>

ad

2021 க.பொ.த. (உ/த) பரீட்சை, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புதிய தினங்கள் அறிவிப்பு.



2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடாத்தப்படுவதற்கிருந்த க.பொ.த (உ/த) பரீட்சை இந்த வருடம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 திகதி வரையில் நடபத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையானது நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 


இதற்கு முன்னர் மேற்படி இரண்டு பரீட்சைகளும் நடாத்தப்படுவதற்கான தினம் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் காணப்பட்டன. அதன் பின்னர் தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்தத் தீர்மானத்திற்கு வந்தாக அமைச்சர் தெரிவித்தார். 


Post a Comment

0 Comments