க.பொ.த. (உ/த) பரீட்சை நடத்தப்படுவதற்கான திகதியில் இரண்டு விதமான அபிப்பிராயங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி ஜி எல் பீரிஸ் தெரிவித்தார் . புதிய பாடத்திட்த்தில் பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் பரீட்சைத் திகதியை பிற்போடுமாறு கோருவதாகவும் பழைய பாடத்திட்டத்தில் பரீட்சைக்குத் தோற்றுவோர் பரீட்சையை உரிய திகதியில் நாடாத்துமாறும் கோருவதாகக் குறிப்பிட்ட கல்வி அமைச்சர் இவை இரண்டும் நியாயமான கோரிக்கைகள் என்பதாகவும் அவை தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் தீர்க்கமான முடிவு ஒன்iறுக்கு வர இருப்பதாக அவர் தெரிவித்தார்
இன்று (9) பரீட்சைத் ததிணைக்களம் மற்றும் கல்வி அமைச்சின் ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிலையில் கல்வி அமைச்சின் செயலார் புலமைப் பரிசில் பரீடௌசை ஒக்டோபர் 3 ஆம் திகதியும் உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4 ஆம் திகதியும் நடைபெறும் என்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1 Comments
Please change the date sanath pujitha sir
ReplyDelete