கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள பாடசாலை ஆளணி தொடர்பான சுற்றுநிருபம்.
பாடசாலையில் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மாணவர்களுக்குப் பண்புத்தரமிக்க கல்வியை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காகத் தேவைப்படும் கல்விசார் பணிக்குழுவினரை அனுமதித்தல், பாடசாலையில் இருக்க வேண்டிய கல்விசார் பணிக்குழுவினர் அளவை நிர்ணயித்தல் மற்றும் அதற்குரிய விதிமுறைகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கும் நோக்கில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்படுகிறது. பாடசாலைக்குத் தேவையான கல்விசார் பணிக்குழுவினரை அளவுரீதியாக இனங்கண்ட பின்னர் பற்றாக்குறையாக அல்லது மிகையாகக் காணப்படும் பட்சத்தில் அவற்றை சமநிலைப்படுத்துவதற்கு இதனைப் பயன்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக இதற்கு முன் வெளியிடப்பட்ட 2016 ஜனவரி 07 ஆம் திகதிய 01/2016 இலக்கத்தைக் கொண்ட சுற்றுநிருபத்திற்கு பதிலாக இந்த சுற்றுநிருபம் 2021.05.01 ஆம் திகதி முதல் செல்லுபடியாகின்றது.
சுற்றுநிருபம் | Download |