ad

நாடலாவிய சேவைகளுக்கான பரீட்சை முறையில் மாற்றம்.

அரசாங்க சேவை ஆணைக்குழு



நாடளாவிய சேவைகளின்‌ பதவிகளுக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு
செய்வதற்கான பொதுப்‌ போட்டிப்‌ பரீட்சையை நடாத்துதல்‌ பற்றிய அறிவித்தல்‌  ஏப்ரல் 2021 


1. இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்‌ - திறந்த பிரிவு,
2. இலங்கை கணக்காளர்‌ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்‌ - திறந்த /மட்டுப்படுத்தப்பட்ட பிரிவு 
3. இலங்கை திட்டமிடல்‌ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்‌ - திறத்த பிரிவு
4. இலங்கை விஞ்ஞான சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்‌ - திறந்த பிரிவு,
5, இலங்கை கட்டிடக்‌ கலைஞர்‌ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்‌ - திறந்த பிரிவு

போன்ற சேவைகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பரீட்சைகள் இனிமேல் கீழ்வருமாறு நடாத்தப்படும் என்பதாக  அரசாங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


அரசாங்க சேவையின் நாடளாவிய சேவைகளுக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கான போட்டிப் பரீச்சைகள் ஒரே போட்டிப் பரீட்கையாக நடாத்தப்படவுள்ளது.  

அதற்கமைவாக இப்‌ பரீட்சையைப்‌ பின்வருமாறு நடாத்துவதற்கு அரசாங்க சேவை. ஆணைக்குழுவினால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌,

1. இப்‌ பரீட்சையானது இரண்டு பகுதிகளைக்‌ கொண்டமைந்ததாகும்‌. அதாவது,
பகுதி 1 - (பொதுப்‌ பகுதி)
பகுதி 2 - (அந்தந்த சேவைகளுக்கென குறித்துரைக்கப்பட்ட பகுதி)

பகுதி 1  :- இப்‌ பகுதியானது அனைத்து நாடளாவிய சேவைகளுக்கும்‌ பொதுவான அடிப்படையில்  பின்வரும்‌ இரண்டு பாடங்களுக்கான 2 வினாப்பத்திரங்களைக்‌ வழங்கப்படும்.

வினாப்பத்திரம்‌ 1 : நுண்ணறிவுப்‌ பரீட்சை
வினாப்பத்திரம்‌ 2 : கிரகித்தல்‌

பகுதி 2 : மேற்குறித்த பகுதி இல்‌ குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பாடங்களுக்கு
மேலதிகமாக அந்தந்த நாடளாலிய சேவைகளுக்குரிய சேவைப்‌ பிரமாணக்‌.
குறிப்புக்களில்‌ குறிப்பிடப்படுகின்ற மேலும்‌ பாடங்கள்‌  குறித்த பாடங்கள்‌ பகுதி 2 இன்‌ கீழ்‌ உள்ளடங்கும்‌. (அந்தப்‌ பாடங்கள்‌ பற்றிய விபரங்கள்‌ விண்ணப்பங்கள்‌ கோரப்படும்‌ சந்தர்ப்பத்தில்‌ குறிப்பிடப்படும்‌.)


அரசாங்க சேவை ஆணைக்குழுவின்‌ ஆலோசனைப்படி பரீட்சை ஆணையாளர்‌ நாயகத்தினால்‌ இப்‌ பரீட்சையானது வருடாந்தம்‌ குறிப்பிட்டதொரு காலப்பகுதியில்‌ நடாத்தப்படும்‌. 

இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (online) மூலமாக கோரப்படும்

விண்ணப்பதாரி தான்‌ தகைமை பெறும்‌ நாடளாவிய சேவைகள்‌ அனைத்திற்கும்‌ ஒரே விண்ணப்பப்படிவத்தின்‌ மூலம்‌ விண்ணப்பிக்கக்‌ கூடிய வாய்ப்பு வழங்கப்படும்‌.

அந்த அடிப்படையில் தான் தகைமை பெறுகின்ற ந்த சேவைகளுக்கென அடையாளமிடும்‌ விருப்பத்‌ தேர்வினை அடையாலமிடலாம்.

விண்ணப்பித்த பின்னர் மாற்றம்‌ செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

இப்‌பரீட்சையானது. கொழும்பிலும்‌ வெளிப்புறப்‌ பிரதேசங்களிலும்‌
சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நடாத்தப்படும்‌. 

பரீட்சைக்கான அனுமதிப்‌ பத்திரங்கள்‌ தபால்‌ மூலம்‌ அனுப்பி வைக்கப்பட மாட்பாது என்பதுடன்‌, பரீட்சார்த்திகள்‌ இணையத்தளம்‌. மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளல்‌ வேண்டும்‌.

 பரீட்சை முறை

பரீட்சையின்‌ பகுதி 1 இற்கு (பொதுப்‌ பகுதி) அனைத்துப்‌ பரீட்சார்த்திகளும்‌ தோற்றுதல்‌ வேண்டும்‌ என்பதுடன்‌, ஒவ்வொரு வீனாப்பத்திரத்திற்கும்‌ 40% அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும்‌, இரண்டு வினாப்பத்திரங்களுக்குமான புள்ளிகளின்‌ கூட்டுத்தொகையாக 100
அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ பரீட்சார்த்திகள்‌ மாத்திரம்‌ பரீட்சையின்‌ பகுதி 2 இற்குத்‌ தோற்றுவதற்குத்‌ தகைமை பெறுவர்‌. 

பரீட்சையின்‌ பகுதி 2 இற்கு. ஒவ்வொரு பாரீட்சார்த்தியும்‌ தகைமை பெற்றுள்ளாரா இல்லையா என்பது குறித்து.ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும்‌ தாம்‌ விண்ணப்பித்துள்ள அனைத்துப்‌ பாடங்களுக்கும்‌ தோற்றக்‌ 
கூடியவாறு பகுதி 2 இற்கான பரீட்சை நேர அட்டவணை தயாரிக்கப்படும்‌.

 நாடலாவிய சேவைகளுக்குத்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ முறை. :-

இப்‌ பரீட்சையின்‌ போது பரீட்சார்த்திகள்‌ அந்தந்த சேவைகளுக்கு அமைவாகப்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ புள்ளிகளை அடிப்படையாகக்‌ கொண்டு  அந்தந்த நாடளாவிய சேவையின்‌ 'சேவைப்‌ பிரமாணக்குறிப்பில்‌ குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேர்ந்தெடுக்கப்படுவர்‌. இதுி குறித்த திருத்தங்கள் சேவைப் பரிமாணக்குறிப்பிப்பில் மேற்கொள்ளப்பாடும். 


ஏனைய சேவைகளுக்கான சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் அந்த சேவைகளுக்குரிய பரீட்சைகளும் இந்த அடிப்பைடயில் நடாத்தப்படும்.