கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழக ஒன்லைன் விண்ணப்பம் தொடர்பாக இது வரைகாலமும் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பான விபரம்.- 2021.06.07
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கலநிதி அமரதுங்க அவர்கள் சிரச டீ.வீ - பெதிகட் நிகழ்ச்சிக்கு 31. 05.2021 ஆம் திகதி வழங்கிய நேர்காணல் மற்றும் பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளம் என்பவற்றின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு lankajobinfo.com இணைத்தளம் கீழ்வரும் விடயங்களைத் தொகுத்து வழங்குகின்றது.
01. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கைநூலில் 5 வது பகுதியில் விண்ணப்பித்தல் குறித்து அனைத்து விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வாசித்துக்கொண்டு விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
02. பல்கலைக்கழக பதிவுப் புத்தகத்தை வௌயிடும் உரிமை பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவுக்கே காணப்படுகின்றது. ஏனைய இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள புத்தகங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பின் அதற்கு பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பொறுப்புக் கூறமாட்டாது. கைநூலைப் https://eugc.ac.lk/ugc_handbook/ எனும் இணைய முகவரியில் உரிய தெகையைச் செலுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.
03. ஒன்லைன் விண்ணப்பித்து அவற்றை மின்னஞ்சலில் அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி 11.06.2021 என்பதாகவே பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
04. உங்களது விபரங்களை ஒன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அதனை பிரின்ட் எடுத்து, தங்களது கையொப்பத்தை இட்டு PDF வடிவில் அல்லது தொலைபேசியபை் பயன்படுத்தி ஒரு image ஆக படம் எடுத்து apply2020@ugc.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். இந்த விண்ணப்பத்தில் அதிபரின் கையொப்பமோ அல்லது உங்களது கையொப்பத்தை சாற்றுதிப்படுத்துவதற்கான கையொப்பமோ தேவையில்லை.
05. பாடசாலையிலிருந்து விலகியதற்கான சான்றிதழ், சா/த ,உ/த பெறுபேறுகள். விளையாட்டுச் சான்றிதழ்கள் என்பன மின்னஞ்சலுடன் அனுப்புவது அவசியமில்லை, தனிப்பட்ட விண்ணப்பதாரினள் கிராம சேவை அலுவலரின் சான்றிதழ் பெறுவதும் அவசியமில்லை. தன்னிடம் தற்போது காணப்படுகின்ற சான்றிதழ்களைப் பயன்படுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
06. பயணத் தடை நீங்கப்பட்டதன் பின்னர் அதிபரின் அல்லது குறித்த அத்தாட்சிப்படுத்துபவரின் கையொப்பம் என்பவற்றைப் பெற்று அத்துடன் மேற்படி சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு அவற்றை உரிய முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்க வேண்டும்.
07. மேற்படி ஆவணங்கள் பதிவுத் தபாலில் அனுப்பி கை்கும் வரையில் குறித்த மாணவரது பல்கலைக்கழகத் தெரிவு குறித்த விபரம் அவருக்கு அனுப்பி வைக்கப்படமாட்டாது.
08. z-score இனைக் கருத்தில் கொள்ளாது தரத்தில் உயர்ந்த பாடநெறிகள் முதல் தரத்தினில் குறைந்த பாடநெறிகள் வரை முடிந்த அளவு பாடநெறிகளை உட்படுத்தி விண்ணப்பித்தல். உங்களுக்கு 125 பாடநெறிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.