>
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி 622,000 மாணவர்களில் 169,000 அளவிலான மாணவர்கள் கலைப் பாடங்களைப் (நடனம், சங்கீதம் போன்றன) பயின்றிருக்கின்றனர். பிரயோகப் பரீட்சை நடத்த முடியாமல் போகுமிடத்து பாடசாலைகளை மையப்படுத்திய அடிப்படையில் கணிப்பீடு செய்து புள்ளிகள் வழங்கி பெறுபேறுகளை வௌியிடமுடியுமா என்பது குறித்தும் ஆரயப்படுகின்றது. சென்ற வருட பரீட்சைகளில் மொத்தப் பெறுபேறுகளுக்கும் பிரயோகப் பரீட்சைகளுக்களுக்கும் இடையில் எந்த விதமான தொடர்புகள் காணப்படுகின்றது என்பது குறித்து ஆராய்ந்து தொழிநுட்ப ஆலோசனைகளையும் பெற்றதன் பின்னர் தீர்மானம் ஒன்றிற்கு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்டுகின்றன.
கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் லன்டன் பரீட்சை தொடர்பிலும் இதே பிரச்சினை காணப்படுகின்றது. அவர்களும் நடைமுறை ரீதியிலான தீர்மானங்களுக்கு வந்திருக்கின்றனர் என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments