க் குறிப்பிடும் விடயங்களைப் பதிந்துவைக்கலாம்..
- பாடசாலை நேரத்தில் தங்களால் மேற்கொள்ளப்டுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக குறிப்புக்கள.
- ஆசிரியர் கலந்துரையாடல்கள், மற்றும் அசிரியர்களுக்கு கிடைக்கின்ற அறிவித்தல்களை குறித்து வைக்கலாம்.
- ஆசிரியர் மாணவர் கலந்துரையாடல் குறித்து குறிக்கலாம்.
- தாம் பெற்றுக்கொள்கின்ற லீவுகளைக் குறித்துக்கொள்ளலாம்.
- பெற்றார் கூட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பதிந்துகொள்ளலாம்.
- பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற தண்டனை குறித்து பெற்றோரை அறிவுறுத்தியது தொடர்பான குறிப்புகள்.
- பிள்ளைகளுக்கு பிரத்தியே செயற்பாடுகள் வழங்குகின்றபோது அது குறித்த தகவல்களையும் பிள்ளையின் முன்னேற்றம் குறித்தும் குறிக்கலாம்.
- எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருகன்கின்ற செயற்பாடுகள் தொடர்பான குறிப்புக்களை எழுதலாம்.
- வேறு நிறுவனங்கள் அல்லது பாடசாலைகளுக்கு வளவாளர்களாக அழைக்கப்படும் போது அது குறித்து குறிப்புக்களை எழுதிக்ககொள்ளலாம்,.
வீட்டில் பேணுகின்ற சுய விவரக் கோவை
- கல்வித் தகமைகள் தொடர்பான ஆவணங்கள, நியமனக் கடிதம், லொக் பதிவுகள், லீவு ஆவணங்கள். பதவி உயர்வு ஆவணங்கள், சம்பளப் பரிமாற்ற ஆவணங்கள், கல்வித் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களிலிருந்து கிடைக்கின்ற உத்தியோகபூர்வ கடிதங்கள்,. போட்டிப் பரீட்சைக்காக சமர்ப்பிக்கின்ற விண்ணப்பங்கள்,. போன்றவற்றை பத்திரப்படுத்தி கோவையாக பேணி வருவது சிறந்ததாகும்.
தமது சுய விவரக் கோவையின் சாரம்சக் குறிப்பு.
- பல்வேறுபட்ட படிவங்களைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய அடையாள அட்டை இலக்கம், தேசிய அடையால அட்மை விநியோகிக்கப்பட்ட திகதி, நியமனம் கடித இலக்கம் நியமனக் கடிதத் திகதி, கடமை ஏற்ற திகதி பதிவி உயர்வு பெற்ற திகதி, சம்பள்திட்டம், சம்பளப் படிநிலை போன்ற விடயங்கள் அடிக்கடி அவசியப்படுவதுண்டு எனவே இது போன்ற விபரங்களை ஒரு சிறிய புத்தகத்தில் (pocket book) குறித்து கைவசம் வைத்திருப்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் உதவியாக அமையும்.
மாதாந்த சம்பளப் பட்டியல் (Pay slips)
மாதாந்தம் பெறுகின்ற சம்பள பட்டியல் அவசியமில்லை என்ற போதிலும் பாதுகாத்து வைத்துக்கொள்ளல் சில போது உதவியாக அமையும்.
0 Comments