>

ad

2020/2021 பல்கலைக்ககழங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை முதல் மீண்டும் அவகாசம்.


2020 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணிப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு மேலும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. 


எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் இதற்கான அவகாசம் வழங்ககப்படுவதாக பல்கலைக்கழகங்கள்மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 

நாட்டில் நிலவிய கொவிட்  நிலைமை காரணமாக 2021 ஜூன் மாதம் வரை விண்ணப்பிக்க முடுயாமல் போனவர்களுக்கே இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. அத்துடன் இந்த சலுகைக்காலத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்பவர்கள் தங்களது விண்ணப்பத்தில்  UNICODE இல் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமாயின் அதற்கான சந்தர்ப்பம் ஜூலை 31 முதல்  ஆகஸ்ட் 14 ஆம் தகதி வரை வழங்கப்படும்.  மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு ஒருவருக்கு ஒரு சந்தரப்பம் மாத்திரமே வழங்கப்பட்டும். 

 ஒன்லைனில் பூர்த்தி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களின் பிரதி எடுக்க்கப்பட்டு அதில் கையொப்பமிடப்பட்டு அவை apply2020@ugc.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். 

இது வரை ஒன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தலர்களுக்கு விண்ணப்பத்தில் மாற்றம் ஏற்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுவத்தில்லை. இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவது ஏதோ காரணங்களினால் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியாலம் போனவர்களுக்காக மாத்திரமாகும். 

விண்ணப்பங்களை கீழுள்ள லிங்கின் ஊடாக சமர்ப்பிக்கலாம். 

Post a Comment

0 Comments