பல்கலைக்கழக / பாடசாலை மாணவர்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய இணையத்தளங்கள் சில குறித்து இந்தப் பதிவு விளக்கவிருக்கின்றது. உங்களது அன்றாடப் பணிகளை இலகுபடுத்திக்கொள்வதற்கு இந்த இணையத்தளங்கள் நிச்சயம் உதவியாக அமையும்.
இங்கு தெரிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் குறித்து தனித்தனியாக விளக்கம் வழங்கப்படுகின்றது. அத்துடன் இந்த அனைத்து இணையத்தளங்களும் தமது சேவைகளை கட்டணமின்றி இலவசமாகவே வழங்குகின்றன. பதிவைப் படித்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த இணையத்தளத்தின் ஊடாக நீங்கள் தயாரிக்கின்ற ஆங்கில மொழியிலான ஆவணஙக்ளின் அல்லது எழுதுகின்ற ஆக்கங்களின் grammar இனைப் பரிசோதித்துக்கொள்ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒப்படைகளில் grammar அமைப்பினைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் டைப் செய்த ஆக்கத்தை அப்படி copy செய்தி இந்த வெப் தளத்தில் paste செய்து விடுங்கள். உங்களது ஆக்கத்தில் காணப்படுகின்ற grammar சார்ந்த பிழைகளை சுட்டிக்காட்டுவதுடன் அவைகள் சரி செய்யப்படவேண்டிய முறைகள் குறித்தும் உங்களுக்கு இந்த இணையத்தளம் உதவி புரிகின்றது. முயற்சித்துப்பார்க்கலாமே.😎
2️⃣ www.desmos.com
Maths ,Bio , engineering , medicine போன்ற துறைகளில் கற்கின்ற மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்ககூடிய ஒரு இணையத்தளமாக இதனைக் குறிப்பிடலாம். இந்த இணையத்தளத்தில் சமன்பாடுகளை வழங்கும் போது அவற்றுக்குப் பொறுத்தமான வரைபுகளை இந்த இணையத்தளம் உருவாக்கித் தருகின்றது. பொதுவாக சமன்பாடுகளுக்கான வரைபுகளை எங்கள் அனைவரினாலும் உருவாக்க முடியும் என்ற போதிலும் சில சமன்பாடுகளுக்கான வரைபுகளின் அமைப்பு எவ்வாறு அமையும் என்பதான அறிவு எம்மிடம் இருக்காமல் இருக்கலாம். அந்த வேலைகளில் நாங்கள் அமைத்த அமைப்பைச் சரி பார்த்துக்கொள்ள இந்த இணையத்தளம் துணை புரிகின்றது.
எத்தனை வரைபுகளை வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் வரைந்துகொள்வதற்கான வசதி இந்த இணையத்தளத்தில் காணப்படுகின்றது. max , min , function போன்ற வசதிகளும் இந்த தளத்தில் காணப்படுகின்ற இந்தப் பாடப்பரப்பு குறித்து அறிந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த இணையத்தளத்தில் கணிதத்திற்கு பயன்படக்கூடிய பல வகையான வசதிகள் காணப்படுகின்றன.. கணிதத் துறையில் பயில்பவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் 😋
3️⃣ www.sleepyti.me
இது மிகவும் சுவாரஷ்யமான தொரு இணையத்தளமாகும். நீங்கள் நாளை அதிகாலையில் ஒரு நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பதாக வைத்துக்கொள்வோம். அவ்வாறு நீங்கள் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்திருக்கும் போது உடலுக்கு எந்த விதமான சிரமமும் இல்லாது எழுந்திருக்க வேண்டுமானல் இன்று என்ன நேரத்திற்கு நீங்கள் நித்திரைக்குச் செல்ல வேண்டும் என்பதனை இந்த இணையத்தளம் கணித்துத் தருகின்றது. உங்களுக்கு வசதியாக வித்தியாசமான 4 நேரங்களை இந்த இணையத்தளம் உங்களுக்கு சிபாரிசு செய்யும். இவற்றில் பொறுத்தமான ஒன்றினை நீங்கள் தெரிவு செய்யலாம். உயிரியல் விஞ்ஞான தரவுகளுக்கு அமைவாக ஆழ்ந்த உறக்கம் ஒன்றைப் பெற்று நித்திரை விட்டெழுவதற்கான அடிப்படையில் மேற்படி நேரங்கள் சிபாரிசு செய்யப்படுகின்றன. எனவே அந்த நேரங்களில் நித்திரைக்குச் செல்லும்போது அடுத்த நாள் காலை உங்களது கடிகார மணி ஒலிக்கும் போது எந்த வித சிரமும் உடலுக்கு தெரியத நிலையில் கண் விழித்துக்கொள்ளலாம்..
படிக்கின்ற மாணவர்கள் தங்களது நித்திரையினை முகாமை செய்து கொள்ள இந்த இணையத்தளம் மிகவும் உதவியாக அமையும். .😌
இது மிகவும் பெறுமதியான ஒரு இணையத்தளமாகும். இந்த இணையத்தளத்தில் கணிதம் சார்ந்த ஏதாவது ஒரு பாடம் சம்பந்தப்பட்ட வினாவுக்கான விடையினை தேடிப் பெறலாம். குறித்த கணக்கை இங்கு copy & paste செய்துவிட வேண்டும். அதன் பின்னர் குறித்த கணக்குக்கான விடையைக் காண்பதற்கான படிமுறைகளை இந்த இணையத்தளம் விளக்குகின்றது . ஏதாவ ஒரு கணக்கிற்கான விடை கிடைக்காவிட்டால் அந்தப் பாடத்தின் பெயரை இங்கு தட்டச்சிட்டு தேடலாம். அதன் பின்னர் அந்தப் பாடம் குறித்து விளக்கத்தைப் பெற்று அதன் பெண் கணக்கினைச் செய்து கொள்ளலாம். உதாரணமாக "Mathematical induction" என்பதாக search செய்யுமிடத்து அந்தப் பாடத்துக்குறிய தியரிகளும் உதாரணங்களும் கிடைக்கப்பெறும். சுயமாகக் கற்பதற்கு இந்த இணையத்தளம் மிகவும் துணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Programming தொடர்பில் கற்கவேண்டும் என்பதாக விரும்புகின்றவர்கள் இந்த இணையத்தளத்திற்குச் சென்று developer account கணக்கொன்றை உருவாக்கிக்ெகாள்ளவும். சுயமாக programming கற்றுக்கொள்ளவும் உங்களுக்குத் தெரிந்த விடயங்களை கற்றுக்கொடுத்து தங்களது அறிவினை விருத்திகொள்ளவும் சிறந்த களம் அமைத்துத்தருக்கின்ற ஒரு இணையத்தளமாக இதனைக் குறிப்பிடலாம். அத்துடன் உங்களது நண்பர்களிடையே programming competition போட்டி நிகழ்ச்சி ஒன்றினையும் இந்த இணையத்தின் ஊடாக ஏற்பாடுசெய்யலாம். இந்த இணையத்தளத்திற்கு ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.
6️⃣ www.easepdf.com/
உங்களது கணனியிலுள்ள படங்களை இணைத்து pdf ஒன்றாக அமைத்துக்கொள்வதற்கான வசதி இந்த இணையத்தளத்தின் ஊடாக கிடைக்கின்றது. இரண்டு pdf களை இணைத்தல் ஒரே pdf கோப்பினை இரண்டு மூன்றாக வேறாக்குதல் என பல வதிகள் இந்த இணைத்தளம் ஊடாகக் கிடைக்கின்றன.
மேற்குறிப்பிட்ட இரண்டு இணையத்தளங்கள் ஊடாகவும் YouTube videos ஒன்றின் லிங்கை copy , paste செய்து வீடியோவாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எமக்கு அவசியமான வீடியோ ஒன்றினை திரும்பத் திரும்ப பார்க்காமல் அதனை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ள இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன.
lankajobinfo.com