>
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் (26) கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடிய பின்னர் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் குறித்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட இருப்பதாக செயலாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் க .பொ.த (சா/த) பிரயோக பரீட்சைகளிலிருந்து ஆசிரியர்கள் நீங்கிக்கொள்வார்களாயின் இது குறித்த மக்களின் விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு ஏற்படும் என்பதாகவும் . இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்களின் கல்வி குறித்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
0 Comments