ad

பாடசாலை சுற்றுலாவுக்கு அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள்.



பாடசாலைகளிலிருந்து கல்விச் சுற்றுலா செல்வதாயின் சுமார் 20 ஆவணங்கள் கேட்கப்படுகின்றது. அவைகளைத் தயாரித்துக் கொடுப்பதென்பது மிகவும் சிரமமான விடயம் என்பதாக நினைப்பீர்களானால் கீழ் வரும் சம்பவத்தினை ஒருமுறை படித்துப் பாருங்கள். குறித்த ஆவணங்களின் முக்கியத்துவம் குறித்து நீங்கள் இதன் ஊடாக அறிந்துகொள்வீர்கள்..பதிவின் இறுதியில் சுற்றாலபவுக்கு அனுமதி பெறுவதற்கு அவசியமான ஆவணங்கள் என்ன என்பது குறித்து தரப்படுகின்றது.

அது 2008 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். நுவரெலிய கல்விக் காரியாலயத்தில் சேவையாற்றிய காலம் அது. அன்று வழமைக்கு மாற்றமாக தொலைபேசி அழைப்புக்களின் தொகை அதிகமாகவே வந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு பாரிய பிரச்சினையை பணிப்பாளர் எதிர்நோக்குகினறார் என்பதை அவரது நடவடிக்கைகள் எடுததுக் காட்டிக்கொண்டிருந்தது..
பாடசாலையொன்றிலிருந்து சுற்றுலா சென்ற மாணவர்களினதோ ஆசிரியர்களினதோ கைபேசிகளைத் தொடர்ப்புகொள்ள முடியவில்லை. பதட்டமடைந்த பெற்றோர் கல்விக் காரியாலயத்தை அழைத்து முறையிடத் துவங்கினர். ஒன்று இரண்டாக ஆரம்பித்த அழைப்புகளின் தொகை நேரம் செல்லச்சில்ல அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பர். மாணவர்களைத் தேடிக்கண்டுபடிப்பது இவற்றில் பிரதானமாக செய்யவேண்டிய பணியாகும். அடுத்தது பெற்றோர் பதட்டப்படாமல் ஆறுதல் படுத்துவது அதுனுடன் இணையாக செய்யவேண்டிய பணியாகும். அன்றைய காலப்பகுதிய யுத்தத்தின் உச்ச கட்டத்தில் இருந்து ஆங்காங்கே இருந்து வந்துகொண்டிருந்த குண்டுவெடிப்புச் செய்திகள் பெற்றோரின் பதட்டத்தை பன்மடங்கு தூண்டிவிடக் காரணமாக இருந்தது.

இன்னும் சில மணி நேரங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது போகுமிடத்து பெற்றோர் ஒவ்வொருவராக காரியாலயத்தை நோக்கி வரத்துவங்குவர். அத்துடன் மீடியா மற்றும் அமைச்சர்களின் அழைப்புகள் என மேலதிகமாக வரும் பிரச்சினைகளும் இருப்பவைகளுடன் சேர்ந்து கொள்ளும். ஆகவே எவ்வளவு அவசரமாக தீர்க்கமுடியுமோ அவ்வளவு அவசரமாக தீர்த்தாக வேண்டும்.

அவசரமாக செயல்பட்ட பணிப்பாளர் ஒரு மணி நேரத்துக்குள் மாணவர்கள் இருக்குமிடத்தைத் தேடிப்பிடித்துவிட்டார்.ஒரு பாடசாலை சுற்றுலா செல்வதாயின், போகும் இடங்கள், பயணிக்கும் பாதை தினம் என்பன வரைபடத்தில் குறிப்பிட வேண்டும். வாகன இலக்கம் அனுமத்இப்பத்திரம். சாரதி நடத்துனர் அனுமதிப்பததிரம் என பல ஆவணங்கள் அடங்கிய கோவை ஒன்று அலுவலகத்திற்கு ஒப்படைத்து அவை பரீட்சிக்கப்பட்ட பின்னரே சுற்றுலா அனுமதிக்கக் வழங்கப்படும். இந்தக் கோவையில் ஊடாக அவர்கள் செல்லும் பாதையில் தற்போது பயணிப்பர் என அனுமாணிக்கும் பகுதிகளிலுள்ள போலீஸ் நிலையங்கள் பிரதேச செயலகம் என நீறுவனங்களுக்கு அழைப்பெடுத்து மாணவர்களைத் தேடித்தர கோரிக்கை விடுத்தார்.சில மணி நேரங்களில் ஓர் போலிஸ் நிலையம் அவர்களைக் கண்டுபிடித்து அழைப்பெடுத்துக் கொடுத்தது. அந்தப் பகுதிக்கு தொலைபேசி சிக்னல் கிடைக்காமையே அழைப்பு எடுக்க முடியாமல் போனதறகான காரணம் என அங்கிருந்த பெற்றோருக்கு பதிலளிக்கப்பட்டது.
அரச நிறுவனங்கள் சேவைபெறுவோர்களிடம் அவர்கள் விண்ணப்பிக்கும் பணிகளுக்காக சமர்ப்பிக்குமாறு கோரும் ஆவணங்களின் பயன் குறித்து புரிந்துகொள்ள முடிந்தது. ஏதேனும் பணிகளுக்காக உங்களிடம் ஆவணங்கள் கேட்குமிடத்து அவைகளை முறையாக வழங்கத்தவற வேண்டாம். இக்கட்டான சூழ்நிலைகளில் அது உங்களுக்கு உதவக்கூடும்.

பாடசாலை சுற்றுலா ஒன்றிற்காக அனுமதி பெறுவதற்கு சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்.

  • முன் அனுமதி பெற்றுக்கொள்ளாத நிலையில் அதிபர் கல்விச் சுற்றுலாவை ஏற்பாடுசெய்யக்கூடாது.
  • கல்விச் சுற்றுலாவுக்கான அனுமதி பெறுவதற்கான அதிபரின் கடிதம்
  • சுற்றுலாவின் நோக்கம் விபரிக்கப்படல்
  • நிகழ்ச்சிட்டம் நேர அடிப்படையில்
  • சுற்றுலா செல்கின்ற இடங்களின் வரிபடம்
  • உத்தேச வரவு செலவு விபரம்
  • வகுப்புக்களின் அடிப்படையில் மாணவர்களின் பெயர்ப்பட்டியல்
  • 20 மாணவர்கள் கொண்ட குழுக்கள் அமைத்தல் (ஆண் பெண் வெவ்வேறாக)
  • காப்புறுதி விபரம்
  • பார்வையிடுகின்ற இடங்களிலிருந்து அனுமதி பெறப்பட்ட கடிதங்கள்
  • இரவில் தங்குகின்ற இடங்களில் அனுமதி பெறல் கடிதங்கள்
  • பெற்றோரின் விருப்பம் தெரிவித்தல் கடிதம்.
  • சுற்றுலா முடிவில் பெற்றோரிடம் பிள்ளைகளை ஒப்படைப்பதற்கான திட்டம்.
  • சுற்றுலாவில் பங்குபற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கையொப்பத்துடனான பெயர்ப் பட்டியல்
  • வருடாந்த செயற்திட்டத்தில் சுற்றுலா விபரம் உள்ளடக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதனை நிரூபிப்பதற்கான வருடாந்த செயற்திட்டத்தின் பிரதி
  • பஸ் வண்டி தருவதற்கு விருப்பம் தெரிவிக்கின்ற பஸ் உரிமையாளரின் கடிதம்.
  • பஸ் வண்டிகளின் வருமான அனுமதிப்பத்திரம், காப்புறுதி, ஓட்டுனர் அனுமதிப்பத்திரம், தரச் சான்றிதழ் பிதரிகள்
  • புதிய வாகனமாயின் தரச் சான்றிதழ் இல்லாதவிடத்து அதன் புத்தகத்தின் பிரதி
  • பெண் பிள்ளைகளின் குழுக்களில் ஆசிரியை ஒருவர் உள்ளடக்கப்படவேண்டும். ஆண் பிள்ளைகள் குழுக்களில் ஆசிரியர் ஒருவர் அல்லது ஆசிரியை உள்ளடக்கப்படவேண்டும்.
  • குழுக்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பட்டியில் இடப்பட்டு கையொப்பம் இடவேண்டும்.
  • அனைத்து ஆவணங்களிலும் அதிபர் கையொப்பம் இடவேண்டும்.